Wednesday, May 15, 2024

ஈறுகளை பலப்படுத்த வழிகள்..! மருந்தே இல்லாமல் ஈறுகளில் இரத்தப்போக்கை குணப்படுத்தலாம்..!

Dental Care Tips: ஈறுகளில் இரத்தப்போக்கா? பற்களில் ஏற்படும் பற்குழிவுகளால் அவதிப்படுபவர்களுக்கு மிகவும் சுலபமான நோய் தீர்க்கும் வழிகள்

by Talks Tamil
0 comment 111 views

ஈறுகளில் இரத்தப்போக்கா?

பற்குழிவுகளால் அவதியா?

நோய் தீர்க்கும் சுலபமான வழிகள்.

பல் சுகாதார பராமரிப்பு: இனிப்பு சுவை அனைவருக்கும் பிடித்தமானது, மனதில் மகிழ்ச்சியைத் தூண்டும் இனிப்பு பொருட்களை பிடிக்காதவர்களின் எண்ணிக்கை குறைவு. பெரும்பாலான மக்களுக்கு உணவுக்குப் பின் இனிப்பு உண்பதில் அதிக விருப்பம் இருக்கும், அதிலும் குறிப்பாக இரவு உணவிற்குப் பிறகு இனிப்பு சாப்பிடுவது என்பது பலரின் தவிர்க்க முடியாத பழக்கம் ஆகும். அதேபோல, குழந்தைகளுக்கு சாக்லேட், ஐஸ்க்ரீம் என இனிப்ப விரும்ப வைக்க பல உணவுப்பொருட்கள் உள்ளன.

அதிலும் பண்டிகைக் காலங்களில் இனிப்புகள் உண்பது அதிகரிப்பதில் ஆச்சரியமில்லை. அதிலும் தீபாவளி, நவராத்திரி போன்ற பண்டிகைக்காலங்களில் இந்தியாவில் ஒட்டுமொத்த சர்க்கரை பயன்பாடு என்பது, மற்ற சமயத்தைவிட பல மடங்கு அதிகரிக்கிறது. தேவைக்கு அதிகமாக தின்பண்டங்கள் வீட்டில் இருந்தால், கையும் வாயும் சும்மா இருக்குமா?

ஆரோக்கியத்தை பதம் பார்க்கும் பல் வலி பிரச்சனை, இங்குக்தான் தொடங்குகிறது: அதிக அளவில் இனிப்பு உண்பதால், பற்களில் சேதம் ஏற்படுவதுடன், பல்வேறு வியாதிகளும் உடலில் வந்து சேர்கின்றன.

சர்க்கரை நுகர்வும் பல் ஆரோக்கியமும்

உலகிலேயே அதிக சர்க்கரை சாப்பிடுபவர்கள் இந்தியர்கள், அதற்கு காரணம் நமது பண்டிகைகளும், அதற்கான விருந்தோம்பலும் தான். துரதிர்ஷ்டவசமாக, இந்த இனிப்புகளே ஆரோக்கியத்தில் இந்தியர்களின் அக்கறையின்மையைக் காட்டுகிறது. தோராயமாக 85% முதல் 90% பெரியவர்கள் மற்றும் 60 முதல் 80% குழந்தைகள் பற்சிதைவு, பற்களில் குழி போன்ற பிரச்சனைகளால் பாதிக்கப்படுகின்றனர். இரவு நேரத்தில் பல் துலக்குவதில் காட்டும் அலட்சியமே இதற்குக் காரணம் என்று கூறலாம்.

அதேபோல, பல் மருத்துவரை சந்திக்க இருக்கும் தயக்கமும், பல் பிரச்சனைகளை அதிகரிக்கின்றன. சரி, வீட்டிலேயே பல் ஆரோக்கியத்தை பராமரிப்பதில் அக்கறை காட்டினால் ஆரோக்கியம் மேம்படும்.

ஆரோக்கியமான பற்களை விரும்புவர்கள் இனிப்புகளை தவிர்த்தே ஆக வேண்டும் என்று எந்தவித அவசியமும் கிடையாது, பற்களை பராமரிப்பதில் கூடுதல் கவனிப்பு இருந்தால் போதும். இதில் முக்கியமானது இரவில் பல் துலக்குவது.

குழிவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை குறைக்கிறது
நாள் முழுவதும் நாம் உண்ணும் உணவுகளால் பற்களில் குவிந்துள்ள பிளேக் மற்றும் பாக்டீரியாக்களை நீக்க, இரவில் பற்களை பிரஷ் செய்வது அவசியம் ஆகும். இரவில் பல் துலக்குவதால், பற்களில் ஓட்டை ஏற்படும் வாய்ப்புகளை 50% வரை குறைக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா?

ஈறு பிரச்சனைகளைப் போக்க பல் துலக்குவது அவசியம் என்பதை புரிந்துக் கொண்டால் பல பல் பிரச்சனைகள் வரவே வராது. பிளேக் மற்றும் பாக்டீரியா உருவாக்கம் ஈறு நோய்கள் ஏற்படுவதைத் தடுக்க, இரவில் படுக்கைக்கு செல்லும் முன் பல் துலக்க வேண்டும்.

ஸ்வீட் சாப்பிட சரியான நேரம்

இனிப்பு உட்கொள்ளலுக்கான நேரத்தை ஒதுக்குங்கள்: ஒரே நேரத்தில் இனிப்புகளில் ஈடுபடுவதற்குப் பதிலாக, அவ்வப்போது கொஞ்சம் உண்ணுங்கள். இது உங்கள் பற்கள் சர்க்கரையுடன் வெளிப்படும் நேரத்தைக் குறைக்க உதவும், துவாரங்களின் அபாயத்தைக் குறைக்கும்.

தண்ணீர் பருகுவது

தண்ணீர் குடிப்பது உங்களை நீரேற்றமாக வைத்திருக்க உதவுவதுடன், பல் சிதைவை ஏற்படுத்தும் அமிலங்கள் வாயில் உருவானாலும், அவற்றை நீர்த்து போகச் செய்யும்.

வழக்கமான பல் பரிசோதனைகள்

வழக்கமான பரிசோதனைகள் மற்றும் அவ்வப்போது பற்களை சுத்தம் செய்ய பல் மருத்துவரை சந்திக்கவும். உங்கள் பல் மருத்துவர் பல் சிதைவின் ஆரம்ப அறிகுறிகளைக் கண்டறிந்து நல்ல வாய் ஆரோக்கியத்தை எவ்வாறு பராமரிப்பது என்பதற்கான வழிகாட்டுதலை வழங்குவார்.இரவில் துலக்கும் எளிய பழக்கத்தை கடைப்பிடித்து, உங்கள் பற்களை பாதுகாக்கவும்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். Tamilan Talks இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)

Subscribe
Notify of
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x