Wednesday, May 15, 2024

கார்த்திகை தீபம்: செம டிவிஸ்ட்..! தீபா கழுத்தில் தாலி கட்டியது யார் தெரியுமா? நட்சத்திரா அதிர்ச்சி

by Talks Tamil
0 comment 258 views

கார்த்திகை தீபம் இன்றைய எபிசோடில் செம டிவிஸ்ட் ஏற்பட இருக்கிறது. தீபா கழுத்தில் கார்த்தி தாலி கட்ட, அதற்கு அடுத்து நடக்கப்போகும் சம்பவங்கள் தான் செம ஹைலைட். 

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவுடன் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் கார்த்திகை தீபம் சீரியலில் அடுத்த டிவிஸ்ட் அரங்கேற இருக்கிறது. தீபா கழுத்தில் கார்த்தி தாலி கட்டிவிட, அடுத்து நட்சத்திராவால் இன்னொரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேற இருக்கிறது. அது என்ன? என்பது தான் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

தாலியை கழட்டி வைத்த தீபா

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8.45 மணிக்கு பிரபலமான சீரியலான கார்த்திகை தீபம் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் இந்த சீரியலின் இன்றைய எபிசோடில், தீபா கழட்டி வைத்த தாலியை அபிராமி ஆசிர்வாதம் செய்து சாமியை வேண்டி கொடுக்கிறாள். அந்த தாலியுடன் கார்த்திக் மண்டபத்துக்கு வருகிறான். மறுப்பக்கம் நட்சத்திராவும் குடோனில் இருந்து ஒரு வழியாக தப்பித்து மண்டபத்தை நோக்கி வருகிறாள்.

இன்னொரு புறம் தீபாவின் டூப்ளிகேட் மாப்பிள்ளையின் அப்பா, தீபா எங்கே? என தர்மலிங்கத்திடம் கேட்கிறார். அவர், ராஜு தம்பி பியூட்டி பார்லர் கூட்டி சென்றிருப்பதாக சொல்கிறார். உடனே அவர்களுக்கு இது சிவாவின் திட்டமாக இருக்குமோ என்ற சந்தேகம் எழுகிறது.

மண்டபத்துக்கு வரும் கார்த்திக் 

இதனையடுத்து மண்டபத்துக்கு வந்த கார்த்திக் மணமேடை ஏறி அபிராமி கொடுத்த தாலியை கொடுக்கிறார். ஆனால், அங்கிருக்கும் அய்யர் இங்கதான் தங்க தாலி இருக்கே?… அப்புறம் இது எதுக்கு? என கேட்கிறார். அவருக்கு பதில் கொடுக்கும் கார்த்தி, இது அம்மா ஆசிர்வாதம் செய்து கொடுத்த தாலி, நான் இதை தான் கட்டுவேன் என சொல்லி தங்கத்தில் இருக்கும் தாலியை மாற்றுகிறான்.

தீபாவுக்கு தாலி கட்டும் கார்த்தி 

அதன்பிறகு, கெட்டி மேளம் முழங்க தீபா என தெரியாமல் அவள் கழுத்தில் தாலியை கட்டுகிறான் கார்த்திக். இந்தசமயம் நட்சத்திரா மண்டபத்துக்கு வர கார்த்திக் உட்பட அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். இதனைதொடர்ந்து கார்த்திக் தீபாவின் முகத்திரையை விலக்க போகிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்கபோவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணதவறாதீர்கள்.

Subscribe
Notify of
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x