Saturday, April 13, 2024

சரியான தூக்கம் இல்லை என்றாலும் உடற்பயிற்சியில் ஈடுபாடு இருக்காது : எப்படி தெரியுமா..?

by Talks Tamil
0 comment 242 views

ஆழ்ந்த உறக்கம் கிடைக்க டிஜிட்டல் சாதனங்களின் பயன்பாட்டை குறைக்க வேண்டும். மெல்லிய இசையை ஒலிக்கவிட்டு, அதை ரசித்தபடி இருந்தால் எளிதில் தூக்கம் வரும். புத்தகம் படிப்பவர்களுக்கு ஆழ்ந்த தூக்கம் வரும். ஸ்ட்ரெஸ் காரணமாக தூக்கம் பாதிக்கப்பட்டால் தியானம் அல்லது யோகா செய்யலாம்.

நம் உடலையும், உள்ளத்தையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டுமென்றால் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்பது உங்களுக்கு தெரியாத விஷயம் அல்ல. உடற்பயிற்சி குறித்து சமீப ஆண்டுகளில் அதிகரித்த விழிப்புணர்வு காரணமாக பெரும்பாலான மக்கள் இன்றைக்கு காலை அல்லது மாலை வேளைகளில் பயிற்சி செய்கின்றனர். அதே வேளையில், ஆழ்ந்த உறக்கத்தின் அவசியம் குறித்து பலருக்கும் தெரிவதில்லை. இதுவும் நம் உடல் நலனுக்கு மிகவும் முக்கியமானது தான் என்பது பலருக்கும் தெரியாத தகவலாக இருக்கிறது.

நாள் முழுவதும் ஓடி, ஆடி களைத்து போகின்ற உடலுக்கும், பல சிந்தனைகளில் மூழ்கி சோர்வடையும் நம் மூளைக்கும் புத்துணர்ச்சி தருவதாகவும், நம் உடலை மீட்டுருவாக்கம் செய்வதாகவும் தூக்கம் அமைகிறது. ஆழ்ந்த உறக்கத்தின் மூலமாக புதிய ஆற்றல் நமக்கு கிடைக்கிறது.

ஒட்டுமொத்தமாக பார்க்க போனால், சரியான உடற்பயிற்சி, ஆரோக்கியமான உணவு, போதுமான தூக்கம் மற்றும் இதர வாழ்வியல் பழக்கங்கள் அனைத்தும் தான் நம் உடல் நலனை காப்பதில் முக்கிய பங்கு வைக்கிறது. குறிப்பாக ஆழ்ந்த உறக்கத்தின் மூலமாக நம் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் குறித்து இப்போது பார்க்கலாம்.

தசைகள் மீட்டுருவாக்கம் செய்யப்படுகின்றன : தூக்கத்தின் போது தான் மனித வளர்ச்சிக்கு தேவையான ஹார்மோன்கள் சுரக்கின்றன. போதுமான தூக்கம் இல்லை என்றால் இந்த ஹார்மோன் சுரப்பில் பாதிப்பு ஏற்படும். ஆழ்ந்த உறக்கத்தின் மூலமாக நமது உடல் தன்னை சரி செய்து கொள்கிறது மற்றும் நல்ல வளர்ச்சியை நோக்கி பயணிக்கிறது. உடலை திடகாத்திரமாக வைத்துக் கொள்ளவும் இது உதவிகரமாக அமைகிறது.

Subscribe
Notify of
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x