Saturday, April 20, 2024

விண்வெளிக்கு சிவில் வின்ஞானியை அனுப்பியது சீனா! Shenzhou-16 லிஃப்ட்ஆஃப் வெற்றி

by Talks Tamil
0 comment 244 views

Tiangong Space Station: சீனா மே 30ம் தேதியன்று சிவில் விஞ்ஞானி உட்பட 3 விண்வெளி வீரர்களை டியாங்காங் விண்வெளி நிலையத்திற்கு அனுப்பியது 

பெய்ஜிங்: வடமேற்கு சீனாவில் உள்ள ஜிகுவான் செயற்கைக்கோள் ஏவுதல் மையத்தில் இருந்து சீனா, சிவில் விஞ்ஞானியை விண்வெளிக்கு அனுப்பியுள்ளது. சீனா செவ்வாய்க்கிழமை (மே 30) மூன்று விண்வெளி வீரர்களை தனது டியாங்காங் விண்வெளி நிலையத்திற்கு அனுப்பியது. நாடு முதன்முறையாக ஒரு சிவில் விஞ்ஞானியை விண்வெளிக்கு அனுப்பியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

2030 ஆம் ஆண்டிற்குள் சந்திரனுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தை சீனா பின்பற்றி வரும் நிலையில், சமீபத்திய லிஃப்ட்ஆஃப் வந்துள்ளது. லாங் மார்ச் 2எஃப் ராக்கெட்டில் இருந்து ஷென்ஜோ-16 குழுவினர் அனுப்பப்பட்டனர். வடமேற்கு சீனாவில் உள்ள ஜிகுவான் செயற்கைக்கோள் ஏவுதல் மையத்தில் இருந்து இந்த ராக்கெட் ஏவப்பட்டது. ராக்கெட் காலை 9:31 மணிக்கு (0131 GMT) ஏவப்பட்டதாக, AFP தெரிவித்துள்ளது.

இந்த ராக்கெட்டில் பயணித்த மூன்று விஞ்ஞானிகளில், ஜிங் ஹைபெங் மிஷன் கமாண்டர். இது பூமியிலிருந்து அவரது நான்காவது பயணம். அவருடன் பொறியாளர் Zhu Yangzhu மற்றும் Gui Haichao விண்வெளிக்குக் சென்றுள்ளனர், பெய்ஹாங் பல்கலைக்கழக பேராசிரியரும் விண்வெளியில் முதல் சீன குடிமகனும் உள்ளனர்

சீனா தனது ராணுவத்தால் நடத்தப்படும் விண்வெளித் திட்டத்திற்கு பில்லியன் டாலர்களை செலவழித்துள்ளது. விண்வெளி முயற்சிகளில், அமெரிக்கா மற்றும் ரஷ்யாவை விஞ்ச சீனா முயற்சிக்கிறது.

Subscribe
Notify of
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x