Saturday, May 25, 2024

UN About Kailasa: நித்தியை வச்சு செஞ்ச ஐநா… கைவிடப்ட்ட கைலாசா!

by Talks Tamil
0 comment 285 views

UN  About Kailasa: ஜெனீவாவின் ஐக்கிய நாடுகள் சபையில் நித்யானந்தாவில் சார்பில் தெரிவிக்கப்பட்ட கருத்துகள் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படாது என ஐக்கிய நாடுகள் அமைப்பு அறிவித்துள்ளது.

United Nations About Nithyanandha’s Kailasa: பாலியல் வன்புணர்வு மற்றும் கடத்தல் குற்றச்சாட்டுகள் உள்ள நித்யானந்தா, இந்திய காவல்துறையிடம் இருந்து தலைமறைவாக உள்ளார். அவர் 2019ஆம் ஆண்டு நாட்டை விட்டு வெளியேறினார் என கூறப்படுகிறது. பின்னர், அவர் “கைலாச தேசம்” என்று அழைக்கப்படுவதை பகுதியை நிறுவினார். இது மத்திய அமெரிக்காவின் பசிபிக் கடற்கரையில் உள்ள ஒரு தீவில் அமைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

காவல் துறையிடம் இருந்து தப்பியோடிய நித்யானந்தா, கைலாச தேசத்தில் இந்துக்களை பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறுகிறார். இதைத்தொடர்ந்து, ஜெனீவாவின் ஐ.நா. பொதுமன்றத்தில், நித்யானந்தாவின் கைலாசா தேசத்தில் இருந்து உறுப்பினர் ஒருவர் வந்து உரையாற்றியிருந்தார். அவரின் உரை பரவலாக பேசப்பட்ட நிலையில், ஐக்கிய நாடுகள் சபை அதுகுறித்து விளக்கம் அளித்துள்ளது.

“பொது விவாதங்கள் என்பது, நேரில் பங்கேற்க மற்றும்/அல்லது எழுத்துப்பூர்வ சமர்ப்பிப்புகளை வழங்க ஆர்வமுள்ள எவருக்கும் திறந்திருக்கும் பொதுக் கூட்டம் ஆகும். ஒரு பொது விவாதத்தின் நோக்கம், அந்தந்த குழுக்களின் சுயாதீன நிபுணர்கள் கேள்விகளுக்கு பதிலளிக்கவும், பல்வேறு பங்குதாரர்களின் கருத்துக்களைக் கேட்கவும் அனுமதிப்பதாகும். ஒரு பொதுக் கருத்தின் வரைவு, இது குறிப்பிட்ட பிரச்சினைகள் அல்லது கருப்பொருள்கள் மீதான தங்கள் கடமைகளை நிறைவேற்றுவதில் அரசுகளுக்கு உதவுவதற்கான வழிகாட்டியாகும்

பெண்களுக்கு எதிரான பாகுபாடு ஒழிப்புக் குழுவில் (CEDAW) அவர்கள் எழுதிய எழுத்துப்பூர்வ சமர்ப்பிப்பு பொது விவாதத்தின் தலைப்புக்கு பொருத்தமற்றது என்பதால் அது வெளியிடப்படாது” என்று ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் உயர் ஆணையர் அலுவலகம் கைலாசா குறித்து தெரிவித்துள்ளது.

ஐ.நா.வுக்கான “கைலாசத்தின் நிரந்தர தூதர்” என்று கூறிய விஜயபிரியா, நித்யானந்தா கூறிய கருத்துகள் கூட கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூட்டத்தில், பொதுமக்களுக்கான நேரத்தின்போது இத்தகைய கருத்துகள் தெரிவிக்கப்பட்டதாக நித்யானந்தாவின் கைலாசாவை புறந்தள்ளி, ஐ.நா அமைப்பு கருத்து தெரிவித்துள்ளது.

ஐ.நா.வில் கைலாசா பிரதிநிதி

பிப்ரவரி 24 அன்று பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார உரிமைகளுக்கான குழு (CESCR) நடத்திய நிலையான மேம்பாடு குறித்த பொது விவாதத்தில் “அமெரிக்காவில் உள்ள கைலாசா (USK) மாநிலத்தை சேர்ந்தவர்கள்” என்று கூறிக்கொண்டு பொதுமக்களுக்கு என அறிவிக்கப்பட்ட இடத்தில், அந்த அமர்வின் போது இருவர் பேசினர்.

தலைப்பாகை, நெற்றியில் ஆபரணம் மற்றும் கழுத்தணி அணிந்த ஒரு பெண், தன்னை ஐ.நாவுக்கான USK பிரதிநிதி விஜயப்ரியா நித்யானந்தா என்று அறிமுகப்படுத்திக் கொண்டார்.

“இந்து மதத்தின் உச்ச மடாதிபதி” நித்யானந்தாவின் கீழ், “கைலாசா பழங்கால இந்துக் கொள்கைகளையும், காலத்தால் சோதிக்கப்பட்ட இந்துக் கொள்கைகளுடன் இணைந்த சுதேச தீர்வுகளையும் நிலையான வளர்ச்சிக்காக செயல்படுத்தி வருகிறது” என்று அவர் கூறினார். விஜயப்ரியா நித்யானந்தா தனது உரையின் போது, நித்யானந்தாவால் நிறுவப்பட்ட ஹிந்துக்களுக்கான முதல் இறையாண்மை கொண்ட அமெரிக்கா கைலாச அரசு என்று கூறினார்.

 

Subscribe
Notify of
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x