Saturday, May 18, 2024

செஸ் ஒலிம்பியாட்: 3வது சுற்றில் மேக்னஸ் கார்ல்சனின் நார்வே அணி அதிர்ச்சி தோல்வி

by Talks Tamil
0 comment 279 views

44வது செஸ் ஒலிம்பியாட் தொடரின் மூன்றாவது சுற்றில் உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்சனின் நார்வே அணியும், பலம் வாய்ந்த அமெரிக்கா பெண்கள் அணியும் அதிர்ச்சி தோல்வியை சந்தித்துள்ளது.

44வது செஸ் ஒலிம்பியாட் தொடரின் மூன்றாவது சுற்று போட்டிகள் நேற்று விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளன,முதல் இரண்டு சுற்றுகளில் பலம் வாய்ந்த அனைத்து அணிகளும் எளிதாக வெற்றி பெற்று வந்தாலும் மூன்றாவது சுற்றில் உலகின் நம்பர் 1 வீரர் மேக்னஸ் கார்ல்சனின் நார்வே அணி இத்தாலி அணியிடம் அதிர்ச்சி தோல்வியை சந்தித்துள்ளது.

நார்வே அணிக்காக 3வது மற்றும் 4வது வீரர்களாக களமிறங்கிய கிறிஸ்டியன்சன் மற்றும் ஹம்மர் இருவருமே இத்தாலி அணிக்கு எதிரான போட்டியில் முதலில் தோல்வி அடைய முக்கிய வீரர்களாக இருக்கும் மேக்னஸ் கார்ல்சன் மற்றும் ஆர்யன் தாரி இருவரும் வெற்றி பெற்று போட்டியை சமன் செய்வார்கள் என எதிர்பார்த்த நிலையில் இருவருமே தங்களுடைய போட்டிகளை டிரா செய்ய 3:1 என்ற புள்ளி கணக்கில் இத்தாலி அணி பலம் வாய்ந்த நார்வே அணியை தோற்கடித்தனர்.

இதேபோல மகளிர் பிரிவில் பலம் வாய்ந்த அமெரிக்க அணியை மங்கோலியா அணி 3-1 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளனர்.

Subscribe
Notify of
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x