Saturday, June 1, 2024

பீர் பிரியர்கள் கவனத்திற்கு! பீருடன் சாப்பிடக் கூடாத ‘சில’ உணவுகள்!

by Talks Tamil
0 comment 247 views

பீருடன் சாப்பிடக் கூடாதவை: பீர் பார்ட்டியில் கலந்து கொள்பவர்கள் கவனத்திற்கு… பீருடன் சில உணவுகளை சாப்பிடுவது சிறுநீரக கற்கள் உட்பட பல கடுமையான உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும் என எச்சரிக்கின்றனர் நிபுணர்கள்.  

பீர் (Beer) பக்க விளைவுகள்: கோடை காலத்தில் குளிர்ச்சியான பீர் தேவை அதிகரிக்கிறது. மது பானம் குடிக்கும் பழக்கம் இருப்பவர்களுக்கு, கொளுத்தும் வெயிலில் பீர் பாட்டிலை விட சிறந்த பானம் எதுவுமில்லை. போதுவாகவே பீர் அல்லது வேறு எந்த மதுபானமாக இருந்தாலும், அது ஆரோக்கியத்திற்கு கேடு தான். கூடுதலாக, சில உணவுகள் சாப்பிடும் போது பீர் அருந்துவது ஆரோக்கியத்திற்கு மிகவும் கேடு விளைவிக்கும் என எச்சரிக்கின்றனர் நிபுணர்கள்.

பீர் என்பது உலகின் பழமைவாய்ந்த மிக அதிகமாக உட்கொள்ளப்படும் மதுபானம். இது பியர் எனவும் அழைக்கப்படுகிறது. பார்லி, கோதுமை, சோளம், அரிசி உள்ளிட்ட தானியங்களிலிருந்து பெறப்பட்ட மாவுப் பொருளை நொதிக்க வைப்பதன் மூலம் பீர் தயாரிக்கப்படுகிறது. பீர் உடலுக்கு எந்தத் தீங்கும் செய்யாது என்பது பெரும்பாலான மக்களின் நம்பிக்கையாக உள்ளது. ஆனால் அது தவறு

குளிர்ந்த பீர் இந்த வெயிலில் உங்கள் மனதை திருப்திப்படுத்துகிறது மற்றும் அதன் லேசான நறுமணம் உங்களுக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. ஆனால் அது ஆரோக்கியத்திற்கு பெரும் தீங்கு விளைவிக்கும். பீர் உடன் சில பொருட்களை உட்கொள்ளும் போது அதனால் ஏற்படும் பக்கவிளைவுகள் பல மடங்கு அதிகரிக்கும். எனவே நீங்கள் பீர் அருந்தும் போது, அதன் உடன் சில உணவுகளை சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். இல்லையெனில், இந்த இனிமையான பானம் உங்கள் ஆரோக்கியத்தை மெதுவாக அழிக்கக்கூடும்.

பிரெட் (Bread)

பிரெட்டினால் (Bread) தயாரிக்கப்பட்ட எந்த உணவையும் பீருடன் சாப்பிடக்கூடாது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். இரண்டு பொருட்களிலும் ஈஸ்ட் இருப்பதால், ஒரே நேரத்தில் அதிக ஈஸ்டை உங்கள் உடலால் ஜீரணிக்க முடியாது. இதன் காரணமாக, வயிற்று பிரச்சனைகளையும் செரிமான பிரச்சனைகளையும் சந்திக்க நேரிடும்.

பன்றி இறைச்சி

பன்றி இறைச்சி என்பது அதிக அளவு நைட்ரோசமைன் சேர்மங்களைக் கொண்ட ஒரு உணவாகும். பீர் அல்லது பன்றி இறைச்சியின் கலவையானது தொண்டை மற்றும் வயிற்று புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்க இதுவே காரணம்.

வேர்க்கடலை

பெரும்பாலானோருக்கு உப்பு சேர்த்த வேர்க்கடலை, உலர் பழங்கள் அல்லது மற்ற வகை தின்பண்டங்களை பீருடன் சாப்பிட மிகவும் பிடிக்கும். இந்த பொருட்களில் அதிக அளவு சோடியம் உள்ளது. இது நீரிழப்பு பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். அதுமட்டுமின்றி, இது எடிமா மற்றும் இரத்த அழுத்தம் ஏற்படும் அபாயத்தையும் அதிகரிக்கும்.

சீமைப் பனிச்சை

சீமைப் பனிச்சை (Persimmon) என்பது செம்மஞ்சள் அல்லது இளம் பொன்னிறத்தில் காணப்படும் ஒரு பழம். அதன் வடிவம் கோளம் வடிவான அல்லது பரங்கிக்காய் வடிவில் காணப்படும். இந்த பழத்தில் டானிக் அமிலம் உள்ளது. இதை பீர் உடன் சாப்பிடுவதால் சிறுநீரக கற்கள் உருவாகும் அபாயம் உள்ளது. ஆல்கஹாலுடன் மட்டுமின்றி, அதிக புரோட்டீன் உணவுகளுடன் சேர்த்து உட்கொள்வதும் தீங்கு விளைவிக்கும்.

தக்காளி

தக்காளியில் அதிக டானிக் அமிலம் இருப்பதால் அவை புளிப்பாக இருக்கும். புளிப்பு தக்காளியை பீர் அல்லது ஒயின் சேர்த்து உட்கொள்வது வாந்தி மற்றும் பிற பிரச்சனைகளுடன் வயிற்று அசௌகரியத்தை ஏற்படுத்தும். எனவே தக்காளி அதிகம் உள்ள உணவுகளை நிச்சயமாக தவிர்க்க வேண்டும்.

கேரட்

பலர் பீர் குடிக்கும் போது கேரட்டை சாலட்டாக சாப்பிடுவார்கள். நீங்கள் பாரில் குடிக்க திட்டமிட்டால், அதைச் செய்வதற்கு முன் சிந்தியுங்கள். ஆல்கஹால் மற்றும் கேரட்டின் கலவையானது கல்லீரலில் நச்சுகளை உருவாக்குகிறது. தொடர்ந்து இவ்வாறு சாப்பிடுவதால் கல்லீரல் பாதிப்பு உண்டாகும்.

ராஜ்மா பீன்ஸ்

உங்கள் உணவில் ராஜ்மா பீன்ஸ் வகை பருப்புகள் ஏதேனும் இருந்தால், நீங்கள் அவற்றை பீர் உடன் உட்கொள்ளக் கூடாது. அவற்றில் இரும்புச்சத்து அதிகமாக உள்ளது. ஆல்கஹால் எடுத்துக் கொள்ளும்போது இந்த சத்துக்கள் உங்கள் உடலால் நன்கு உறிஞ்சப்படுவதில்லை.

உப்பு அதிகம் உள்ள உணவுகள்

பிரஞ்சு பிரைஸ் போன்ற அதிக உப்பு சேர்த்த தின்பண்டங்களில் அதிக அளவு சோடியம் உள்ளது. பீர் உடன் அருந்தும்போது இது உங்கள் செரிமான அமைப்புக்கு தீங்கு விளைவிக்கும். உப்பு நிறைந்த பொருட்கள் உங்கள் தாகத்தையும் அதிகரிக்கும். மேலும், பீர் ஒரு டையூரிடிக் விளைவைக் கொண்டுள்ளது. இது அதிகமாக சிறுநீர் கழிக்க வகை செய்கிறது.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொதுவான தகவலை அடிப்படையாகக் கொண்டது. எந்தவொரு விஷயத்தையும் செயல்படுத்தும் முன், சம்பந்தப்பட்ட நிபுணரைத் தொடர்பு கொள்ளவும். Tamilan Talks அதற்குப் பொறுப்பேற்காது.)

Subscribe
Notify of
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x