மக்கள் செல்வன் விஜய்சேதுபதியின் வள்ளலார் வேலை வாய்ப்பு சேவை இயக்கம் இணைந்து மருத்துவ முகாம் மற்றும் இரத்ததான முகாம் ஆகியவற்றை நடத்தியது.
மக்கள் செல்வன் விஜய்சேதுபதி தனது ( VVVSI ) வள்ளலார் வேலை வாய்ப்பு சேவை இயக்கம் மூலம் வேலை வாய்ப்பு, சுயதொழில் வழிகாட்டுதல், கல்வி உதவி, மருத்துவ உதவி, கல்லூரி மாணவர்களுக்கு வாழ்க்கை வழிகாட்டுதல், பேரிடர் உதவிகளை கடந்த 8 ஆண்டுகளாக செய்து வருகிறது.
விஜய்சேதுபதியின் மருத்துவ உதவி திட்டத்தின் கீழ் விஜய்சேதுபதியின் வள்ளலார் வேலை வாய்ப்பு சேவை இயக்கம், NURSING STATION HOME NURSING PRIVATE LIMITED மற்றும் AMPHENOL OMNICONNECT INDIA PVT LTD இணைந்து 20-மார்ச் மற்றும் 21- மார்ச் ஆகிய இரண்டு நாட்கள் மருத்துவ முகாம் மற்றும் இரத்ததான முகாம் செங்கல்பட்டு மாவட்டம், மறைமலை நகர்பகுதியில் நடைபெற்றது.
மேலும் இந்த முகாமில் சென்னை இந்திராகாந்தி அரசு குழந்தைகள் மருத்துவமனை மற்றும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனை இரத்த வங்கிகளும் பங்கு பெற்றது , அதன் மூலம் இரத்ததான உதவியானது பொது மக்கள் பயன் பெரும் வகையில் சிறப்பாக நடைபெற்றது.
இந்த முகாமில் பங்கு பெற்று தன்னை இணைத்து கொண்டு குருதி கொடை அளித்த கொடையாளர்கள் , தன்னார்வலர்களுக்கும் & மற்ற உதவியை செய்தவர்களுக்கும் விஜய்சேதுபதியின் வள்ளலார் வேலை வாய்ப்பு சேவை இயக்கம், AMPHENOL OMNICONNECT INDIA PVT LTD மற்றும் NURSING STATION HOME NURSING PRIVATE LIMITED ஆகியோர் இணைந்து நன்றியை தெரிவித்து கொண்டனர்.