Saturday, May 18, 2024

சென்னையில் மிக்ஜாம் புயல் பாதிப்பு: நடிகர் விஜய் & பார்த்திபனும் வைத்த கோரிக்கை..!

Michaung Cyclone: ‘மிக்ஜாம்’ புயல் நிவாரண பணிகளை மேலும் தீவிரப்படுத்த கூடுதலாக அமைச்சர்களை நியமனம் செய்துள்ளது தமிழக அரசு.

by Talks Tamil
0 comment 103 views

பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய மிக்ஜாம் புயல்.

பல இடங்களில் கழுத்தளவு தண்ணீர் தேங்கி உள்ளது.

உணவு, தண்ணீர் இன்றி மக்கள் தவிப்பு.

Michaung Cyclone: சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மிக்ஜாம் புயலின் தாக்கம் அதிகளவில் உள்ளது.  மழை நின்று 3 நாட்கள் ஆகியும் பல இடங்களில் தண்ணீர் வற்றாமல் உள்ளது.  குறிப்பாக வேளச்சேரி, மடிப்பாக்கம், ஆதம்பாக்கம் போன்ற பகுதிகளில் மலாய் நீர் சூழ்ந்துள்ளதால் மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.  ஹெலிகாப்டர் மூலம் உணவு வழங்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது.

அரசு தவிர பலரும் தாமாக முன்வந்து தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர்.  பால், தண்ணீர் போன்ற அத்தியாவசிய பொருட்களுக்கு பஞ்சம் ஏற்பட்டுள்ளது.  பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு தொடர்ந்து விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது.  இதனால் வெளிமாநில மாணவர்கள் தங்கள் ஊர்களுக்கு படையெடுத்து வருகின்றனர்.  பல நட்சத்திரங்களும் தங்களால் ஆனா உதவிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் விஜய் மிக்ஜாம் காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் அரசுடன் இணைந்து உதவி செய்யுமாறு தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை கேட்டு கொண்டுள்ளார்.  தனது X தளத்தில் பதிவிட்ட விஜய், “சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் “மிக்ஜாம்” புயல் கனமழை காரணமாக குழந்தைகள் பெண்கள் முதியவர்கள் உட்பட பொதுமக்கள்  பெரும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் குடிநீர் மற்றும் உணவின்றியும் போதிய அடிப்படை வசதிகளின்றியும் தவித்து வருவதாக செய்திகள் வருகின்றன.

வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதியில் இருந்து மீட்க உதவி கேட்டு இன்னமும் நிறைய குரல்கள் சமூக வலைத்தளங்கள் வழியாக வந்த வண்ணம் உள்ளன.  இவ்வேளையில் மக்கள் இயக்க நிர்வாகிகள் அனைவரும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு அரசு முன்னெடுக்கும் மீட்பு பணிகளில் தன்னார்வலர்களாக தங்களை ஈடுபடுத்திக்கொண்டு இயன்ற உதவிகளை செய்யுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன். #கைகோர்ப்போம் துயர்துடைப்போம்” என்று கேட்டுக்கொண்டுள்ளார்.  இது உதவி கிடைக்காமல் இருக்கும் மக்களிடம் நம்பிக்கையை வளர்த்துள்ளது.

நடிகரும், இயக்குனருமான பார்த்திபனும் தன்னால் ஆனா உதவிகளை செய்து வருகிறார்.  “த(க)ண்ணீரும் சோகமும் வடியும் வரை… இயன்றதை அனைவரும் செய்வோம். இன்று மதியம் சைதை பனகல் மாளிகை அருகே, சுவையான உணவு வழங்கினோம்.அவர்கள் பசியின் தாக்கம் என்னைத் தின்றது.நான் ஒரு குட்டியானை எனப்படும் மூனேமுக்கால் சக்கர வாகனத்தில் சென்றேன்.

எனவே சுருங்கிவிட்டது என் பயணமும் பயனாளிகளும். படகு இருந்தால் மட்டுமே பல பகுதிகளுக்கு செல்ல முடியும் ஆகையால் நாளை அதற்கான முயற்சி. நாளைய விஞ்ஞான வளர்ச்சியை பெருமையாக பார்க்கும் நாம்,அதையெல்லாம் துடைத்து தூர போட்டுவிட்டு, தனியொருவனுக்கு(அதுவும் தண்ணீர் வயிறளவு ஓடும் போது)உணவில்லையெனில்….. வெட்கக்கேடு! ஜெய்ஹிந்த்!” என்று தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார்.

Subscribe
Notify of
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x