Friday, May 17, 2024

தெலுங்கில் வெளியாகும் Buddy திரைப்படம்..ஆர்யாவின் Teddy பட ரீ-மேக்கா? படக்குழு விளக்கம்

by Talks Tamil
0 comment 240 views

Buddy Movie: ஆர்யா நடித்திருந்த டெடி படத்தின் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் படம், Buddy. இந்த படத்தின் போஸ்டர் மற்றும் க்ளிம்ஸ் வீடியோ வெளியாகியுள்ளது. ஆனால், இது டெடி படத்தின் ரீமேக் இல்லை என கூறப்பட்டுள்ளது. 

தமிழில் ஆர்யா ஹீரோவாக நடித்திருந்த டெடி படத்தின் கதையை வைத்து தெலுங்கில் ‘படி’ (Buddy) என்ற பெயரில் ஒரு படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில், அல்லு அர்ஜுனின் தம்பி அல்லு சிரிஷ் நாயகனாக நடிக்கிறார். படத்தின் போஸ்டரின் டெடியுடன் துப்பாக்கியை வைத்துக்கொண்டு அல்லு சிரிஷ் போஸ் கொடுக்கும் போஸ்டர் வெளியாகியுள்ளது.

டெடி திரைப்படம்:

ஆர்யாவின் நடிப்பில் 2021ஆம் ஆண்டு வெளியான படம், டெடி. இதில், பிரபல நடிகையும் ஆர்யாவின் மனைவியுமான சாயிஷா கதாநாயகியாக நடித்திருந்தார். உடலுறுப்பு திருட்டை மைய்யமாக வைத்து எடுக்கப்பட்ட கதை இது. சிறிய விபத்தில் சிக்கி சிகிச்சைக்காக மருத்துவமனை செல்லும் பெண்ணின் உடலுறுப்பை திருட முயற்சிக்கும் கும்பலும், அதை தடுக்க முயலும் நாயகனும்தான் படத்தின் ஹைலைட். இதில், விடாமுயற்சி படத்தை இயக்க இருக்கும் மகிழ் திருமேனி வில்லனாக நடித்திருப்பார். சதீஷ் காமெடி கதாப்பாத்திரத்திலும் நடிகை சாக்ஷி மற்றும் பிரவீனா ஆகியோர் துணை கதாப்பாத்திரத்திலும் நடித்திருப்பர். இந்த படம், கொரோனா பரவல் சமயத்தில் பிரபல ஓடிடி தளமான டிஸ்னி ஹாட்ஸ்டாரில் வெளிவந்தது.

அல்லு சிரிஷ்:

புஷ்பா பட நாயகன், அல்லு அர்ஜுனின் சகோதரர் அல்லு சிரிஷ். இவர்களின் குடும்பம் மொத்தமும் சினிமாவை அடிப்படையாக கொண்ட தொழிலைத்தான் செய்து வருகின்றனர். இன்னொரு பிரபல சினிமா குடும்பமான சிரஞ்சீவியின் குடும்பமும் இவர்களும் உறவினர்கள். அல்லு சிரிஷ், 2013ஆம் ஆண்டு வெளியான கெளரவம் என்ற படம் மூலம் தனது திரை வாழ்க்கையை தொடங்கினார். தொடர்ந்து 2014 ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டு வரை ஒரு சில படங்களில் நடித்தார். ஆரம்பத்தில் இவரது சினிமா வாழ்கக்கை சறுக்கினாலும் அடுத்தடுத்து தனது படங்களின் மூலம் ரசிகர்கள் கவர்ந்தார். இவர்தான் தெலுங்கில் உருவாகிவரும் படி படத்தில் ஹீரோாக நடிக்கிறார்.

டெடி படத்தின் ரீ-மேக்? 

நடிகர் அல்லு சிரிஷ், நேற்று தனது 36ஆவது பிறந்தநாளை கொண்டாடினார். இதையொட்டி, படக்குழுவினர் சர்ப்ரைஸாக ‘Buddy’  படத்தின் போஸ்டரை வெளியிட்டனர். இந்த போஸ்டரில் டெடி பொம்மையுடன் அல்லு சிரிஷ் துப்பாக்கியை வைத்துள்ளது போனற் புகைப்படம் இடம் பெற்றிருந்தது. இதை பார்த்த ரசிகர்கள், இந்த படத்தினை டெடி படத்தின் ரீ-மேக் என நினைத்தனர். ஆனால், இது பலர் நினைப்பது போல டெடி படத்தின் ரீ-மேக் அல்ல எனக்கூறப்பட்டுள்ளது.

Allu Sirish

வேறு நடிகர் நடிக்க இருந்த படம்..

தமிழில் சமீபத்தில் வெளியான மைக்கில் படத்தின் நாயகன் சந்தீப் கிஷன், தெலுங்கிலும் பிரபல நடிகராக விளங்குகிறார். இவர்தான் முதலில் ‘Buddy’ படத்தில் நடிக்க இருந்ததாகவும் இவருக்கு பதிலாக இப்போது சிரிஷ் நடிப்பதாகவும் கூறப்படுகிறது. ஒரு சில தகவல்களின் படி, சந்தீப் கிஷன் ‘Buddy’  படத்தின் தமிழ் ரீ-மேக்கில் நடிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வர்க்-அவுட் ஆகுமா? 

டெடி படத்தினை சக்தி செளந்தர் ராஜன் இயக்குகிறார். ‘Buddy’ படத்தினை சாம் ஆண்டன் இயக்குகிறார். இவர், எனக்கு இன்னொரு பெயர் இருக்கு, கூர்கா, ட்ரிகர், 100 போன்ற படங்களை இயக்கியவர். இவர் இயக்கிய அனைத்து படங்களும் மக்களிடத்தில் ஓரளவு வரவேற்பினைதான் பெற்றுள்ளன. நடிகர் அல்லு சிரிஷ், திரைக்கு வந்து 10 வருடங்கள் ஆகியும் ‘ஆஹா ஓஹோ’ எனும் அளவிற்கு இன்னும் எந்த படத்திலும் நடிக்கவில்லை. இவர்களது கூட்டணி கைக்கொடுக்குமா? கவிழ்த்து விடுமா? என்ற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. படத்திற்கு ஹிப் ஹாப் தமிழா இசையமையத்துள்ளார். நடிகர் அஜ்மல் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.

 

Subscribe
Notify of
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x