Wednesday, May 15, 2024

லியோ படத்திற்கு 2 பாகங்கள்… இந்த படம் தான் விக்ரம் 2..?!

by Talks Tamil
0 comment 247 views

Leo Part 2: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் லியோ திரைப்படம் மொத்தம் இரண்டு பாகங்களை கொண்டது என தகவல்கள் வெளியாகியுள்ளன. 

லியோ திரைப்படம் LCU-வில் உள்ளதா என ஏற்கெனவே கேள்வி உள்ளது. தற்போது, லியோ 2 தான் விக்ரம் 2 திரைபடமா என்ற கேள்வியும் வருகிறது. இருப்பினும், இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் இல்லை.

தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்தரமான விஜய் நடிப்பில் தற்போது உருவாகி வரும் லியோ படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது. பீஸ்ட், வாரிசு என கலவையான விமர்சனங்களை கடந்த இரண்டு படமும் எதிர்கொண்ட நிலையில், லியோவில் அதனை மொத்தமாக மறக்கவைத்து, புதிய சாதனை படைக்கும் முனைப்பில் விஜய் மற்றும் படக்குழு இருப்பது அதன் தயாரிப்பிலும், ஒவ்வொரு அப்டேட்டிலும் நாம் காண முடியும்.

விஜயை வைத்து மாஸ்டர் படத்தை எடுத்து நல்ல ஹிட் கொடுத்த லோகேஷ் கனகராஜ் விக்ரம் படத்தின் வேற லெவல் ஹிட்டால் தற்போது மோஸ்ட வாண்டட் இயக்குநராக மாறிவிட்டார். அந்த அளவிற்கு அவர் உச்சத்திற்கு சென்றுவிட்டதால், தானாகவே அவர் மீதும் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது எனலாம். விஜய், லோகேஷ் கனகராஜ் ஆகியோரின் காம்போவை இணைக்கும் முக்கிய கண்ணியான இசையமைப்பாளர் அனிருத், இதிலும் அவரின் கைவரிசையை காட்டியுள்ளார் எனலாம். லியோ டைட்டில் அறிவிப்பு வீடியோ முதல் கடைசியாக வெளியான சஞ்சய் தத் கதாபாத்திர அறிமுக வீடியோ வரை இசையில் மிரட்டி வருகிறார். ‘நான் ரெடி’ பாடல் மூலம் இப்போதே படத்தை Vibe-ஐ மக்களிடத்தில் தக்கவைத்துவிட்டார் எனலாம்.

புது அப்டேட்

இப்படி லியோ படத்தின் ரிலீஸை எதிர்பார்த்து காத்திருக்கும் ரசிகர்களுக்கு புது அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதவும் அனைவரும் ஆச்சர்யப்படும் வகையில் அமைத்திருப்பது தான் குறிப்பிடத்தக்க ஒன்று. அதாவது, தற்போது உருவாகி வரும் லியோ திரைப்படத்திற்கு இரண்டு பாகங்கள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன.

அப்போ லியா LCU-ஆ?

ஏற்கெனவே, லியோ Lokesh Cinematic Universe (LCU)-ல் வருமா என ரசிகர்கள் கேள்வியெழுப்பி வந்த நிலையில், இந்த தகவல் மேலும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. கைதி, விக்ரம் ஆகியவற்றுடன் லியோவுக்கும் நிச்சயம் தொடர்பிருக்கும் என இந்த தகவல் உறுதிப்படுத்தியுள்ளது. இருப்பினும், இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் இல்லை என்பதால், அதனை உறுதிப்படுத்த இயலாது. ஏற்கெனவே, லோகேஷ் கனகராஜ் லியோ படத்திற்கு பின் இரண்டு படங்களை முடித்துவிட்டு, அதன்பின் தான் கைதி 2 படத்தை இயக்க இருப்பதாக முன்னர் கூறியிருந்தார். மேலும், விஜய்க்கும் அடுத்த வெங்கட் பிரபுவின் ஒரு படம் மற்றும் அடுத்த ஒரு படத்தின் பேச்சுவார்த்தை போய்கொண்டிருப்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

ஒரே படத்தில் இத்தனை ஸ்டார்களா…?

அப்படி பார்த்தோமானால், லியோவின் இரண்டாம் பாகம் வெளியானால், அது 2025-2026ஆம் ஆண்டு காலகட்டத்தில் தான் என்றும் கூறப்படுகிறது. குறிப்பாக, லியோ, கைதி 2 ஆகியவற்றின் வரவேற்பை வைத்தே லியோ 2 குறித்த அடுத்த நகர்வுக்கு லோகேஷ் தயாராவார் எனவும் கூறப்படுகிறது. லியோ 2 படம் தான் ஏறத்தாழ விக்ரம் படத்தின் இரண்டாம் பாகமாகவும் இருக்கும் எனவும் தகவல்கள் கூறுகின்றன. அப்படி பார்த்தால், கமல், விஜய், சூர்யா, கார்த்தி, விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில் ஆகியோர் ஒரே படத்தில் தோன்ற வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்தியன் 2, சந்திரமுகி 2 என பெரும் வெற்றிபெற்ற படங்களின் இரண்டாம் பாக படங்கள் தற்போது தயாராகி வருகின்றன. இத்திரைப்படங்கள் மேலும் வெற்றி பெறும்பட்சத்தில், தமிழ் சினிமாவில் இந்த இரண்டாம் பாக டிரெண்ட் மேலும் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.

Subscribe
Notify of
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x