Tuesday, May 14, 2024

சிலிண்டர் டெலிவரி செய்பவரின் மகன் ரிங்கு சிங்! KKR ஆட்டநாயகனின் ஊக்கமளிக்கும் பின்னணி

by Talks Tamil
0 comment 247 views

Rinku Singh KKR: ரிங்கு சிங்கின் ஊக்கமளிக்கும் பயணம் அனைவருக்கும் ஊக்கமளிப்பது. எளிய குடும்பப் பின்ணணியில் வறுமையில் இருந்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பேட்டிங் ஹீரோவான ரிங்கு சிங் 

இந்தியன் பிரீமியர் லீக் (IPL 2023) வரலாற்றில் நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வெற்றிக்கு காரணம் யார் என்றால் ரிங்கு சிங் என்று அனைவரும் சொல்வார்கள். பேட்டர் ரிங்கு சிங் போட்டியின் தன்மையை மாற்றி அமைத்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிர்பாராத மகிழ்ச்சியை பெற்றுத்தந்தார்.

ஐபிஎல் 2023, 13ஆவது லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் குஜராத் அணியை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெற்றிகொண்டது. இப்போட்டி, குஜராத் அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது.

ஆட்ட நாயகன் ரிங்கு சிங்

குஜராத் தான் வெற்றி பெறும் நினைத்திருந்த நேரத்தில், அடுத்தடுத்த ஐந்து பந்துகளில் சிக்ஸர்களை அடித்து ரிங்கு சிங் கொல்கத்தா அணிக்கு த்ரில் வெற்றியை தேடி தந்தார். ரிங்கு சிங்கின் அபார ஆட்டத்தினால், கொல்கத்தா 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் குஜராத்தை வீழ்த்தி, தொடரில் தனது இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது.

நேற்றைய போட்டி, இத்தொடரில் குஜராத்தின் முதல் தோல்வி என்பதும் குறிப்பிடத்தக்கது. குஜராத் அணியை, நரேந்திர மோடி மைதானத்தில் மண்ணைக் கவ்வ வைத்த ரிங்கு சிங் ஆட்டநாயகனாக தேர்வானார். அவர் 21 பந்துகளில் 6 சிக்ஸர்கள், 1 பவுண்டரி என 48 ரன்களை குவித்தார்.

யார் இந்த ரிங்கு சிங்?

தனது வாழ்க்கைப் பயணத்தில் சில கடினமான காலங்களை சந்தித்த நட்சத்திர கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங், தனது அணியை எதிர்பாராத நேரத்தில் தூக்கி நிறுத்தினார். தற்போது யார் இந்த ரிங்கு சிங் என்று அனைவரும் தெரிந்துக் கொள்ள விரும்புகின்றனர்.

விவசாயி மகன் ரிங்கு சிங்

விவசாய குடும்பத்தில் இருந்து வந்த ரிங்கு சிங், தான் அடித்த ஒவ்வொரு பந்தும் எனக்காக தங்கள் வாழ்க்கையையே தியாகம் செய்தவர்களுக்கு அர்ப்பணிக்கிறேன் என்று GTக்கு எதிராக KKR க்காக விளையாடி ஆட்டநாயகனாக போற்றப்படும் ரிங்கு சிங் கூறுகிறார்.

ரிங்கு சிங் கிரிக்கெட் வாழ்க்கை.
ரிங்கு சிங் 2014 இல் உத்திரப்பிரதேச அணிக்காக List A இல் அறிமுகமானார். அப்போது அவருக்கு 16 வயதுதான். 2016 ஆம் ஆண்டில், அதே அணிக்கான முதல் தர வீரராக அறிமுகப்படுத்தப்பட்டார்.

பிசிசிஐ தடை

ஆனால் ரிங்கு சிங் ஒருமுறை வெளிநாட்டு லீக்கில் விளையாடியதற்காக பிசிசிஐ-யிடமிருந்து 3 மாத தடையை எதிர்கொண்டார் என்பது பலருக்குத் தெரியாது.

வறுமையின் உச்சம்

KKR இன் அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்தில் ரிங்கு வெளியிட்ட ஒரு தகவல் அவர் குடும்பத்தின் வறுமைநிலையை புரிந்துக் கொள்ள போதுமானது. காயம் காரணமாக ஒருமுறை ரிங்கு சிங் விளையாட முடியாததால், அவரது தந்தை 2-3 நாட்கள் சாப்பிடாமல் இருந்தாராம். காரணம், ரிங்கு சிங் மட்டுமே அவரது குடும்பத்தில் சம்பாதிக்கும் ஒரே நபர். அவர் விளையாடாவிட்டால், வீட்டில் உணவுக்கு வழியில்லை என்ற விஷயம், அவரது குடும்பத்தின் பின்னணியை சொல்லப் போதுமானது.

துப்புரவுத் தொழிலாளி பணி

குடும்பத்திற்கான செலவுகளுக்காக ரிங்கு வேலை செய்ய வேண்டிய கட்டாயம் இருந்தது. ஒரு முறை ரிங்கு சிங் வேலை தேடி சென்றபோது, துப்புரவு பணியாளராக வேலை பார்க்கச் சொன்னார்கள். வீடு திரும்பிய அவர், அம்மாவிடம், இதுபோன்ற வேலைகளை தவிர்த்து, கிரிக்கெட்டில் கவனம் செலுத்துவேன் என்று கூறியுள்ளார்.

குடும்ப பின்னணி
மிகவும் எளிமையான குடும்பப் பின்னணியில் இருந்து வந்த ரிங்கு சிங்கின், மூதாதையர் விவசாயிகள், ரிங்குவின் தந்தை எல்பிஜி சிலிண்டர்களை டெலிவரி செய்யும் வேலை செய்தார். கிரிக்கெட்டில் இன்று அவர் பலராலும் கொண்டாடப்பட்டாலும், பணக்காரர்களின் விளையாட்டான கிரிக்கெட்டில் இன்று அவர் அடைந்திருக்கும் இடத்திற்காக அவர் செய்த முயற்சிகளும், குடும்பத்தினரின் தியாகங்களும் வெற்று வார்த்தைகளுக்குள் அடங்காதவை.

Subscribe
Notify of
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x