Thursday, May 30, 2024

Flipkart Electronics Sale: வெறும் ரூ. 549-க்கு அசத்தலான Realme C33 2023-ஐ வாங்குவது எப்படி?

by Talks Tamil
0 comment 268 views

Flipkart Electronics Sale: Realme C33 2023 அதன் அசல் விலையை விட மிகக் குறைவாகக் கிடைக்கிறது. குறைந்த விலையில் இந்த போனை எங்கு எப்படி வாங்குவது? இதை பற்றி இந்த பதிவில் காணலாம். 

Realme C33 2023 Price Discount & Offers: ஸ்மார்ட்போன் பிரியர்களுக்கு ஒரு நல்ல செய்தி. ரியல்மீ சி33 2023 (Realme C33 2023) ஸ்மார்ட்போன் 15 ஆயிரத்துக்கும் குறைவான பட்ஜெட்டில் கிடைக்கிறது. இதை நீங்கள் பல வித சலுகைகள் மூலம் இன்னும் மலிவாக வாங்கலாம். இந்த ஃபோனின் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி சேமிப்பு மாறுபாடு அதன் அசல் விலையை விட மிகக் குறைவாகக் கிடைக்கிறது. குறைந்த விலையில் இந்த போனை எங்கு எப்படி வாங்குவது? இதை பற்றி இந்த பதிவில் காணலாம்.

Flipkart Electronics Sale 2023

ரியல்மீ சி33 2023 ஸ்மார்ட்போன் அசல் விலையை விட மிகக் குறைவான விலையில் மாணவர் டீல்களின் (ஸ்டூடண்ட் டீல்) கீழ் விற்கப்படுகிறது. பிளிப்கார்ட்டில், பிளிப்கார்ட் எலக்ட்ரானிக்ஸ் விற்பனை 2023 (Flipkart Electronics Sale 2023) மே 23 முதல் தொடங்கியுள்ளது. இது மே 29, 2023 வரை தொடரும். இந்த விற்பனையில், ரியல்மீ சி33 2023 இன் 4ஜிபி + 64ஜிபி மாறுபாடு ரூ.12,999 -க்கு பதிலாக வெறும் ரூ.9,999 -க்கு பட்டியலிடப்பட்டுள்ளது.

Realme C33 2023: வங்கிச் சலுகை

வங்கிச் சலுகையின் கீழ், ரியல்மீ சி33 2023 ஸ்மார்ட்போனின் விலையில் தள்ளுபடியைப் பெறலாம். பிளிப்கார்ட் ஆக்சில் பேங்க் (Flipkart Axis Bank) கார்டு மூலம் 5 சதவீதம் வரை தள்ளுபடி பெறலாம். இது தவிர, வாடிக்கையாளர்கள் HDFC கார்டைப் பயன்படுத்தினால், மொபைல் போனின் விலையில் மேலும் 1000 ரூபாய் தள்ளுபடியைப் பெற முடியும். இது மட்டுமின்றி, சிறப்பு விலைத் தள்ளுபடியின் கீழ், வாடிக்கையாளர்கள் ரூ. 3000 தள்ளுபடி அல்லது கூப்பன் தள்ளுபடியைப் பெறலாம்.

Realme C33 2023: எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்

ரியல்மீ சி33 2023 போனின் விலையில் வாடிக்கையாளர்கள் அதிக தள்ளுபடியைப் பெற விரும்பினால், நீங்கள் எக்ஸ்சேஞ்ச் தள்ளுபடிக்கு விண்ணப்பிக்க வேண்டும். இருப்பினும், தொலைபேசியின் விலையில் பரிமாற்ற தள்ளுபடியின் பலனை, அதாவது எக்ஸ்சேஞ்ச் ஆஃபரின் பலனைப் பெறுவது எளிதானது அல்ல.

ரியல்மீ சி33 2023 ஃப்ளிப்கார்ட் எலக்ட்ரானிக்ஸ் விற்பனையின் கீழ் எக்ஸ்சேஞ்ச் சலுகையிலிருந்து அதிக நன்மைகளைப் பெறலாம். இந்த போனில் ரூ.9,450 எக்ஸ்சேஞ்ச் தள்ளுபடி வழங்கப்படுகிறது. வாடிக்கையாளர்கள் இவ்வளவு பெரிய எக்ஸ்சேஞ்ச் தள்ளுபடியைப் பெற, தாங்கள் மாற்றிக்கொள்ளும் போன் நல்ல நிலையில் இருப்பதையும் லேட்டஸ் மாடலாக இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும். அப்போதுதான் இந்த சலுகையின் முழுமையான பயனை வாடிக்கையாளர்கள் பெற முடியும்.

இந்த வகையில் அசத்தலான Realme C3 2023 ஸ்மார்ட்போனை வாடிக்கையாளர்கள் ஆன்லைன் விற்பனை தளமான பிளிப்கார்ட்டில் வெறும் 549 ரூபாய்க்கு வாங்கலாம்.

கூடுதல் தகவல்:

சமீபத்தில் பிளிப்கார்ட் பற்றிய ஒரு குற்றச்சாட்டு எழுந்தது. பிளிப்கார்ட் நிறுவனம் அண்மையில் கோடைகால சிறப்பு தள்ளுபடி விற்பனையை நடத்தியது. ‘Big Savings days’ விற்பனையில் எலக்ட்ரானிக் பொருட்கள் உள்ளிட்ட பல பொருட்களுக்கு கூடுதல் தள்ளுபடிகள் கொடுக்கப்பட்டன. ஆனால், அந்த தள்ளுபடிகளுக்கு வசூலிக்கப்பட்ட விற்பனைக் கட்டணம் வாடிக்கையாளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. ரூ.10 முதல் வசூலிக்கப்பட்ட அந்த கட்டணம் பேக்கேஜிங் கட்டணம் என்ற பெயரில் வசூலிக்கப்பட்டது. இது வாடிக்கையாளர்களை ஏமாற்றும் தந்திரம் என குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டன. இதற்கு பிளிக்பார்ட் பதிலளித்துள்ளது.

‘கோடை சிறப்பு தள்ளுபடி விற்பனைக் காலத்தில் தள்ளுபடி செய்யப்பட்ட பொருட்களை நீங்கள் வாங்கும் போதெல்லாம், உங்களின் மொத்த பில்லில் ரூ.10 பெயரளவு கட்டணம் சேர்க்கப்பட்டிருந்தது. ஒரு முறை விற்பனைக் கட்டணமான ரூ. 10 உடன் நீங்கள் சிறந்த டீல்களை அனுபவிக்கலாம். எத்தனை பொருட்கள் வாங்கினாலும், ஆர்டர் செய்தாலும் ஒரு முறை மட்டும் இந்த கட்டணம் வசூலிக்கப்படும்.’ என்று பிளிப்கார்ட் கூறியுள்ளது.

 

Subscribe
Notify of
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x