Thursday, May 16, 2024

‘2027இல் யாருமே இல்லை… மனிதகுலமே அழிந்துவிட்டது’ – டைம் டிராவலர்கள் சொல்லும் கதை!

by Talks Tamil
0 comment 288 views

2027ஆம் ஆண்டு மனித இனமே அழிந்துவிட்டதாகவும், தாங்கள் மட்டும் மிஞ்சியிருப்பதாகவும் ஒரு தம்பதி டிக்டாக்கில் தொடர்ந்து வீடியோ வெளியிட்டு வருகின்றனர்.

உலகெங்கிலும் உள்ள அனைத்து தரப்பு மக்களும் தங்கள் எதிர்காலம் அறிய ஆர்வமாக உள்ளனர். குறிப்பாக பிரபல ஜோதிடர்களின் கணிப்புகள் வரும்போது, பாபா வங்கா, நாஸ்ட்ராடாமஸ் போன்ற இரண்டு பிரபலமான முன்னறிவிப்பாளர்கள் தங்கள் தீர்க்கதரிசனங்களுக்கு பெயர் பெற்றவர்கள். அவர்களின் பெரும்பாலான கணிப்புகள் துல்லியமானதாக இருக்கும் என்று பலரும் நினைக்கின்றனர்.

“பால்கனின் நாஸ்ட்ராடாமஸ்” என்று அழைக்கப்படும் பாபா வாங்கா, செர்னோபில் அணுசக்தி பேரழிவு, இளவரசி டயானாவின் மறைவு மற்றும் சோவியத் ஒன்றியத்தின் சரிவு உள்ளிட்ட துல்லியமான தீர்க்கதரிசனங்களுக்காக நன்கு அறியப்பட்டவர். இந்நிலையில் அவரை போன்றே ஒரு தம்பதி தற்போது இணையத்தை அச்சுறுத்தி வருகின்றனர்.

இரண்டு டைம் டிராவலர்கள் 2027ஆம் ஆண்டிலிருந்து வருவதாகக் கூறி, எதிர்காலத்தில் தாங்கள் தனியாக இருப்பதை நிரூபிக்கும் வகையில் வீடியோக்களைப் பகிர்ந்து வருகின்றனர். எல்லா மனிதர்களும் அழிந்தவிட்ட உலகம் குறித்து அவர்கள் அந்த வீடியோவில் பேசுகிறார்கள். அவர்கள் 2027ஆம் ஆண்டில் இருந்து வந்த அந்த ஜோடி, தங்களை டைம் டிராவலர்கள் என்று கூறுகிறார்கள். சமூக வலைதளங்களில் தாங்கள் தனியாக இருப்பதைக் காட்டும் வீடியோக்களையும் பகிர்ந்துள்ளனர்.

இந்த ஜோடி தாங்கள் எதிர்காலத்தில் வாழ்வதாகவும், அதை நிரூபிக்கும் காட்சிகள் தங்களிடம் இருப்பதாகவும் கூறி இணையத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர். டிக்டாக்கர்களான ஜேவியர் மற்றும் மரியா எதிர்காலத்தில் தனியாக மாட்டிக்கொண்டதாகக் கூறுகிறார்கள். ஆனால், அதிர்ஷ்டவசமாக, ஒருவருக்கொருவர் துணையாக வாழ்ந்து வருவதாக கூறுகின்றனர். விஞ்ஞானி என்று கூறிக்கொள்ளும் மரியா, @socmia என்ற டிக்டாக் ஐடியை பயன்படுத்தி டிக்டாக்கில் ‘எதிர்கால’ வீடியோக்களை வெளியிடுகிறார். “நேரம் ஒரு மாயை” என்று அவரது ஐடியின் முகப்பு பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இருவரும் இதுவரை தங்களின் முகங்களை வெளிப்படுத்தியதில்லை. ஜேவியர் மற்றும் மரியா தனியாக இருக்கிறார்கள் என்று கூறுகிறார்கள். அவர்களின் வினோதமான வீடியோக்கள் பூமியில் மனிதர்கள் எஞ்சியிருக்கவில்லை என்பதற்கான காட்டுவதாக உள்ளது (குறைந்தபட்சம் அவர்களைப் பொறுத்தவரை). அவர்கள் வெறிச்சோடிய பகுதிகளில் மனிதர்கள் வாழ்வதற்கான தடயங்களே இல்லாமல் இருப்பதாகத் தெரிகிறது. பார்வையாளர்கள் அங்குள்ள நகரத்தை ஸ்பெயினில் உள்ள வலென்சியா என்று அடையாளம் கண்டுள்ளனர்.

ஒரு வீடியோவில், மரியா தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு ஜேவியர் எப்படி தனக்கு தெரியும் என்பதை விளக்குகிறார். அதில்,”வணக்கம், நான் மரியா. நான் ஜேவியரின் அதே திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கிறேன் (யூனிகோசோப்ரெவிவியன்ட்). நான் வீடியோவில் ஏன் பேசுகிறேன் என்றால், நான் வாழ்ந்த அனைத்தையும் நான் இன்னும் செயலாக்கி வருகிறேன். மேலும் ஒரு தீர்வைக் கண்டுபிடிக்க முயற்சிக்கிறேன். நான் இன்னும் புரிந்து கொள்ள நிறைய இருக்கிறது. ஆனால் தற்போதைய சூழ்நிலையை மாற்ற முடிவு செய்துள்ளேன்” என்றார்.

பேய் நகரம்

கடந்த காலத்தில், ஜேவியர் கைவிடப்பட்ட நகரத்தில் ஒரு ரகசிய பாதையின் காட்சிகளையும், அமானுஷ்ய நகரமாக மாறிய ஷாப்பிங் ஏரியாவின் வீடியோக்களையும் பகிர்ந்துள்ளார். சமீபத்தில் சமூக ஊடகங்களில் பின்தொடர்பவரால் சவால் விடுக்கப்பட்டதை அடுத்து, ஜேவியர் இதனை செய்ததாக கூறப்படுகிரது.

ஸ்பெயின் நகரின் பார்சிலோனா, மாட்ரிட் மற்றும் செவில்லி போன்ற அனைத்து முக்கிய நகரங்களுக்கும் தாங்கள் பயணம் செய்ததாக தம்பதியினர் கூறுகிறார்கள். ஆனால் அங்கு ஒருவர் கூட வசிக்கவில்லை என கூறுகின்றனர். அதாவது மனித வாழ்வு மொத்தமாக அழிந்துவிட்டது என்கிறார்கள் அந்த தம்பதிகள். ஆனால் மனிதர்கள் எப்படி அழிந்தார்கள், எப்படி உயிர் பிழைத்தார்கள் என்பதை வெளிப்படுத்த வேண்டும் என அவர்களை பின்தொடர்பவர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

(குறிப்பு: Tamilan Talks  இவர்களுடைய கூற்றுகளின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தவில்லை. எந்த மூடநம்பிக்கையையும் ஊக்குவிப்பதில் நாங்கள் ஆதரவாகவும் இல்லை.)

Subscribe
Notify of
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x