Wednesday, May 1, 2024

அபாயம்… இந்தியாவில் 30% இளைஞர்கள் காட்டும் அலட்சியம் – இந்த நோயால் கடும் பாதிப்பு வரலாம்!

Health News: இந்தியாவில் 30% மக்கள் தங்களின் உடல்நலன் குறித்து அக்கறையே காட்டுவதில்லை என அதிர்ச்சி தரும் அறிக்கையை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வெளியிட்டுள்ளது.

by Talks Tamil
0 comment 27 views

Health News In Tamil: உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வது என்பது உங்களின் வாழ்வை எளிமையானதாகவும், இணிமையானதாகவும் மாற்றும் முக்கிய கூறாகும். ஆனால், பலரும் உடல்நிலையை ஆரோக்கியமாக பேணுவதில் சுணக்கம் காட்டுகிறார்கள். நேரம் கெட்ட நேரத்தில் உணவருந்துவது, சரியாக தூங்காதது, அதிக நேரம் உடல் உறுப்புகளுக்கு ஓய்வளிக்காமல் வேலை பார்ப்பது, உடற்பயிற்சியை முற்றிலுமாக புறக்கணிப்பது என்பது உடல்நலன் சார்ந்த விஷயங்களில் நம்மில் பெரும்பாலனோர் அலட்சியம்தான் காட்டுகிறோம்.

தற்போதைய சூழலில் இளம் வயதினருக்கே மாரடைப்பு ஏற்படுகிறது. நவீன காலகட்டத்திற்கு முன்னரும்கூட இளம் வயதில் நோய்வாய்ப்பட்டு இறப்பது வாடிக்கைதான். ஆனால், தற்போதைய நவீன சூழலில் ஒருவர், அதாவது மருத்துவத்துறை உச்சத்தில் இருக்கும் இந்த காலகட்டத்தில் ஒருவர் நோய்வாய்ப்பட்டு உயிரிழக்கிறார் என்றால் அதில் நம் அலட்சியத்தின் பங்கு அதிகமிருக்கிறது என்று அர்த்தம். உடல் ஆரோக்கியம் சார்ந்த ஓர்மை இல்லாவிட்டால் உடல்நலம் கேடும் என்பதை நாம் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும்.

அதிர்ச்சி தரும் அறிக்கை…

இதையெல்லாம் யாரையும் அச்சத்திற்கு உள்ளாக்குவதற்காக அல்ல. உடல்நலனில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் ரத்த அழுத்தத்தை குறித்தே இதில் காண உள்ளோம். அதாவது, உயர் ரத்த அழுத்தம்தான் மாரடைப்பு முதல் அனைத்து விஷயங்களுக்கும் முக்கிய காரணம். இது அனைவருக்கும் தெரிந்திருந்தாலும் இதனை நாம் அலட்சியப்படுத்துகிறோம். இந்தியாவில் 18 முதல் 54 வயது வரை இருக்கும் 30 சதவீதத்தினர் தங்களின் ரத்த அழுத்த அளவை பரிசோதிப்பதே இல்லை என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், நம் உடல் குறித்த அலட்சியப் போக்கை புரிந்துகொள்ளலாம்.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் நோய் தகவல் மற்றும் ஆராய்ச்சிக்கான தேசிய மையம் (ICMR – NCDIR) நடத்திய ஆய்வின் மூலம் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையானது, இன்டர்நேஷனல் ஜர்னல் ஆஃப் பப்ளிக் ஹெல்த் (International Journal of Public Health) என்ற மருத்துவ ஆய்விதழில் வெளியாகி உள்ளது. இதில் இந்தியாவில், மக்கள் ரத்த அழுத்தத்தை சோதித்து பார்ப்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

தென்னிந்தியா மற்றும் பிற பகுதிகள்

இந்த ஆயிவின் மூலம் நாடு முழுவதும் உள்ள போக்கு கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக, 76% தென்னிந்திய மக்கள் தங்களின் ரத்த அழுத்த அளவை அவ்வப்போது பரிசோதிப்பதாக இந்த ஆய்வு தெரிவித்துள்ளது. குறிப்பாக, லட்சத்தீவில் 91% பேரும், கேரளாவில் 89% பேரும், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் தலா 83% பேரும் இந்த பரிசோதனையை மேற்கொள்கின்றனர். ஆனால், வட இந்தியாவில் 70% மக்கள் மட்டுமே பரிசோதனையை மேற்கொள்கின்றனர். மத்திய பிரதேசத்தில் 62.4% பேரும், சத்தீஸ்கரில் 62% பேரும், ஒடிசாவில் 56% பேரும், ஜார்க்கண்டில் 60% பேரும், குஜராத்தில் 58%, நாகாலந்தில் 58% பேரும் இந்த பரிசோதனையை மேற்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயர் ரத்த அழுத்தம் என்பது மாரடைப்பு மட்டுமின்றி பக்கவாதம் மற்றும் சிறுநீரக பாதிப்பு உள்ளிட்ட உடல்நலப் பிரச்னைகளையும் உண்டாக்கும் என மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள். மேலும், நாட்டின் பல்வேறு மாநிலங்களில் உயர் ரத்த அழுத்தத்திற்கு முந்தையை Pre-Hypertension என்பது 34 சதவீதத்தினருக்கு இருப்பதாக இந்த ஆய்வில் தெரிவிக்கப்படுகிறது.

என்ன செய்ய வேண்டும்?

Pre-Hypertension என்றால் சீரான அளவை விட கொஞ்சம் அதிகமாக இருக்கும், ஆனால் அது உயர் ரத்த அழுத்தமாக கருதப்படாது. எனவே, மக்கள் தங்களின் உடல்நலனின் மீது அக்கறை செலுத்த வேண்டும் என்பதே இந்த ஆய்வின் நோக்கம். நீங்கள் உங்கள் ரத்த அழுத்த அளவை அடிக்கடி சரிபார்ப்பது மிக முக்கியமாகும். குறிப்பாக, 40 வயதை தாண்டியவர்கள்…

Subscribe
Notify of
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x