Sunday, April 21, 2024

Manimegalai: குக் வித் கோமாளியை விட்டு விலகும் முக்கிய கோமாளி… திடீர் அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சி!

by Talks Tamil
0 comment 268 views

Manimegalai Quits CWC Show: குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சியில் இருந்து அதன் முக்கிய கோமாளி ஒருவர் இன்றைய எபிசோட்தான் தனது கடைசி எபிசோட் என அறிவித்துள்ளார். 

Cooku With Comali Season Four: குக் வித் கோமாளி தொடர்தான் தற்போது இளசுகள் முதல் அனைத்து தரப்பினருக்குமான முழு பொதுதுபோக்கு நிகழ்ச்சியாக இருக்கிறது. சமையல் நிகழ்ச்சியை புதுவிதமாக முயற்சித்து, அதனை தற்போது நான்காவது சீசன் வரை கொண்டு வந்திருப்பதன் மூலம், தொடரின் வெற்றியையும், வீச்சையும் நீங்கள் தெரிந்துகொள்ள முடியும்.

அந்த தொடரில் சமையல்கலை வல்லுநர்களான செஃப் தாமு, செஃப் வெங்கடேஷ் ஆகியோரின் கூர்மையான தீர்ப்புகள் முதல் அதில் பங்கேற்கும் போட்டியாளர்கள் வரை அனைத்து அம்சங்களும் ரசிகர்களை தொடர்ந்து ஈர்த்து வருகிறது என கூறலாம். சனி, ஞாயிறு தினங்களில் வரும் அந்த ஒருமணிநேர எபிசோட்களை பார்க்க தொலைக்காட்சியிலும், மொபைலிலும் அனைவரும் மூழ்கிவிடுவார்கள்.

மணிமேகலை விலகல்!

அத்தகைய வெற்றிக்கு பிரதான காரணம் என்னவென்றால், அதில் வரும் கோமாளிகள்தான். குறிப்பாக, புகழ், பாலா, மணிமேகலை, சுனிதா, ஷிவாங்கி, குரேஷி என இவர்களின் கூட்டணிதான் கடந்த மூன்று சீசன்களையும் தாங்கிவந்தது. மூன்று சீசன்களில், கடந்த சீசனில்தான் சற்று சுணக்கம் தெரிந்தது. காரணம், அதில் பாதி எபிசோட்களில் புகழ் இருந்திருக்க மாட்டார். இந்த சீசனில் புகழ் திரும்பியிருக்கிறார் என்றாலும், பாலா தற்போதுவரை தோன்றவில்லை என்பதால் ரசிகர்கள் சற்று ஏமாற்றத்தில் உள்ளனர்.

இந்நிலையில், இந்த வரிசையில், தான் குக் வித் கோமாளியில் இருந்து விலகுவதாக மணிமேகலை அறிவித்துள்ளார். இன்றைய தினம் ஒளிப்பரப்பாகும் எபிசோட்தான் தனது கடைசி எபிசோட் என்றும் அவர் கூறியுள்ளது ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்துள்ளது.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவில்,”குக் வித் கோமாளியின் எனது கடைசி எபிசோட் இன்று. “நானே வருவேன்” கெட்-அப்பில் “நான் வரமாட்டேன்” என்று அறிவிக்கிறேன். 2019ஆம் ஆண்டில், முதல் சீசனில் இருந்து குக்கு வித் கோமாளி தொடரில் எனது அனைத்து பெர்பாமேன்ஸ்களுக்கும் நீங்கள் அனைவருமே அபரிமிதமான அன்பை பொழிந்திருக்கிறீர்கள்.

 

‘அன்புடன் மணி’

அனைத்திருக்கும் நான் நன்றிகடன் பட்டுள்ளேன். எனக்கு வழங்கப்பட்ட வாய்ப்புகள் மற்றும் சூழ்நிலைகளில் சிறந்தவராக இருக்க நான் எப்போதும் கூடுதல் முயற்சி எடுக்கிறேன். குக்கு வித் கோமாளி மூலம் உங்கள் அனைவரையும் மகிழ்விப்பதில் நான் சிறப்பாக செயல்பட்டேன் என்று நம்புகிறேன்.

உங்கள் அனைவரிடம் இருந்தும் நான் பெற்ற அன்பு எதிர்பாராதது. நான் என்ன செய்தாலும் அதே அன்பை உங்களிடம் எதிர்பார்க்கிறேன். அன்புடன் மணி” என குறிப்பிட்டுள்ளார். இதன்மூலம், இந்த சீசனில் மணிமேகலையும் இடம்பெற மாட்டார் என்பது உறுதியாகியுள்ளது. இது ஒட்டுமொத்த குக்கு வித் கோமாளி ரசிகர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இனி வெள்ளித்திரை?

மேலும், குக் வித் கோமாளியில் இருந்து வெளியேறி, மணிமேகலை சினிமாவில் கிடைத்திருக்கும் வாய்ப்பில் நடிக்க இருக்கிறார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. சின்னத்திரையில் இனி காணாவிட்டாலும், அவர் வெள்ளித்திரையை நிச்சயம் ஒருநாள் ஆள்வார் என அவரது ரசிகர்கள் தங்களின் வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர். நீண்ட காலமாக தொலைக்காட்சி தொகுப்பாளராக பணியாற்றிய மணிமேகலை, தற்போது பட்டிமன்ற பேச்சாளராகவும் அறியப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Subscribe
Notify of
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x