Saturday, April 13, 2024

மாதம் ரூ.2 லட்சம் வருமானம்.. ஆட்டோ-வை பீட்சா ஹப் ஆக மாற்றிய மொஹபத் தீப் சிங்..!

by Talks Tamil
0 comment 266 views

கொரோனாவின் வருகைக்கு பிறகு சொந்த தொழில் மீதான ஆர்வம் கணிசமாக அதிகரித்துள்ளது எனலாம். குறிப்பாக நல்ல பணியில் இருந்து வந்த ஊழியர்கள் கூட, பணியினை விட்டு விட்டு சொந்தமாக தொழில் செய்வதை பல இடங்களில் பார்க்க முடிகிறது.

தாங்கள் பணியில் மேற்கோண்ட சவால்களை அனுபவமாக மாற்றியவர்களுக்கு, தங்களது தொழிலில் புதிய புதிய வணிக யுக்திகள், மக்களை கவரும் விஷயங்கள் என பலவும் கவனிக்க வேண்டிய விஷயங்களாக உள்ளன. கொரோனா காலத்தில் வேலை போச்சு அப்படி கொரோனா காலத்தில் வேலையிழந்தவர் தான் மொஹபத் தீப் சிங் சீமா. பஞ்சாப்-ஐ சேர்ந்தவர். இவரின் மனைவி மன்ப்ரீத் கவுர். நீண்டகாலமாக எனது கணவர் ஒரு உணவு டிரக்கினை நடத்துகிறார் என்பதை நான் மக்களிடம் சொல்வதையே தவிர்த்து வந்தேன். ஏனெனில் ஆரம்பத்தில் எனக்கு எதிர்மறையான கருத்துகள் வந்த வண்ணம் இருந்தன. இதனால் நான் மனதளவில் சோர்வடைந்தேன்.

தி பீட்சா பேக்டரி கொரோனா காலத்தில் எனது கணவர் வேலையை இழந்துவிட்டார். அதன் பிறகு பஞ்சாப்பில் உள்ள தனது சொந்த கிராமத்துக்கு சென்று தி பீட்சா பேக்டரி என்ற உணவு டிரக்கினை நிறுவினார். இதில் தனித்துவமான கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் நீங்கள் வெறும் 199 ரூபாயில் வரம்பற்ற பீட்சாக்கள், பர்கர்கள், ஃப்ரைகளை அனுபவிக்க முடியும்.

பெருமையளிக்கிறது ஆகஸ்ட் 2020ல் 4 லட்சம் ரூபாய் முதலீட்டில் இதை தொடங்கிய மொஹபத் , இன்று மாதத்திற்கு சுமார் 2 லட்சம் ரூபாய் வரையில் வருமானம் ஈட்டி வருவதாக தெரிவித்துள்ளார். இன்று மக்கள் என்னை அடையாளம் கண்டு கொண்டுள்ளனர். எனது கணவர் செய்யும் பீட்சாக்களை வந்து ருசிக்கின்றனர். அவர் விரும்பிய ஒன்றுடன் இணைந்து, இன்று இந்தளவுக்கு வந்துள்ளது எனக்கு மிகவும் பெருமையளிக்கும் ஒன்றாக உள்ளது என மன்ப்ரீத் கூறுகிறார்.

Subscribe
Notify of
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x