Sunday, May 19, 2024

தமிழகத்தில் தொடங்கிய பருவ மழை? தொடர் மழையால் பள்ளிகளுக்கு விடுமுறை!

by Talks Tamil
0 comment 288 views

தொடர் மழை காரணமாக நீலகிரியில் 4 தாலுக்கா பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் அம்ரித் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

நீலகிரியில் தொடர்ந்து பெய்து வரும் மழை. பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து உத்தரவு. மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.

நீலகிரியில் உதகை கூடலூர் பந்தலூர் குந்தா உள்ளிட்ட பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது, இதன் காரணமாக இந்த நான்கு தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. உதகை அருகே நீர் பிடிப்பு பகுதிகளான அவலாஞ்சி, எமரால்டு, மஞ்சூர் பகுதிகளில் கனமழையும் மற்றும் உதகை, அதன் சுற்றுப்பகுதிகளில் தொடர்மழையும் பெய்து வருகிறது. முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கையாக சாலைகளில் ஆபத்தான முறையில் உள்ள மரங்கள் அகற்றப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் காற்றுடன் கூடிய தொடர் மழை காரணமாக உதகை, குந்தா, கூடலூர், பந்தலூர், உள்ளிட்ட 4 தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு (6.07.23) இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அம்ரித் அறிவித்துள்ளார். காற்றுடன் தொடர் மழை பெய்து வருவதால் மரங்களுக்கு கீழ் வாகனங்களை நிறுத்தவோ பொதுமக்கள் நிற்கவோ கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மழையின் காரணமாக கடும் குளிர் நிலவுகிறது, இதனால் பள்ளி குழந்தைகள் சிரமத்துடன் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கோவை மாவட்டம் வால்பாறையில் கனமழை காரணமாக இன்றும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு.  கோவை மாவட்டம் வால்பாறை தவிர்த்து வேறு பகுதிகளில் இன்று கன மழைக்கு வாய்ப்பில்லை என்பதால் அனைத்து பகுதிகளிலும் பள்ளி கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படும்.  இது தவிர தூத்துக்குடி மன்னார் வளைகுடா கடல் பகுதியில் வீசி வரும் பலத்த காற்று காரணமாக மூன்றாவது நாளாக விசைப்படகு மற்றும் நாட்டுப் படகு பைபர் படகு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. 250க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் 600க்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகள் 500க்கும் மேற்பட்ட பைபர் படகுகள் மீன்பிடி துறைமுகங்களில் கரையில் நிறுத்திவைப்பு.

வாங்க கடல் பகுதி மன்னார் வளைகுடா மற்றும் குமரி கடல் பகுதியில் காற்று 65 கிலோ மீட்டர் வேகத்தில் சுழல் காற்றாக வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என மூன்றாவது நாளாக மீன்வளத்துறை மீனவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.  இதன் காரணமாக தூத்துக்குடி விசைப்படகு மீன்பிடி துறைமுகத்தில் 250க்கும் மேற்பட்ட விசைபடகுகளும் தூத்துக்குடி திரேஷ் புரம் நாட்டுப் படகு மீன்பிடி துறைமுகத்தில் 600க்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதே போன்று இனிகோ நகர் புதிய துறைமுக கடற்கரை உள்ளிட்ட பகுதிகளில் 500க்கும் மேற்பட்ட பைபர் படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக 10,000க்கும் மேற்பட்ட மீனவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.

Subscribe
Notify of
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x