Friday, May 17, 2024

பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள சலார் படத்தின் கதை..! பெரிய டுவிஸ்ட்..!

Prabhas Salaar Movie Story: டிசம்பர் 22ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் டிரைலர் டிசம்பர் 1ம் தேதி வெளியாகிறது. இந்நிலையில், சலார் Part 1 – Ceasefire படத்தின் கதை குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

by Talks Tamil
0 comment 121 views

லார் Part 1 – Ceasefire திரைப்படத்தின் டிரைலர்.

சலார் Part 1 – Ceasefire படத்தின் கதை இதுதான்.

சலார் படத்தின் முக்கிய அப்டேட்: வருகிற டிசம்பர் 22 ஆம் தேதி வெளியாகவுள்ள இந்த திரைப்படத்தின் டிரைலர் டிசம்பர் 1 ஆம் தேதி வெளியாகிறது. இந்நிலையில், சலார் Part 1 – Ceasefire திரைப்படத்தின் கதை குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

சலார் திரைப்படம்:

பாகுபலி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் சர்வதேச அளவில் புகழ் பெற்ற நடிகர் பிரபாஸ்,  தற்போது கே.ஜி.எஃப் படங்கள் மூலம் இந்தியளவில் முன்னணி இயக்குனராக உயர்ந்துள்ளார் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் சலார் Part 1 – Ceasefire திரைப்படத்தில் நடித்துள்ளார். Salaar Part 1: Ceasefire இந்தியத் திரையுலகில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம். இந்த படத்தின் அறிவிப்பு முதல் தற்போது வரை எதிர்பார்ப்பு குறையாமல் உள்ளது. இந்த படத்தில் பிரபாஸூடன் ஸ்ருதி ஹாசன், பிருத்விராஜ் சுகுமாரன் மற்றும் ஜெகபதி பாபு ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் டிசம்பர் 22ஆம் தேதி திரையரங்குகளில் திரைக்கு வரவுள்ளது.

சலார் Part 1 – Ceasefire படத்தின் கதை:

இந்நிலையில், சலார் Part 1 – Ceasefire படத்தின் கதை குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி சலார் படத்தில் பிரபாஸ் மற்றும் பிருத்விராஜ் இருவரும் சிறு வயது முதலே நண்பர்களாக இருப்பார்கள் என்றும் அவர்கள் இருவருக்கும் இடையே ஏற்படும் யுத்தம் தான் இந்த படத்தின் கதை என இயக்குனர் பிரஷாந்த் நீல் கூறியுள்ளார். இதனால் இந்த விஷயம் தற்போது படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பை இன்னும் அதிகரித்துள்ளது. இதனிடையே  இந்த படத்தின் கதையை கேட்ட பலர் இது போன்ற வந்திருக்கே என்று ஏகப்பட்ட ட்ரோல் மீம்கள் டிரெண்டாகி வருகின்றன.

சிவா இயக்கத்தில் அஜித் நடித்த விவேகம், சமீபத்தில் துல்கர் நடித்து வெளியான கிங் ஆஃப் கோதா உள்ளிட்ட பல படங்கள் இதே கதை தான் என்று கூறி வருகின்றனர்.

சலார் Part 1 – Ceasefire திரைப்படத்தின் டிரைலர்:

இதனிடையே தற்போது இந்த படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்து உள்ளது. அதன்படி சலார் படத்தின் டிரைலர் வருகிற டிசம்பர் 1 ஆம் தேதி இரவு 7.19 மணிக்கு ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இப்படத்தின் டீசரே மிகப்பெரிய அளவில் வைரலான நிலையில், தற்போது டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளதால், அதற்காக ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.

Subscribe
Notify of
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x