Wednesday, May 15, 2024

NCERT: 10, 11, 12ம் வகுப்பு பாட புத்தகத்தில் இருந்து சில பாடங்கள் நீக்கம்!

by Talks Tamil
0 comment 298 views

அனைத்து வகுப்புகளுக்கும் தேசிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் 2024ஆம் ஆண்டு முதல் புதிய பாடப் புத்தகங்கள் அறிமுகம் செய்யப்படலாம் என்ற தகவலை மத்தியக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

NCERT எனப்படும் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் சார்பாக பள்ளி மாணவர்களுக்குப் பாடப்புத்தகங்கள் தயாரிக்கப்பட்டு, விநியோகம் செய்யப்படுகின்றன. இந்த நிலையில், தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 12 ஆம் வகுப்பு பாடப்புத்தகங்களில் இருந்து பல அத்தியாயங்களை நீக்கியுள்ளது. இதில், வரலாறு, குடிமையியல் மற்றும் இந்தி பாடத்திட்டத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ‘பனிப்போர் காலம்’ மற்றும் ‘உலக அரசியலில் அமெரிக்க மேலாதிக்கம்’ ஆகிய அத்தியாயங்கள் குடிமையியல் பாடப்புத்தகத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளன என NCERT தெரிவித்துள்ளது.

பாட புத்தகத்தில் இருந்த முகலாய சாம்ராஜ்யம் தொடர்பான அத்தியாயம் (முகலாய தர்பார், 16 மற்றும் 17 ஆம் நூற்றாண்டுகள்) இந்திய வரலாறு – பகுதி II) என்ற பாடம் வரலாற்று புத்தகத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. இது தவிர ஹிந்தி புத்தகத்தில் இருந்து சில பத்திகள் மற்றும் கவிதைகள் நீக்கப்பட்டுள்ளன. புதுப்பிக்கப்பட்ட பாடத்திட்டம் நடப்பு கல்வி அமர்வு முதல் அதாவது 2023-24 முதல் செயல்படுத்தப்படும் என்று NCERT தெரிவித்துள்ளது.

மேலும், ‘சுதந்திர இந்தியாவில் அரசியல்’ புத்தகத்தின் இரண்டு அத்தியாயங்கள் நீக்கப்பட்டுள்ளன, அதாவது – ‘மக்கள் இயக்கத்தின் எழுச்சி’ மற்றும் ‘தனி கட்சி ஆதிக்கத்தின் சகாப்தம்’. இந்த அத்தியாயங்களில் பாரதிய ஜனசங்கம், சோசலிஸ்ட், கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸின் ஆதிக்கம் போன்றவை கற்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சில காரணங்களால் பாடப்புத்தகங்கள் மாற்றப்பட்டுள்ளன. ஏற்கனவே மற்ற வகுப்புகளில் கற்பிக்கப்பட்ட பாடங்கள் அல்லது மாணவர்களுக்கு மிகவும் கடினமாக உள்ள பாடங்கள், மாணவர்கள் இப்போது தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமில்லாத விஷயங்கள் ஆகியவை பாடங்களில் இருந்து நீக்கப்பட்டுள்ளது என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரவிருக்கும் 2023-24 கல்வியாண்டில், மாநிலப் பள்ளிகள் NCERT புத்தகங்களின் திருத்தப்பட்ட பதிப்பைக் கடைப்பிடிக்கும். முன்னதாக, கடந்த ஆண்டு NCERT பாடத்திட்டங்களை திருத்த முடிவு செய்யப்பட்டதாக, கூடுதல் தலைமைச் செயலர் (அடிப்படை மற்றும் இடைநிலை) தீபக் குமார் தெரிவித்துள்ளார். பாடத்திட்டத்தில் இருந்து சில பகுதிகளை நீக்க முடி செய்யப்பட்டுள்ளது. அதில் முகலாய பேரரசு பற்றிய பாடங்கள் 12 ஆம் வகுப்பு பாடப்புத்தகங்களில் இருந்து நீக்கப்படுகின்றன கூறினார்.

2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) ஏப்ரல் மாதத்தில் அதன் பாடத்திட்டங்களை ஆராய்ந்து சில மாற்றங்கள் அறிவிக்கப்பட்டன. சிபிஎஸ்இயின் கீழ் உள்ள பள்ளிகளைத் தவிர, சில மாநில வாரியங்களும் என்சிஇஆர்டி பாடப்புத்தகங்களைப் பயன்படுத்துகின்றன என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. முன்னதாக அனைத்து வகுப்புகளுக்கும் தேசிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் 2024ஆம் ஆண்டு முதல் புதிய பாடப் புத்தகங்கள் அறிமுகம் செய்யப்படலாம் என்ற தகவலை மத்தியக் கல்வித்துறை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Subscribe
Notify of
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x