Thursday, May 16, 2024

தளபதி விஜய் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட CWC புகழ்! ஏன் தெரியுமா?

by Talks Tamil
0 comment 242 views

குக் வித் கோமாளி’ இந்த வார நிகழ்ச்சியானது 1970கள் முதல் 2020 வரையிலான திரைப்படங்களில் இருந்து கோமாளிகளை கதாபாத்திரங்களாகக் கொண்டுள்ள

‘குக் வித் கோமாளி’ புகழ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தளபதி விஜய் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காரணம் மிகவும் சுவாரஸ்யமானது மற்றும் அவரது போஸ்ட்டுக்கு லைக்ஸ் மூலம் விஜய் ரசிகர்களின் முழு ஆதரவையும் அவர் பெற்றுள்ளார்.  ‘குக் வித் கோமாளி சீசன் 4’ தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது, முந்தைய சீசன்களைப் போலவே சமையலை நகைச்சுவையும் கலந்த ரியாலிட்டி ஷோ ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று வருகிறது. இதற்கிடையில், இந்த வார நிகழ்ச்சியானது 1970கள் முதல் 2020 வரையிலான திரைப்படங்களில் இருந்து கோமாளிகளை கதாபாத்திரங்களாகக் கொண்டுள்ளது. 2009 ஆம் ஆண்டு வெளியான  பிளாக்பஸ்டர் ஹிட் படமான ‘கில்லி’ லிருந்து தளபதி விஜய்யின் கபடி வீரர் கதாபாத்திரத்தை மீண்டும் உருவாக்க புகழ் தேர்வு செய்துள்ளார்.

விஜய் அணிந்திருந்த அதே கபடி யூனிஃபார்மில் 5ம் எண் சட்டையுடன் இருக்கும் புகைப்படத்தை புகழ் பகிர்ந்துள்ளார். இந்நிலையில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘அனைத்து தளபதி ரசிகர்கலிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன், தவறாக எண்ண வேண்டாம், இது எல்லாம் கற்பனை’ என்று விஜய் ரசிகர்களிடம் சாமர்த்தியமாக மன்னிப்பு கேட்டுள்ளார்.  இந்த பதிவிற்கு பல ரசிகர்கள் அவருக்கு சாதகமாக பதிலளித்துள்ளனர் மற்றும் இந்த புகைப்படம் மூன்று லட்சத்திற்கும் அதிகமான லைக்குகளைப் பெற்றுள்ளது.   திரைப்பட முன்னணியில், சமீபத்தில் வெளியான ‘அயோத்தி’ மற்றும் ‘ஆகஸ்ட் 16, 1947’ ஆகிய படங்களில் தனது நடிப்பால் கவர்ந்த புகழ் தற்போது ‘மிஸ்டர். ஜூ கீப்பர்’ மற்றும் மேலும் சில படங்களில் துணை வேடங்களிலும் ஒப்பந்தமாகியுள்ளார் என்பது குறிப்பிட்டத்தக்கது.
விஜய் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட குக் வித் கோமாளி புகழ்! என்ன நடந்தது?
இந்த வருடம் மிகவும் எதிர்பார்க்கப்படும் மெகா ஆக்‌ஷன் திரைப்படமான லியோ விஜய் – இயக்குனர் லோகேஷ் கனகராஜ் – செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ – அனிருத் கூட்டணியில் உருவாக்கிவரும் நிலையில் பார்வையாளர்களிடையே எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.  இந்நிலையில் லியோ திரைப்படம் அக்டோபர் 19, 2023 அன்று திரைக்கு வரும் என பாடகுழுவினர் ஏற்கனவே அறிவித்திருந்தானர். சென்னை, காஷ்மீர், ஹைதராபாத் உள்ளிட்ட பல இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது.  இதன் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளது.  படத்தின் தயாரிப்பாளரான லலித் குமார், சில நாட்களுக்கு முன்பு தளபதி விஜய்யின் பிறந்தநாளான ஜூன் 22 அன்று அடுத்த முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்று கூறினார்.

அன்று லியோ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  அது மட்டுமல்லாமல், விஜய்யின் பிறந்தநாளில் லியோவின் ஒரு காட்சி வீடியோவையும் ரசிகர்கள் எதிர்பார்க்கலாம் என்று கூறப்படுகிறது.  இப்படாத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது முந்தைய படமான ‘விக்ரம்’ படத்தின் ஸ்பெஷல் க்ளிம்ப்ஸ் வீடியோவை கமல்ஹாசனின் பிறந்தநாளில் வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.  இந்த செய்தி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. லியோவில் மெகா மல்டிஸ்டார் நடிகர்களான விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன் சர்ஜா, கவுதம் மேனன், மிஷ்கின், மேத்யூ தாமஸ், மன்சூர் அலிகான், பிரியா ஆனந்த், சாண்டி, ஜனனி, அபிராமி வெங்கடாசலம், பாபு ஆண்டனி மற்றும் பலர் உள்ளனர்.  மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவும், பிலோமின் ராஜ் படத்தொகுப்பும், அன்பரிவ் சண்டைக்காட்சியும் செய்ய அனிருத் இசையமைக்கிறார்.

Subscribe
Notify of
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x