Sunday, May 19, 2024

Lok Sabha Election 2024: மக்களவை தேர்தல் தேதிகள் அறிவிப்பு… தமிழ்நாட்டில் எப்போது தெரியுமா?

Lok Sabha Election 2024 Date Announcement Tamil : 2024 மக்களவை தேர்தலின் அட்டவணை, வாக்குப்பதிவு தேதிகள், வாக்கு எண்ணிக்கை தேதிகளை தேர்தல் ஆணையம் இன்று அறிவித்தது.

by Talks Tamil
0 comment 31 views

Lok Sabha Election 2024 Date Announcement Tamil : மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் அட்டவணை, வாக்குப்பதிவுக்கான தேதிகள், வாக்கு எண்ணிக்கைக்கான தேதிகள் ஆகியவற்றை இந்திய தேர்தல் ஆணையம் இன்று அறிவித்தது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார், தேர்தல் ஆணையர்களான ஞானேஷ் குமார், சுக்வீர் சிங் சந்து ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்து தேர்தல் அட்டவணையை வெளியிட்டனர்.

தமிழ்நாடு தேர்தல் தேதிகள் விவரம்

மக்களவை தேர்தல் தேதிகள் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளன. தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் 26 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெறுகிறது. மொத்தம் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த 26 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் மக்களவை தேர்தலுடன் வாக்குப்பதிவு நடைபெறும். இதில் முதல் கட்டத்தில் ஏப்ரல் 19ஆம் தேதியிலேயே விளவங்கோடு இடைத்தேர்தலும் நடைபெறுகிறது.

தமிழ்நாடு தேர்தல் அட்டவணை விவரம்

வேட்பு மனு தொடக்கம்: மார்ச் 20

வேட்பு மனுத் தாக்கல் கடைசி நாள்: மார்ச் 27

வேட்புமனு பரிசீலனை: மார்ச் 28

வேட்பு மனு திரும்ப பெற கடைசி நாள்: மார்ச் 30

வாக்குப்பதிவு: ஏப்ரல் 19

வாக்கு எண்ணிக்கை: ஜூன் 04

மக்களவை தேர்தல் 7 கட்டங்கள்

முதல் கட்டம்: ஏப்ரல் 19

இரண்டாவது கட்டம்: ஏப்ரல் 26

மூன்றாவது கட்டம்: மே 7

நான்காவது கட்டம்: மே 13

ஐந்தாவது கட்டம்: மே 20

ஆறாவது கட்டம்: மே 25

ஏழாவது கட்டம்: ஜூன் 1

தேர்தல் முடிவுகள்: ஜூன் 4

5 மாநில சட்டப்பேரவை தேர்தல்

ஆந்திரா, ஒடிசா, அருணாச்சல பிரதேசம், சிக்கிம் ஆகிய நான்கு மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தல் தேதிகளும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆந்திரா, ஒடிசா, அருணாச்சல பிரதேசம், சிக்கிம் ஆகிய மாநிலங்களில் ஆட்சியானது வரும் ஜூன் மாதத்துடன் நிறைவடைய உள்ளது. மேலும், மக்களவை தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது.

மொத்த வாக்காளர்கள் விவரம்

தேர்தல் தேதிகளை அறிவிக்கப்பதற்கு முன் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார்,”வாக்களர்கள் வாக்களிப்பதற்கு ஏதுவாக 10.5 லட்சம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. இந்த ஆண்டில் நடைபெறும் மிக முக்கியமான செய்தியாளர் சந்திப்ப் இதுதான். 55 லட்சம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேர்தலில் பயன்படுத்தப்பட உள்ளது. தேர்தல் நேரத்தில் போலி செய்திகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். நடப்பு மக்களவை தேர்தலில் 96.8 கோடி வாக்காளர்கள் தேர்தலில் வாக்களிக்க உள்ளனர். கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலை விட தற்போதைய தேர்தலில் வாக்காளர்கள் 6% அதிகம்.

49.7 கோடி ஆண் வாக்களார்கள், 47.1 கோடி பெண் வாக்காளர்கள், 88.4 லட்சம் மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் உள்ளனர். 1.82 கோடி பேர் முதல்முறை வாக்காளர்கள் ஆவர். 100 வயதை கடந்த 2.18 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். 82 லட்சத்திற்கும் மேல் 85 வயதுக்கும் மேலான வாக்காளர்கள் உள்ளனர். வெளிப்படைத்தன்மையுடனும், நேர்மையாகவும் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் உறுதி பூண்டுள்ளது. 85 வயதுக்கு மேற்பட்டவர்கள் விருப்பம் தெரிவித்தால் வீட்டில் இருந்தே வாக்களிக்க ஏற்பாடு செய்யப்படும்.

குஜராத்தில் ரூ.802 கோடி பறிமுதல்

மாநில எல்லைகளை கண்காணிக்க பெரிய நெட்வொர்க்கை உருவாக்கி உள்ளோம். சில சர்வதேச எல்லைகளும் ட்ரோன் மூலம் கண்காணிக்கப்படும். வாக்குச்சாவடிகள் சிசிடிவி கேமரா மூலம் கண்காணிக்கப்படும். வாக்குச்சாவடிகளில் அனைத்து வசதிகளும் ஏற்படுத்தித் தரப்படும். கடந்த 11 சட்டமன்றத் தேர்தல்களில் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட 3,400 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. அதிகபட்சமாக குஜராத் மாநிலத்தில் 802 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

கடந்த 11 சட்டமன்றத் தேர்தல்களில் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட 3,400 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. அதிகபட்சமாக குஜராத் மாநிலத்தில் 802 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. 50% வாக்குச்சாவடிகளில் நடைபெறும் வாக்குப்பதிவு இணையவழியில் நேரலை செய்யப்படும். தலைவர்களின் தனி விமானங்கள் அவர்களது வாகனங்கள் சோதனைக்கு உள்ளாக்கப்படும்.

மதுபான ஆலைகளின் உற்பத்தி மற்றும் விற்பனை கண்காணிக்கப்படும். உருவம் பெற்று வைக்கப்பட்டுள்ள துப்பாக்கிகள் தேர்தல் முடியும் வரை ஒப்படைக்க வேண்டும். ஜாதி மத ரீதியான பிரச்சாரங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டாது. தலைவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து கருத்துக்கள் கூடாது. ஆன்லைன் பரிவர்த்தனைகள் முற்றிலும் கண்காணிக்கப்படும்” என்றார்.

Subscribe
Notify of
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x