Tuesday, May 28, 2024

UHD Smart TV: வெறும் ரூ. 7,000-க்கு 42 இஞ்ச் அசத்தல் ஸ்மார்ட் டிவி!!

by Talks Tamil
0 comment 267 views

UHD Smart TV: அல்ட்ரா எச்டி டிவி வாங்கும் ஆசை இருந்தாலும், உங்கள் பட்ஜெட் அதற்கு இடமளிக்கவில்லை என்றால், உங்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு உள்ளது. 

UHD ஸ்மார்ட் டிவி: ஸ்மார்ட் டிவி பிரியர்களுக்கு ஒரு சூப்பர் செய்தி!! பொதுவாக அல்ட்ரா எச்டி டிவியை வாங்குவது சில நேரங்களில் பலரின் பட்ஜெட்டில் பொருந்தாத விஷயமாக இருக்கலாம். அல்ட்ரா எச்டி டிவி-கள் சாதாரண ஸ்மார்ட் டிவியிலிருந்து முற்றிலும் மாறுபட்டவையாகும். மேலும் இவை மிக நேர்த்தியான, அடுத்த நிலையிலான காட்சி அனுபவத்தை வழங்குகின்றன. இந்த ஸ்மார்ட் டிவிகளின் விலையும் மிக அதிகமாக இருக்கும்.

வாடிக்கையாளர்கள் 32 அங்குல அளவில் அல்ட்ரா எச்டி டிவி-ஐ வாங்கினால், அதற்கு சுமார் ரூ. 17,000 முதல் ரூ. 20,000 வரை செலுத்த வேண்டியிருக்கும். 42 அங்குல அல்ட்ரா எச்டி டிவி-க்கு ரூ. 25,000 முதல் ரூ. 40,000 வரை செலுத்த வேண்டியிருக்கும். நிறுவனத்தைப் பொறுத்து அதன் விலை மாறுபடலாம்.

அல்ட்ரா எச்டி டிவி வாங்கும் ஆசை இருந்தாலும், உங்கள் பட்ஜெட் அதற்கு இடமளிக்கவில்லை என்றால், உங்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு உள்ளது. இதன் மூலம் அல்ட்ரா எச்டி டிவியை 32 இன்ச் டிவி-யின் விலையை விட குறைவான விலைக்கு வாங்க முடியும். இதை பற்றி இந்த பதிவில் தெளிவாக காணலாம்.

நீங்கள் பிராண்டட் அல்ட்ரா எச்டி டிவியை வாங்கினால், ஆரம்ப விலையாக ரூ. 40,000 வரையிலான ஆரம்ப தொகையை செலுத்த வேண்டியிருக்கும். ஆனால் மறுபுறம், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட அல்ட்ரா எச்டி டிவியை வாங்கினால், இதற்கு நீங்கள் ரூ. 7000 என்ற துவக்க தொகையை செலுத்தினால் போதும்.

இவை இந்தியாவிலேயே தயாரிக்கப்படுகின்றன. ஆகையால் இறக்குமதி வரி போன்றவற்றை இவற்றுக்கு செலுத்த வேண்டிய அவசியமில்லை, மேலும் அவை மிகவும் மலிவு விலையில் விற்கப்படுவதற்கு இதுவே காரணமாகும். அல்ட்ரா எச்டி டிவிகள் உங்களுக்கு அடுத்த நிலை காட்சி அனுபவத்தை வழங்குகின்றன. இதில் நீங்கள் யதார்த்த அனுபவத்தைப் பெறுவீர்கள்.

 

Subscribe
Notify of
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x