Sunday, April 28, 2024

டெல்லிக்கு எதிரான பரபரப்பான போட்டியில் வெற்றி பெற்ற ராஜஸ்தான்!

Rajasthan Royals vs Delhi Capitals: டெல்லி அணிக்கு எதிராக இன்று நடைபெற்ற பரபரப்பான போட்டியில் கடைசி ஓவரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது.

by Talks Tamil
0 comment 11 views

ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகளுக்கு இடையேயான இன்றைய ஐபிஎல் போட்டி ஜெய்ப்பூரில் நடைபெற்றது.  ராஜஸ்தானின் சொந்த மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல் அணியின் கேப்டன் ரிஷப் பந்த் முதலில் பவுலிங் தேர்வு செய்தார்.  கடந்த போட்டியில் டெல்லி அணி தோல்வியை சந்தித்து இருந்தது, ராஜஸ்தான அணி வெற்றி பெற்று இருந்தது.  மேலும் இந்த வருட ஐபிஎல்லில் இதுவரை நடந்து முடிந்த 8 போட்டிகளில் சொந்த மைதானத்தில் விளையாடிய  அணிகள் மட்டுமே வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.  இதனால் இதனை மாற்றி இன்றைய போட்டியில் டெல்லி வெற்றி பெறுமா என்ற எதிர்பார்ப்பு அதிக அளவில் இருந்தது.

முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மோசமான தொடக்கத்தை தந்தது.  பவர் பிளே முடிவதற்குள் மூன்று விக்கெடுகளை இழந்து தடுமாறியது.  யஷஸ்வி ஜெய்ஸ்வால் 5 ரன்களுக்கும், ஜாஸ் பட்லர் 11 ரன்களுக்கும், கேப்டன் சஞ்சு சாம்சன் 15 ரன்களுக்கும் அவுட்டாகி வெளியேறினர். அதன் பிறகு ஜோடி சேர்ந்த ரியான் பராக் மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் அணியை சரிவில் இருந்து மீட்டனர்.  அஸ்வின் 19 பந்துகளில் மூன்று சிக்சர்கள் உட்பட 29 ரன்கள் விலாசினார். மறுபுறம் ரியான் பராக் தான் ஒரு சிறந்த டி20 பேட்டர் என்பதை நிரூபித்துள்ளார். 45 பந்துகளில் 6 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகள் உட்பட 84 ரன்கள் அடித்து கடைசிவரை அவுட் ஆகாமல் இருந்தார் ரியான் பராக். 20 ஓவர் முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஐந்து விக்கெட்களை இழந்து 185 ரன்கள் அடித்தது.

186 ரன்கள் அடித்தால் வெற்றி என்ன நிலையில் டெல்லி கேப்பிடல் அணி களமிறங்கியது. டெல்லி அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் டேவிட் வார்னர் மற்றும் மிட்சல் மார்ஸ் அதிரடி துவக்கம் கொடுத்தனர். ஆனால் இந்த துவக்கம் நீண்ட நேரம் நிலைக்கவில்லை. மிட்சல் மார்ஸ் 23 ரன்களுக்கு அவுட் ஆகி வெளியேறினார்.  நன்றாக விளையாடிக் கொண்டிருந்த டேவிட் வார்னர் 49 ரன்களுக்கு சந்திப் சர்மாவின் சிறப்பான கேட்சில் அவுட் ஆகி வெளியேறினார்.  இருப்பினும் டெல்லி ரசிகர்கள் ரிஷப் பந்த்தின் மீது நம்பிக்கை வைத்திருந்தனர். ஆனால் சஹாலின் சுழலில் பந்த் 28 ரன்களுக்கு அவுட் ஆகி வெளியேறினார். அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து டெல்லி அணியின் ரிக்குவைட் ரேட் அதிகரித்து கொண்டே இருந்தது.

கடைசி 2 ஓவரில் டெல்லி அணி வெற்றி பெற 32 ரன்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரில் ஒரு சிக்ஸ் மற்றும் பவுண்டரி போக ஆட்டம் சூடுபிடித்தது.  கடைசி ஓவரில் வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ஆவேஸ் கான் சிறப்பாக பந்து வீச ராஜஸ்தான் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.  ரியான் பராக் ஆட்டநாயகன் விருது வென்றுள்ளார்.

Subscribe
Notify of
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x