Monday, April 29, 2024

Aadhaar Card தொலைந்துவிட்டதா? வெறும் ரூ.50 போதும், உடனே அப்ளை பண்ணுங்க

How to order PVC Aadhaar card from mAadhaar App: உங்கள் ஆதார் அட்டை தொலைந்துவிட்டாலோ அல்லது கிழிந்தாலோ, mAadhaar செயலி மூலம் புதிய ஆதார் அட்டையை பெறலாம். எப்படி பெறுவது என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள்.

by Talks Tamil
0 comment 30 views

How to order PVC Aadhaar card from mAadhaar App: ஆதார் அட்டை என்பது முக்கிய ஆவணங்களில் ஒன்றாகும். ஆதார் ஒவ்வொரு தனி நபரின் தனித்துவமான அடையாளத்தை நிறுவும் நோக்கத்திற்காக இந்திய அரசாங்கத்தின் சார்பாக இந்திய தனித்துவ அடையாள ஆணையம் தனிநபர்களுக்கு வழங்கிய தனிப்பட்ட அடையாள எண். இது இந்தியாவில் எங்கும் அடையாளம் மற்றும் முகவரிக்கான சான்றாக செயல்படும். ஆதார் அட்டையில் 12 இலக்க தனித்துவமான அடையாள எண் உள்ளது, இது மக்கள்தொகை (குடியிருப்பு முகவரி தகவல்) மற்றும் பயோமெட்ரிக் தகவல்களை (புகைப்படம், கருவிழி-ஸ்கேன், கைரேகைகள்) புகைப்படத்துடன் சேமிக்கிறது. மேலும் இந்த அட்டையானது இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தால் (UIDAI) வழங்கப்படுகிறது.

இந்த ஆதார் அடையானது வங்கிப் பணி முதல் குழந்தையைப் பள்ளியில் சேர்ப்பது வரை அனைத்து வேலைக்கும் பயன்படுத்தப்படும் முக்கிய ஆவணம். அத்தகைய சூழ்நிலையில் இந்த முக்கியமான ஆவணமான ஆதார் அட்டை தொலைந்துவிட்டாலோ அல்லது கிழிந்துவிட்டாலோ இனி நீங்கள் கவலைப்பட தேவையில்லை. mAadhaar மொபைல் செயலியைப் பயன்படுத்தி வெறும் 50 ரூபாய்க்கு புதிய PVC கார்டை ஆர்டர் செய்துக் கொள்ளலாம். இருப்பினும், இதற்காக நீங்கள் சில முக்கிய படிகளைப் பின்பற்ற வேண்டும். மேலும் இதற்கு கட்டணம் செலுத்துவதன் மூலம், ஆதார் அட்டையை நீங்கள் மீண்டும் பெற முடியும், அதுவும் எங்கும் அலையாமல் உங்கள் முகவரிக்கு வந்து சேரும். இப்போது இது தொடர்பான முழு விவரத்தை இந்த பதிவில் காண்போம்.

mAadhaar செயலியைப் பதிவிறக்கம் செய்யவும்
முதலில், கூகுள் ப்ளே ஸ்டோர் அல்லது ஆப்பிள் ஆப் ஸ்டோருக்கு சென்று அங்கு “mAadhaar” மொபைல் செயலியை உங்கள் ஸ்மார்ட்போனில் பதிவிறக்க செய்யவும்.

mAadhaar செயலியை திறக்கவும்
செயலியை இன்ஸ்டால் செய்தப் பின், அதைத் திறக்கவும்.

உள்நுழையவும் அல்லது பதிவு செய்யவும்
நீங்கள் ஏற்கனவே ஆதார் கணக்கை உருவாக்கியிருந்தால், உங்கள் சான்றுகளைப் பயன்படுத்தி மீண்டும் உள்நுழையவும். இல்லையெனில், பதிவு விருப்பத்தைப் பயன்படுத்தி புதிய கணக்கை உருவாக்கவும்.

ஆதார் அட்டையை இணைக்கவும்
செயலியில் உள்நுழைந்த பிறகு, உங்கள் ஆதார் அட்டை விவரங்களை உள்ளிட்டு சரிபார்க்கவும்.

PVC ஆதார் அட்டையை ஆர்டர் செய்யவும்.
இதற்குப் பிறகு, ஆதார் அட்டை விவரங்கள் சரிபார்க்கப்பட்ட பிறகு, செயலில் உள்ள “ஆதார் பிவிசி கார்டை ஆர்டர் செய்” என்ற விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.

ஷிப்பிங் முகவரியை உள்ளிடவும்
இப்போது, ​​நீங்கள் PVC ஆதார் அட்டையைப் பெற விரும்பும் உங்கள் ஷிப்பிங் முகவரியை உள்ளிட வேண்டும்.

கட்டணம் செலுத்தவும்
அதன் பிறகு PVC ஆதார் அட்டைக்கு கட்டணத்தை செலுத்துங்கள். பணம் செலுத்த UPIஐப் பயன்படுத்தலாம்.

கன்பர்ம் செய்யவும்
கட்டணத்தை செலுத்திய பிறகு, உங்கள் ஆர்டரின் விவரங்களுடன் சரிப்பார்க்கவும்

டெலிவரிக்காக காத்திருக்கவும்
இப்போது புதிய ஆதார் PVC கார்டு உங்கள் முகவரிக்கு அனுப்பப்படும்.

ஏடிஎம் கார்டு போல இருக்கும்
இந்த புதிய PVC ஆதார் அட்டையானது ஏடிஎம் கார்டு போல இருக்கும். மேலும் இந்த கார்டை பெற ரூ.50 செலுத்த வேண்டும்.

 

Subscribe
Notify of
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x