Saturday, February 3, 2024

வரவேற்க தயாராகும் தமிழக அரசு: தமிழகம் வரும் பிரதமர் மோடி!

PM Narendra Modi Visit Tamil Nadu: மூன்று நாள் ஆன்மீகம் பயணமாக நாளை தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி. கேலோ இந்தியா போட்டிகளை தொடங்கி வைத்த பிறகு, ஸ்ரீரங்கம், ராமேஸ்வரம் சென்று சாமி தரிசனம் செய்கிறார். பிரதமர் மோடியின் பயணத் திட்டத்தை குறித்து பார்க்கலாம்.

by Talks Tamil
0 comment 19 views

BJP Mission South: லோக்சபா தேர்தலுக்கு முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி ‘மிஷன் சவுத்’ திட்டத்தை தொடங்கியுள்ளார். அதேநேரத்தில் ராமர் கோயில் கும்பாபிஷேகம் ஜனவரி 22 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், பிரதமர் மோடி நாளை (ஜனவரி 19, வெள்ளிக்கிழமை) தமிழகம் வருகிறார். அதாவது தேர்தல் மற்றும் ஆன்மீகம் பயணமாக தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி மூன்று நாட்கள் தங்கும் அவர், கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைக்கிறார். அதன்பிறகு ஸ்ரீரங்கம், ராமேஸ்வரம் சென்று சாமி தரிசனம் செய்கிறார். இதன் காரணமாக பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளன.

தமிழகம் வரும் பிரதமர் மோடி

நாளை (ஜனவரி 19) மாலை 5 மணிக்கு சிறப்பு விமானம் மூலம் பெங்களூருவில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு வரும் பிரதமர் மோடியை முதல்வர் மு.க. ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என். ரவி உட்பட பலர் வரவேற்கின்றனர்.

பிரதமர் மோடியின் தமிழக பயணத் திட்டம் விவரம்

ஜனவரி 19 திட்டம்: 
– மாலை 5 மணிக்கு சிறப்பு விமானம் மூலம் சென்னை வருகை

– சென்னை விமான நிலையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி உள்ளிட்டோர் வரவேற்கின்றனர்.

– மாலை 5.20 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் ஐஎன்ஸ் அடையாறு கடற்படை தளத்திற்கு புறப்பட்டு செல்கிறார்.

– அடையாறு கடற்படை தளத்தில் இருந்து கார் மூலம் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கிற்கு செல்கிறார்.

– அங்கு கேலோ இந்தியா விளையாட்டு போட்டி தொடக்க விழாவை தொடங்கி வைக்கிறார்.

– அதன் பிறகு இரவு 7.45 மணிக்கு கார் மூலம் கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு செல்கிறார்.

– ராஜ் பவனில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். இதில் பாஜக நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர்.

– அதன்பிறகு இரவு ஆளுநர் மாளிகையில் தங்குகிறார்.

ஜனவரி 20 திட்டம்:
– கிண்டி ஆளுநர் மாளிகையில் இருந்து சென்னை விமான நிலையம் செல்கிறார்.

– காலை 9.30 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் இருந்து சிறப்பு விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் செல்கிறார்.

– திருச்சி விமான நிலையதில் இருந்து கார்க் மூலம் சாலை மார்க்கமாக ஸ்ரீரங்கம் செல்கிறார்.

– காலை 11 மணிக்கு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சாமி தரிசனம் செய்கிறார்.

– அங்கிருந்து கார் மூலம் மீண்டும் திருச்சி விமான நிலையம் செல்கிறார்.

– திருச்சி விமான நிலையத்தில் இருந்து மதுரை விமான நிலையம் செல்கிறார்.

– மதுரை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் ராமேஸ்வரம் செல்கிறார்.

– பிற்பகல் 2.05 மணிக்கு ராமேஸ்வரம் சென்றடையும் பிரதமர் கடலில் நீராடுகிறார்.

– பிற்பகல் 2.10 மணிக்கு ராமநாத சுவாமி கோயிலில் சாமி தரிசனம் செய்கிறார்.

– அதன் பிறகு ஸ்ரீராமகிருஷ்ணர் மடத்திற்கு இரவு தங்குகிறார்.

ஜனவரி 21 திட்டம்
– காலை 10.05 மணிக்கு ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடுகிறார்.

– பின்னர் காரில் சாலை மார்க்கமாக தனுஷ்கோடி அரிச்சல்முனைக்கு செல்கிறார்.

– காலை 10.30 மணிக்கு கோதண்டராமர் கோவிலில் சாமி தரிசனம் செய்கிறார்.

– அதன்பிறகு ராமர் பாலம் உள்ள இடத்தை பார்வையிடுகிறார்.

– ராமேஸ்வரத்தில் இருந்து புனித நீரை எடுத்துக்கொண்டு மதுரை விமான நிலையம் செல்கிறார்.

– மதுரை விமான நிலையத்தில் இருந்து சிறப்பு விமானம் மூலம் டெல்லி செல்கிறார்.

– அடுத்த நாள் (ஜனவரி 22) அயோத்தி ராமர் கோவிலுக்கு சென்று கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்கிறார்.

லோக்சபா தேர்தல்: பாஜகவின் ‘மிஷன் சவுத்’ திட்டம் 

லோக்சபா தேர்தல் மற்றும் ராமர் கோயில் கும்பாபிஷேகம் விழாவையொட்டி தென் மாநிலங்களுக்கு பிரதமர் மோடி பயணம் மேற்கொண்டு உள்ளார். அந்த வரிசையில் மூன்றாவது மாநிலமாக தமிழ்நாட்டிக்கு நாளை வருகிறார். முன்னதாக, பிரதமர் மோடி ஜனவரி 16-17 ஆகிய இரண்டு நாட்கள் ஆந்திரா மற்றும் கேரளாவுக்குச் சென்றார். பிரதமர் மோடி தொடர்ந்து தென் மாநிலங்களுக்கு பயணம் செய்வது பாஜகவின் ‘மிஷன் சவுத்’ திட்டத்தின் ஒரு அங்கம் என்று கூறப்படுகிறது.

Subscribe
Notify of
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x