Thursday, May 16, 2024

LPG Gas Cylinder Price: உஜ்வாலா திட்ட சிலிண்டர் மானியம் உயர்வு, விலை ரூ.100 குறைப்பு

LPG Gas Cylinder Price Cut for PMUY Beneficiaries: பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா (PMUY) பயனாளிகளுக்கான மானியத் தொகையை ஒரு எல்பிஜி சிலிண்டருக்கு 200 ரூபாயில் இருந்து 300 ரூபாயாக மத்திய அரசு உயர்த்தியுள்ளது.

by Talks Tamil
0 comment 276 views

உஜ்வலா திட்ட பயனாளிகளுக்கு நல்ல செய்தி.

மானியத் தொகையை ஒரு எல்பிஜி சிலிண்டருக்கு 200 ரூபாயில் இருந்து 300 ரூபாயாக மத்திய அரசு உயர்த்தியுள்ளது.

மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் புதன்கிழமை இதை தெரிவித்தார்.

LPG Gas Cylinder Price Cut for PMUY Beneficiaries: உஜ்வலா திட்ட பயனாளிகளுக்கு நல்ல செய்தி!!  பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா (PMUY) பயனாளிகளுக்கான மானியத் தொகையை ஒரு எல்பிஜி சிலிண்டருக்கு 200 ரூபாயில் இருந்து 300 ரூபாயாக மத்திய அரசு உயர்த்தியுள்ளது. மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் புதன்கிழமை  இதை தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளின் விவரங்களை பற்றி கூறியபோது அவர் இந்த செய்தியை அளித்தார். முன்னதாக, 200 ரூபாய் மானியத்துடன், மானியத்துடன் கூடிய எல்பிஜி சிலிண்டரின் விலை, 703 ரூபாயாக இருந்தது. தற்போது, மானியம் மேலும், 100 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளதால், உஜ்வாலா திட்டத்தின் கீழ், மானியம் வழங்கப்படும், எல்பிஜி சிலிண்டரின் விலை, 603 ரூபாயாக குறையும்.

இதுகுறித்து அனுராக் தாக்கூர் கூறுகையில், “பிரதம மந்திரி உஜ்வலா யோஜனா திட்ட பயனாளிகளுக்கான மானியத் தொகையை எல்பிஜி சிலிண்டருக்கு (LPG Gas Cylinder) 200 ரூபாயில் இருந்து 300 ரூபாயாக அரசு உயர்த்தியுள்ளது” என்றார்.

“கடந்த ஒன்பது ஆண்டுகளில் பெண்கள் மற்றும் ஏழைகளின் நலனுக்காக ஏராளமான வளர்ச்சிப் பணிகள் செய்யப்பட்டுள்ளன. கடந்த மாதம், ரக்ஷாபந்தன் பண்டிகையை முன்னிட்டு, வீட்டு உபயோக எல்பிஜி சிலிண்டர்களின் விலை 200 ரூபாய் குறைக்கப்பட்டபோது, அது சுமார் 900 ரூபாயை எட்டியது. இருப்பினும், உஜ்வலா பயனாளிகளுக்கு, அதன் விலை 700 ரூபாயாக இருந்தது.” என்று அவர் மேலும் கூறினார்.
உஜ்வாலா பயனாளிகள் (Ujwala Beneficiaries) தற்போது 14.2 கிலோ சிலிண்டருக்கு ரூ.703 செலுத்துகின்றனர். சந்தை விலை ரூ.903 ஆக உள்ளது. மத்திய அமைச்சரவையின் இந்த முடிவிற்குப் பிறகு, இப்போது உஜ்வலா பயனாளிகள் 14.2 கிலோ சிலிண்டருக்கு ரூ.603 செலுத்துவார்கள்.

மத்திய அமைச்சரவை ஆகஸ்ட் மாதம் அனைத்து நுகர்வோருக்கும் எல்பிஜி வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர் விலையை ரூ.200 குறைத்தது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, பிரதம மந்திரி உஜ்வலா யோஜனா திட்டத்தின் கீழ் 75 லட்சம் எல்பிஜி இணைப்புகளை வழங்குவதற்காக எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்களுக்கு ரூ.1,650 கோடியை வெளியிட மத்திய அரசு கடந்த மாதம் ஒப்புதல் அளித்தது. கூடுதலாக 75 லட்சம் உஜ்வலா இணைப்புகளை வழங்கப்பட்ட பின்னர், PMUY திட்டத்தின் கீழ் மொத்த பயனாளிகளின் எண்ணிக்கை இப்போது 10.35 கோடியாக அதிகரித்துள்ளது.

வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ள (பிபிஎல்) குடும்பப் பெண்களுக்காக எல்பிஜி இணைப்புகளை வழங்க PMUY எரிவாயு சிலிண்டர் மானியத் திட்டம் பிரதமர் நரேந்திர மோடியால் மே 2016 இல் தொடங்கப்பட்டது.

முன்னதாக, அக்டோபர் தொடக்கத்தில் எண்ணெய் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்தன. அக்டோபர் 1 முதல் வர்த்தக எரிவாயு சிலிண்டர் விலை ரூ.200 -க்கு மேல் உயர்த்தப்பட்டன. (Commercial LPG Cylinder Price Hike). புதிய கட்டணங்கள் ஞாயிற்றுக்கிழமை அதாவது அக்டோபர் 1, 2023 முதல் அமலுக்கு வந்தன. எனினும், அக்டோபர் 1 ஆம் தேதி வீட்டு உபயோக எல்பிஜி சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இது பழைய விகிதத்திலேயெ உள்ளது.

Subscribe
Notify of
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x