Thursday, May 16, 2024

Onion Price: பண்டிகை காலத்தில் வெங்காய விலை அதிரடி..!

வெங்காய விலை அதிகரிப்பில் இருந்து நிவாரணம் கொடுக்கும் மத்திய அரசு! 25 ரூபாய்க்கு விற்கும், பஃபர் ஸ்டாக் மூலம் விற்பனை செய்ய முடிவு

by Talks Tamil
0 comment 205 views

வெங்காயத்தின் விலை கிலோ ஒன்றுக்கு 60-70 ரூபாயை எட்டும்.

பண்டிகை காலத்தில் வெங்காய விலை அதிகரிப்பு.

விலையைக் கட்டுப்படுத்த அரசு முன்னேற்பாடு.

நமது அன்றாட உணவில் அங்கமாகிவிட்ட வெங்காயம் அவ்வப்போது விலை உயர்ந்து அனைவரின் கண்களிலும் கண்ணீரை வரவழைக்கிறது. தற்போது வெங்காய விலை உயர்வுக்குப் பிறகு, நுகர்வோருக்கு நிவாரணம் அளிக்கும் வகையில், சில்லறை சந்தைகளில், ‘பஃபர் ஸ்டாக்’ மூலம், ஒரு கிலோவுக்கு, 25 ரூபாய்க்கு சலுகை விலையில், வெங்காயம் விற்பனையை அதிகரிக்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.நவராத்திரி முடிந்த உடனேயே வெங்காயத்தின் விலையில் அதிகரிப்பு தெரியத் தொடங்கிவிட்டது.

15 நாட்களுக்குள் வெங்காயத்தின் விலை 57%க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. வெங்காயத்தின் விலை தற்போது கிலோ 70 ரூபாயை எட்டியுள்ளது. வெங்காயம் விலை உயர்வுக்குப் பிறகு, நுகர்வோருக்கு நிவாரணம் அளிக்கும் வகையில், சில்லறை விற்பனைச் சந்தையில் ஒரு கிலோவுக்கு ரூ.25 சலுகை விலையில், ‘பஃபர் ஸ்டாக்’ மூலம் வெங்காயம் விற்பனையை அதிகரிக்க மத்திய அரசு முடிவு செய்தது.

இது தொடர்பாக, நுகர்வோர் விவகார அமைச்சகம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, வெங்காயத்தின் அகில இந்திய சராசரி சில்லறை விலை வெள்ளிக்கிழமை ஒரு கிலோவுக்கு ரூ.47 ஆக உயர்ந்துள்ளது. வெள்ளிக்கிழமை தேசிய தலைநகரில் வெங்காயத்தின் சில்லறை விலை ஒரு கிலோவுக்கு ரூ.40 ஆக இருந்தது, அதே நேரத்தில் ஒரு வருடத்திற்கு முன்பு இதே காலத்தில் கிலோவுக்கு ரூ.30 ஆக இருந்தது.

நுகர்வோர் விவகார செயலாளர் ரோஹித் குமார் சிங் பிடிஐயிடம் பேசிய போது விலை உயர்வு தொடர்பான விவரங்களை விவரமாக தெரிவித்தார். “ஆகஸ்ட் நடுப்பகுதியில் இருந்து வெங்காயத்தை ‘பஃபர் ஸ்டாக்’ மூலம் வழங்குகிறோம், மேலும் விலை உயர்வைத் தடுக்கவும், நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கவும் சில்லறை விற்பனையை அதிகரித்து வருகிறோம்”  தெரிவித்தார்.

என்று ரோஹித் குமார் சிங் அமைச்சகத்தின் கூற்றுப்படி, விலை கடுமையாக உயரும் மாநிலங்களில், மொத்த மற்றும் சில்லறை சந்தைகளில் ‘பஃபர் ஸ்டாக்’ மூலம் வெங்காயம் வழங்கப்படுகிறது. ஆகஸ்ட் நடுப்பகுதியில் இருந்து, சுமார் 1.7 லட்சம் டன் வெங்காயம் 22 மாநிலங்களில் வெவ்வேறு இடங்களில் பஃபர் ஸ்டாக் மூலம் கொடுக்கப்பட்டது.

வெங்காயம் கிலோ 25 ரூபாய்க்கு அரசு விற்பனை செய்கிறது
சில்லறை சந்தைகளில், இந்திய தேசிய நுகர்வோர் கூட்டுறவு கூட்டமைப்பு (என்.சி.சி.எஃப்) மற்றும் தேசிய வேளாண் கூட்டுறவு விற்பனை ஆகிய இரண்டு கூட்டுறவு அமைப்புகளின் கடைகள் மற்றும் வாகனங்கள் மூலம், ‘பஃபர் ஸ்டாக்கில்’ உள்ள வெங்காயம் ஒரு கிலோவுக்கு 25 ரூபாய் என்ற மானிய விலையில் விற்கப்படுகிறது. டெல்லியிலும் அதே சலுகை விலையில் பஃபர் ஸ்டாக்கில் இருந்து வெங்காயம் விற்கப்படுகிறது.

வெங்காயம் விலை உயர்வுக்கு என்ன காரணம்?

வானிலை தொடர்பான காரணங்களால் காரீஃப் பருவத்தில் வெங்காய சாகுபடி தொடங்குவதில்தாமதம் ஏற்பட்டதால் விளைச்சல் குறைந்து பயிர் வருவதில் தாமதம் ஏற்பட்டதாக அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். புதிய காரீஃப் வெங்காயத்தின் வரத்து இப்போது தொடங்கியிருக்க வேண்டும், ஆனால் அது தாமதமாவதால், வெங்காயத்தின் விலை குறைவதாக அரசு அதிகாரிகள் கூறுகின்றன.

சேமித்து வைக்கப்பட்டுள்ள ரபி பருவத்தின் வெங்காயம் தீர்ந்து போனதாலும், காரீஃப் வெங்காயம் வருவதில் தாமதம் ஏற்பட்டதாலும், மொத்த மற்றும் சில்லறை சந்தைகளில் விலை உயர்ந்து வருவதால் வெங்காய வரத்து நிலைமை மோசமாக உள்ளது.

5 லட்சம் டன் வெங்காயம்
நடப்பு 2023-24 ஆம் ஆண்டில் வெங்காயத்திற்கான ‘பஃபர் ஸ்டாக்கை’ அரசாங்கம் இரட்டிப்பாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இது உள்நாட்டில் வெங்காயத்தின் கிடைக்கும் தன்மையை மேம்படுத்தி, விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தும். 2023-24 நிதியாண்டில், நுகர்வோர் விவகார அமைச்சகம் NCCF மற்றும் NAFED மூலம் 5 லட்சம் டன்கள் ‘பஃபர் ஸ்டாக்’ பராமரித்து, வரும் நாட்களில் கூடுதலாக 2 லட்சம் டன் வெங்காயத்தை வாங்க திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் வெங்காயத்தின் விலை கடுமையாக உயராமல் கட்டுப்படுத்தப்படும்.

Subscribe
Notify of
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x