Saturday, February 3, 2024

லோகேஷ் கனகராஜ்: தலைவர் 171 படம் இப்படி தான் இருக்கும்..!

Thalaivar 171 Update: லியோ படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் தற்போது தலைவர் 171வது படத்தின் வேளைகளில் பிசியாக உள்ளார்.

by Talks Tamil
0 comment 76 views

Thalaivar 171 Update: இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தமிழ் சினிமாவின் முக்கியமான ஒரு இயக்குனராக உள்ளார். அவர் இயக்கத்தில் வெளியான மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ என தொடர்ந்து ஐந்து ஹிட் படங்களை கொடுத்துள்ளார். சமீபத்தில் விஜய்யை வைத்து அவர் இயக்கியிருந்த லியோ படம் உலகம் முழுவதும் 650 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்திருந்தது.  இந்த வெற்றியின் மூலம் லோகேஷ் கனகராஜனின் நட்சத்திர அந்தஸ்து மேலும் உயர்ந்தது. மேலும் லியோ வெளியாவதற்கு முன்பே அடுத்து ரஜினியை வைத்து இயக்கப் போகிறார் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. தற்போது லோகேஷ் கனகராஜ் தலைவர் 171 வது படத்தின் வேலைகளில் பிசியாக உள்ளார்.

இந்த படத்திற்காக தனியாக ஆபீசும் அமைக்கப்பட்டு வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் படப்பிடிப்பு துவங்க உள்ளது. தற்போது ரஜினிகாந்த் ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார்.  தலைவர் 171வது படம் தொடங்குவதற்கு முன்பே லால் சலாம் மற்றும் வேட்டையன் படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் லோகேஷ் கனகராஜன் தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து வெளியான பயிட் கிளப் படம் இந்த வாரம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்திற்கான நேர்காணலில் தலைவர் 171 வது படம் எப்படி இருக்கும் என்று லோகேஷ் கனகராஜ் கூறியுள்ளார்.

படம் முழுக்க முழுக்க ஆக்சன் திரில்லர் வடிவில் இருக்கும் என்றும் ரஜினியின் ரசிகர்களுக்கு நிச்சயம் விருந்தாக இருக்கும் என்றும் கூறியுள்ளார். ரஜினி தினசரி கதை பற்றியும், வேலை எப்படி போய்க்கொண்டு இருக்கிறது என்று கேட்பார் என்றும் கூறியுள்ளார். மேலும் இனி தனது படங்களில் படப்பிடிப்பு முடியும் முன் ரிலீஸ் தேதியை சொல்ல மாட்டேன் என்று உறுதியாக கூறியுள்ளார். காரணம் ரிலீஸ் தேதியை அறிவித்துவிட்டு படப்பிடிப்புக்கு சென்றதால் லியோ படத்தில் சிலவற்றை 100% கொடுக்க முடியவில்லை என்று கூறி உள்ளார்.

தற்போது லோகேஷ் கனகராஜ் ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் இருந்து ஓய்வை எடுத்துக் கொள்வதாக அறிவித்துள்ளார், மீண்டும் தலைவர் 171 படத்தின் அறிவிப்பின் மூலம் ஆக்டிவாக இருப்பேன் என்றும் கூறியுள்ளார்.  சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார். 2025 ஜனவரி அல்லது கோடையில் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.  இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ஷாருக்கானை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார் லோகேஷ்.  ஆனால், இனி கெஸ்ட் ரோலில் நடிக்க மாட்டேன் என்று முடிவு எடுத்துள்ளதால் ஷாருக்கான் இதில் நடிக்கவில்லை.  இதன் காரணமாக ரன்வீர்சிங்கிடம் பேசி வருகிறார் லோகேஷ்.  தமிழில் லாரன்ஸ் மற்றும் சிவகார்த்திகேயன் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Subscribe
Notify of
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x