Saturday, May 18, 2024

தளபதி விஜய் பயிலகம்… காமராஜர் பிறந்தநாளில் நிர்வாகிகளுக்கு விஜய் கட்டளை!

by Talks Tamil
0 comment 297 views

Thalapathy Vijay Payilagam: முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் பிறந்தநாளை முன்னிட்டு அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அவரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவிக்க விஜய் மக்கள் இயக்கம் அதன் நிர்வாகிகளுக்கு தெரிவித்துள்ளது.

விரைவில் அனைத்து தொகுதிகளிலும் தளபதி விஜய் பயிலகம். மாணவ – மாணவியருக்கு நோட்டு, புத்தகம் வழங்கவும் கேட்டுக்கொள்ளப்பட்டது. கடந்த செவ்வாய்கிழமை (ஜூலை 11) இயக்க நிர்வாகிகளை சந்தித்தார்.

Thalapathy Vijay Payilagam: நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம், விஜய் சார்பாக மக்களுக்கு உதவிகள் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த இயக்கத்திற்கு மாவட்ட வாரியாக நிர்வாகிகளும் ஏற்கெனவே நியமிக்கப்பட்டனர். சமீபத்தில் 10, 12ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகை வழங்கும் விழா விஜய் மக்கள் இயக்கம் சார்ப்பில் நடைப்பெற்றது.

இதில், 1600க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். இந்த விழா, பல அரசியல் பிரமுகர்களால் விமர்சிக்கப்பட்டாலும் மக்களிடையே விஜய்க்கு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது எனலாம். இதையடுத்து, நடிகர் விஜய், மக்கள் இயக்க நிர்வாகிகளை கடந்த செவ்வாய்கிழமை (ஜூலை 11) சந்தித்தார்.

அதில், பல்வேறு விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்பட்டாலும் நடிகர் விஜய்யின் அரசியல் வருகை குறித்த சந்தேகங்களும் எழுந்தன. அந்த கூட்டத்தில் மாவட்ட வாரியாக முக்கிய பொறுப்பில் இருக்கும் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டவர்களின் செல்போன்கள் மற்றும் டிஜிட்டல் சாதனங்கள் வாசலிலேயே வாங்கி வைக்கப்பட்டதாக சொல்லப்பட்டது. இதையடுத்து, சுமார் 1 மணி நேரத்திற்கும் மேல் இந்த ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது. இதில், மாணவர்களுக்கான இரவு பாடசாலை உள்பட பல்வேறு விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.

இந்நிலையில், அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் அதன் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் நேற்று (ஜூலை 13) செய்திகுறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், நடிகர் விஜய்யின்‌ பரிந்துரையின் பேரில் வரும்‌ ஜூலை 15ஆம்‌ தேதி (நாளை) முதல் முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழ்நாடு முழுவதிலும்‌ உள்ள அவரின்‌ திருஉருவ சிலைகளுக்கு மலர்‌ மாலை அணிவித்து மரியாதை செலுத்துமாறு மக்கள்‌ இயக்க நிர்வாகிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி அன்று‌ மாணவ, மாணவிகளுக்கு நோட்டு, புத்தகம்‌, பேனா, பென்சில்‌ வழங்குதல்‌ போன்ற நலத்திட்ட உதவிகளை தங்களால்‌ இயன்ற அளவில்‌ செய்து சிறப்பிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.  மேலும்‌ தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் காமராஜரை போற்றும்‌ வகையில்‌ தமிழ்நாட்டில்‌ உள்ள அனைத்து தொகுதிகளிலும்‌ ‘தளபதி விஜய்‌ பயிலகம்’ ஆரம்பிக்கப்பட உள்ளது என்பதை அறிவித்துள்ளனர்.

தான் அரசியலுக்கு வந்தால் சினிமாவில் நடிக்க மாட்டேன் என நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டத்தில் நடிகர் விஜய் கூறியதாக தகவல்கள் பரவின. தற்போது நடிகர் விஜய், லோகேஷ் கனகராஜ் இயக்கும் லியோ படத்தில் நடித்துள்ளார். படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், போஸ்ட் புரோடக்ஷன் வேலைகள் விரைவில் தொடங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. லியோ திரைப்படம் வரும் அக். 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

லியோ படத்திற்கு பின் விஜய் தனது 68ஆவது படத்தில் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க உள்ளார். யுவன் சங்கர் ராஜா இப்படத்தில் இசையமைக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என தெரிகிறது. இதன்பின்னர், நடிகர் விஜய் அட்லீ அல்லது இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் நடிக்க இருப்பதாகவும், அவரின் 70ஆவது படத்திற்கு பின் சினிமாவில் சில காலம் ஓய்வெடுத்து, அரசியலில் கவனம் செலுத்த உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. வரவிருக்கும் லியோ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஜய் தனது அரசியல் வருகை குறித்து மேலும் கருத்து தெரிவிக்கலாம் என கூறப்படுகிறது.

Subscribe
Notify of
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x