Wednesday, May 15, 2024

விண்ணைத் தொடும் வெங்காயம் விலை! 2 மாதம் ஆகும் விலை குறைய?

Onion Prices Hike: கோயம்பேடு சந்தையில் பெரிய வெங்காயம் ரூ. 70 எனவும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ ரூ. 110 பாய் முதல் ரூ. 120 வரை விற்பனை செய்யப்படுகிறது. டெல்லியில் கிலோ ரூ.90க்கு விற்பனை. வரும் நாட்களில் வெங்காயத்தின் விலை ரூ.100-ஐ தாண்டும்.

by Talks Tamil
0 comment 198 views

நாடு முழுவதும் வெங்காயத்தின் விலை கிடுகிடுவென உயர்வு

வெங்காயத்தின் விலை கிலோவுக்கு ரூ. 100 வரை உயரும்.

சில மாதங்களுக்கு முன்பு தக்காளியின் விலையும் இதேபோல் உயர்ந்து.

வெங்காய விலை பட்டியல்: விலை: வெங்காயத்தை உரித்தால் தான் கண்ணீர் வரும் என்று இல்லை. அதன் விலையை கேட்டாலே கண்ணீர் வரும் என்ற நிலையில் கடந்த சில நாட்களாக விண்ணைத் தொடும் அளவுக்கு வெங்காயத்தின் விலை அதிகரித்துள்ளது. நவராத்திரிக்குப் பிறகு, நாடு முழுவதும் வெங்காயத்தின் விலை கிடுகிடுவென உயரத் தொடங்கியது. குறிப்பாக வட இந்தியாவில் நேற்று (அக்டோபர் 27 வெள்ளிக்கிழமை) டெல்லி சந்தையில் வெங்காயம் ஒரு கிலோ ரூ. 90 க்கு விற்கப்பட்டது, மிக விரைவில் வெங்காயத்தின் விலை நூறு ரூபாய்யை கடக்கும் எனக் கூறப்படுகிறது. ஏனெனில் வெங்காயத்தின் விலை ஒரு கிலோவுக்கு தினமும் 10 முதல் 20 ரூபாய் வரை உயர்ந்து வருகிறது. டெல்லியில் வெங்காயத்தின் விலை விரைவில் 100 ரூபாயை எட்டும் என கடைக்காரர்கள் தெரிவித்துள்ளதால் பொதுமக்கள் வேதனை அடைந்துள்ளனர்.

கோயம்பேடு சந்தையில் உயர்ந்த வெங்காயத்தின் விலை

தற்போது வெங்காய சீசன் முடிந்துள்ளதால், வரத்து குறைந்துள்ளது. அதன் காரணமாக விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. சென்னையில் உள்ள கோயம்பேடு சந்தையில் (Koyambedu Market) போன வாரம் பெரிய வெங்காயம் கிலோ ரூ.20 வரை விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது ரூ. 70 வரை விற்பனை செய்யப்படுகிறது. வரும் நாட்களில் இது மேலும் உயரலாம் எனக் கூறப்படுகிறது. அதேபோல கோயம்பேடு சந்தையில் சின்ன வெங்காயம் ஒரு கிலோ ரூ. 110 பாய் முதல் ரூ. 120 வரை விற்பனை செய்யப்படுகிறது.

டெல்லியின் ஆசாத்பூர் மண்டியின் விலை நிலவரம்

டெல்லியில் உள்ள ஆசாத்பூர் மண்டியில் ஒரு வாரத்திற்கு முன்பு கிலோ ரூ.20 முதல் ரூ.30 வரை விற்கப்பட்ட வெங்காயம், ஓரிரு நாட்களுக்கு முன்பு ரூ.50 முதல் ரூ.60 வரை விற்பனையானது. இன்று விலை, 70 முதல் 80 ரூபாய் விற்கப்படுகிறது. தேவை அதிகமாக இருக்கிறது, ஆனால் வெங்காயத்தின் வரத்து நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. அடுத்த 2 மாதங்களில் வெங்காயம் விலை மேலும் உயர வாய்ப்புள்ளத என டெல்லி மண்டி நிர்வாகிகள் கூறுகின்றனர்.

வெங்காயம் விலை உயர்வால் மக்கள் கடும் அவதி

சில இடங்களில் மழை குறைவாகவும், சில இடங்களில் அதிக மழையாலும் வெங்காய பயிர்கள் சேதமடைந்துள்ளன. இதனால் தான் வெங்காயத்தின் விலை தாறுமாறாக உயர்ந்து காணப்படுகிறது. விலை உயர்வால் 5 கிலோ வெங்காயம் வாங்கி வந்த வாடிக்கையாளர்கள் தற்போது 2 கிலோ, 1 கிலோ என வெங்காயம் வாங்கி செல்கிறார்கள் என கடைக்காரர்கள் தெரிவிக்கின்றனர்.

வெங்காயத்தின் விலை உயர்வுக்கு காரணம் என்ன?

கர்நாடகா மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மழை இல்லாததால் வெங்காயம் விளைச்சல் எதிர்பார்த்த அளவு இல்லாததால் வெங்காயம் சந்தைக்கு வரவில்லை. வரத்து குறைவாகவும், தேவை அதிகமாகவும் இருக்கும்போது. விலை அதிகரிப்பது இயற்கையானது. சில மாதங்களுக்கு முன்பு தக்காளியின் விலையும் இதேபோல் உயர்ந்து, விலைவாசி உயர்வால் மக்கள் அவதிப்பட்டு, தற்போது வெங்காயம் மக்களை கண்ணீர் வர வைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

வெங்காயத்தின் விலை எப்பொழுது குறையும்?

அடுத்த இரண்டு அல்லது இரண்டரை மாதங்கள் வரை வெங்காயத்தின் விலை குறைய வாய்ப்பில்லை என்றும், மாறாக வெங்காயத்தின் விலை கிலோவுக்கு ரூ. 100 வரை உயரும் என்றும், ஜனவரி 15 ஆம் தேதிக்குப் பிறகு வெங்காயத்தின் விலை சற்று குறையும் என்றும் நிபுணர்கள் கருதுகின்றனர்.

Subscribe
Notify of
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x