Friday, May 17, 2024

வெளியான சுவாரஸ்ய தகவல்..! தளபதி 68 ஒரு டைம் ட்ராவல் படமா?!

விஜய் மற்றும் வெங்கட் பிரபு முதன்முறையாக இணைந்துள்ள தளபதி 68 படத்திற்கு மிகப்பிரிய எதிர்பார்ப்பு உள்ளது.

by Talks Tamil
0 comment 186 views

விஜய் மற்றும் வெங்கட் பிரபு முதன்முறையாக இணைந்துள்ள தளபதி 68 படத்திற்கு மிகப்பிரிய எதிர்பார்ப்பு உள்ளது.  ஒரு மாதத்திற்கு முன்பு அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்ட இந்த படத்தின் பூஜை வீடியோ சமீபத்தில் வெளியானது.

வெங்கட் பிரபு இயக்கும் இந்த ‘தளபதி 68’ படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கிறார் என்றும், அவரது ஒரு தோற்றம் இளமையாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.  இதற்காக படக்குழு அமெரிக்காவில் உள்ள ஒரு ஸ்டுடியோவில் அந்த பாத்திரத்திற்காக 3D VFX ஸ்கேன் செய்து பார்த்துள்ளனர்.

சமீபத்திய வெளியான தகவலின் படி, ‘தளபதி 68’ ஒரு டைம் ட்ராவல் படமாக இருக்கும் என்றும், மேலும் படத்தில் விஜய் பல காலகட்டங்களில் பயணிப்பதை பார்க்கலாம் என்றும் கூறப்படுகிறது. எனவே, இது விஜய்யின் கரியரில் ஒரு புது படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

நடிகர் விஜய் நடிக்கும் 68 வது படம் தளபதி 68 பட்டித் தொட்டி எங்கும் ட்ரெண்டிங் ஆகி கொண்டிருக்கின்றது. இப்படத்தில் விஜயுடன் பிரபுதேவா பிரசாந்த் ஆகியோர்  நடிக்கின்றனர்.

படப் பூஜைகள் ஆரம்பம் ஆகிவிட்டது லியோ வெற்றி கோஷம் அடங்கும் முன்பு தளபதி 68 விஜய் ரசிகர்களுக்கு எக்ஸ்ட்ரா அப்டேட் என்றே சொல்ல வேண்டும். தளபதி 68 படத்தை இயக்கப் போவது வெங்கட் பிரபு என்ற தகவல் நமக்கு முன்பே தெரியும்.

அவருடன் இணைந்து விஜயுடன் தளபதி 68 படத்தில் பிரஷாந்த் இணைந்து நடிக்க இருக்கிறார். படப் பூஜையில் அவர் பங்கேற்று இருக்கிறார். 90களில் ஆரம்பத்தில் பிரசாந்த் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இப்படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையமைக்க இருக்கின்றார் மற்றும் விஜய்யுடன் இணைந்து நடிக்க ஒரு பெரும் பட்டாளமே இருக்கின்றது.

Subscribe
Notify of
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x