Monday, April 29, 2024

மழை காலத்தில் மொபைல் ஈரமாகிவிட்டதா..?! சரி செய்ய டிப்ஸ்..!

Smartphone Hacks: இந்த புயல் மழை காலத்தில் பலரின் மொபைலும் ஈரமாகிவிடும் சில பாதிப்புகளுக்கு உள்ளாகும். இருப்பினும் மழையில் இருந்து மொபைலை பாதுகாக்கும் டிப்ஸ்களை இதில் காணலாம்.

by Talks Tamil
0 comment 131 views

சென்னையில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

மழைநீர் மொபைல் சார்ஜிங் ஸ்லாட்டுக்குள் செல்லும்.

எனவே உடனடியாக சார்ஜ் செய்ய கூடாது.

Smartphone Hacks: மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கடுமையாக மழை பெய்து வருகிறது. அந்த தொடர்ந்து சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு இன்றும், நாளையும் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மழைநீர் வெள்ளம் போல் சூழந்துள்ளதால் மக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும், மின்சாரம் இல்லாத நிலையில் பலராலும் வைஃபை வசதி, மொபைல் சார்ஜிங் போன்றவறை தடைப்பட்டுள்ளது. மேலும், தொடர் மழையால் மொபைல் சேவையும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. நிலைமை இப்படியிருக்க பலரும் தங்களின் அத்தியாவசியத் தேவைக்கும், பாதுகாப்பான இடத்திற்கு செல்ல வெளியே வர வேண்டிய தேவை இருக்கிறது. அப்போது அவர்களின் மொபைல் போன்கள் மழையில் நனைந்து சேதமடைய வாய்ப்புள்ளது.

தண்ணீர் நனைந்தால்…

நீங்கள் Waterproof ஸ்மார்ட்ஃபோனைப் பயன்படுத்தவில்லை என்றால், மழையின் போது உங்கள் ஸ்மார்ட்போனைப் பாதுகாக்க சில விஷயங்களை இதில் காணலாம். உங்கள் ஸ்மார்ட்ஃபோனை மழையில் நனையாமல் பாதுகாக்க உங்களிடம் எதுவும் இல்லை என்றால், முடிந்தால், அதை விரைவில் அணைத்துவிட்டு பேட்டரியை கழற்றி வைக்கவும்.

ஈரமான ஸ்மார்ட்போனைப் பயன்படுத்துவது ஆபத்தானது மட்டுமல்ல. எந்தவொரு முன்னறிவிப்பும் இல்லாமல் சாதனம் எப்போது வேண்டுமானாலும் வேலை செய்வதை நிறுத்தலாம். ஸ்மார்ட்போன் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தால், அது ஈரமாகிவிட்டால், அது நல்ல முறையில் இருக்கும்.

சிலிக்கா ஜெல் பை

சிலிக்கா ஜெல் சிறிய பைகளைப் பார்த்தால், அவற்றைத் தூக்கி எறிய வேண்டாம். இதனை எப்போதும் பர்ஸில் வைத்துக்கொள்ளுங்கள். மழை பெய்யத் தொடங்கும் போது, சிலிக்கா ஜெல் பையுடன் ஸ்மார்ட்போனை ஜிப் லாக் பைக்குள் வைக்கவும். ஜிப் லாக் ஸ்மார்ட்போனை ஈரமாகாமல் பாதுகாக்கும் அதே வேளையில் உள்ளே இருக்கும் சிலிக்கா ஜெல் அதிகப்படியான ஈரப்பதத்தை உறிஞ்சிவிடும்.

ஒரு பாலித்தீன் பைக்களில் மொபைல்களை வைத்துக்கொள்ளுங்கள். மொபைலை அணைத்து, ஸ்மார்ட்போனை உங்கள் கைக்குட்டையால் போர்த்தி, பின்னர் காகிதத்தால் போர்த்தி, இறுதியாக பாலித்தீன் பேக்குக்குள் வைக்கவும்.

உடனே சார்ஜ் போடாதீங்க

யாரிடமாவது பேசவோ அல்லது இசையைக் கேட்கவோ உங்கள் ஸ்மார்ட்ஃபோனைப் பயன்படுத்த வேண்டும் என்றால், ப்ளூடூத் இயர்போனைப் பயன்படுத்தவும். மழையின் போது நனைந்தவுடன் ஸ்மார்ட்போனை உடனடியாக சார்ஜ் செய்யக்கூடாது. தண்ணீர் இல்லையென்றால், ஈரப்பதம் சார்ஜிங் போர்ட்டில் குறைந்த அளவிலான ஷார்ட் சர்க்யூட்டை உருவாக்கலாம். சார்ஜ் செய்வதற்கு முன் ஸ்மார்ட்போன் முற்றிலும் உலர்ந்ததா என்பதை எப்போதும் சரிபார்க்கவும்.

Subscribe
Notify of
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x