Sunday, February 4, 2024

படுக்கையறை காட்சியில் நடித்த பிரியங்கா மோகன்..!

Priyanka Mohan In Tik Tok Movie: பிரபல நடிகை பிரியங்கா மாேகன், புதிதாக ஒரு படத்தில் நடித்துள்ளார். அதன் டிரைலர் சமீபத்தில் வெளியானது.

by Talks Tamil
0 comment 71 views

தமிழில் ஒரு சில படங்களிளேயே நடித்துள்ள பிரியங்கா மோகன், அதற்குள்ளாக பிரபலமான நடிகையாக மாறிவிட்டார். இவர் தற்போதி ‘டிக் டாக்’ என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. இதில் பிரியங்கா மோகன் நடித்துள்ள காட்சி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரியங்கா மோகன்:

நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் 2021ஆம் ஆண்டு வெளியாகியிருந்த ‘டாக்டர்’ படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தவர், பிரியங்கா அருள் மோகன். இந்த படத்தில் இவர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த ஜோடி ரசிகர்களுக்கு பிடித்துப்போக, அடுத்து 2022ஆம் ஆண்டில் அவருடனேயே‘டான்’ படத்தில் ஜோடி சேர்ந்து நடித்தார். சூர்யாவுடன் ‘எதர்க்கும் துணிந்தவன்’ படத்தில் நடித்து பல தமிழ் ரசிகர்களின் மனங்களில் இடம் பிடித்தார். கன்னடம் மற்றும் தெலுங்கு மொழி படங்கள்தான் இவரை திரையுலகிற்கு அறிமுகப்படுத்தியது என்றாலும் தமிழ் ரசிகர்கள் இவருக்கு நல்ல வரவேற்பினை அளித்ததால் தொடர்ந்து கோலிவுட் படங்களிலேயே கமிட் ஆகி வருகின்றார்.

தனுஷ் படத்தில் பிரியங்கா மோகன்..

பிரியங்கா மோகன் நடித்து வெளிவர உள்ள பெரிய படங்களுள் ஒன்று, கேப்டன் மில்லர். அருண் மாத்தீஸ்வரன் இயக்கும் இந்த படத்தில் தனுஷ் கதாநாயகனாக நடிக்கிறார். பிரியங்கா மோகனுக்கு இதுவரை இல்லாத அளவிற்கு இந்த படத்தில் முக்கியமான கதாப்பாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளதாம். இந்த படம், 2024 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ளது.

புதுப்பட டிரைலர்..

பிரியங்கா மோகனின் நடிப்பில் முதலில் வெளியான படம் டாக்டர் என்றாலும், அவர் நடித்த முதல் படம் ‘டிக்டாக்’. இந்த படம், 2016ஆம் ஆண்டே ரிலீஸாக இருந்தது. ஆனால், சில காரணங்களுக்காக இதன் ரிலீஸ் தள்ளிப்போய்க்கொண்டே இருந்தது. இந்த படத்தில் ராஜாஜி, சுஷ்மா ராஜ், மது சூதனன், வினோதினி, சஞ்சனா சிங் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். பிரியங்கா, இந்த படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடித்திருக்கிறார்.

படுக்கையறை காட்சி..

‘டிக்டாக்’ திரைப்படம் ஹாரர்-த்ரில்லர் பாணியில் எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் டிரைலர் சில நாட்களுக்கு முன்னர் வெளியானது. இதில் இடம் பெற்றிருந்த சில காட்சிகளில் பிரியங்கா படுக்கையறையில் ஒருவருடன் நெருக்கமாக இருக்கும் சீன்களும் இடம் பெற்றுள்ளது. இந்த படத்தில் நடிக்கும் போது பிரியங்கா சினிமாவில் வளர்ந்து வரும் கதாநாயகியாக இருந்ததால் இது போன்ற காட்சிகளில் நடித்திருக்கலாம் என கூறப்படுகிறது.

ரசிகர்களின் கோரிக்கை..

பிரியங்கா மோகனின் ‘டிக் டாக்’ பட டிரைலர் வெளியானதை தொடர்ந்து ரசிகர்கள் பலர் இப்படத்தை ரிலீஸ் செய்ய வேண்டாம் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர். காரணம், பிரியங்கா நடிப்பில் வெளியான படங்களில் இதுவரை இது போன்ற காட்சி எதுவம் இடம் பெற்றதில்லை. இப்போது 7 வருடங்களுக்கு முன்னர் எடுக்கப்பட்ட படம் வெளியானால், பிரியங்காவின் பெயர் கெட்டு விடுமோ என்று ரசிகர்கள் கலக்கத்தில் உள்ளனர். இதில் நடிகை பிரியங்கா, கீர்த்தனா என்ற பெயரில் நடித்துள்ளார்.

பிரியங்காவின் அடுத்தடுத்த படங்கள்..

கேப்டன் மில்லர் படத்தை தொடர்ந்து பிரியங்கா இரண்டு தெலுங்கு படத்திலும் ஒரு தமிழ் படத்திலும் நடிக்கிறார். பவன் கல்யாண் ஹீரோவாக நடிக்கும் ‘ஓஜி’ என்ற படத்திலும், நானியின் ‘சரிபோதா சனிவாரம்’ என்ற படத்திலும் நடிக்கிறார். இதையடுத்து ஜெயம் ரவி ஹீரோவாக நடிக்கும் ‘பிரதர்’ என்ற தமிழ் படத்தல் நடிக்க இருக்கிறார். இதன் படப்பிடிப்புகள் தொடர்ந்து நடைப்பெற்று வருகிறது.

Subscribe
Notify of
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x