Monday, April 29, 2024

கைவிடப்படும் சூர்யா – சுதா கொங்கரா படம்? சூர்யா வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

by Talks Tamil
0 comment 10 views

Suriya Next Movie: கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா புதிய படத்தில் நடிக்க உள்ளதாக அதிகார்வப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

சூர்யாவின் நடிப்பில் திரையரங்குகளில் படம் வெளியாகி இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. கடைசியாக பாண்டிராஜ் இயக்கத்தில் எதற்கும் துணிந்தவன் படம் வெளியானது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் கங்குவா படத்தில் நடித்து வந்தார் சூர்யா. இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிந்துள்ளது.

இந்த படத்திற்குப் பிறகு சூர்யா சுதா கொங்கரா இயக்கத்தில் மீண்டும் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது. இதற்கான வேலைகளும் நடைபெற்று வந்தது.

இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் சூர்யா – சுதா கொங்கரா இணையும் படம் தற்போது நடைபெறவில்லை என்றும், மீண்டும் சிறிது நாட்களுக்குப் பிறகு இந்த படம் தொடங்கப்படும் என்று அறிவிப்பு வெளியானது.

தற்போது யாரும் எதிர்பார்க்காத விதமாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா தனது 44வது படத்தில் நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதனால் சுதா கொங்கராவின் படம் கைவிடப்பட்டதா என்ற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Subscribe
Notify of
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x