Sunday, May 19, 2024

சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் தமிழ் படங்கள்..!

Chennai International Film Festival: சென்னை சர்வதேச திரைப்பட விழா ஒவ்வொரு ஆண்டும் டிசம்பரில் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு டிசம்பர் 14ம் தேதி தொடங்குகிறது.

by Talks Tamil
0 comment 114 views

டிசம்பர் 14ம் தேதி தொடங்கும் திரைப்பட விழா.

126 படங்கள் திரையிட பட உள்ளன.

12 தமிழ் படங்களும் அதில் இடம் பெற்றுள்ளன.

Chennai International Film Festival: ஒவ்வோரு ஆண்டும் சென்னையில் டிசம்பர் மாதம் சர்வதேச திரைப்பட விழா நடைபெறும்.  இந்த சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் உலகின் பல்வேறு மொழிகளில் இருந்து சிறந்த படங்கள் இங்கு திரையிடப்படும். இந்த ஆண்டு டிசம்பர் 14 முதல் 21 வரை நடைபெறும் 21வது திரைப்பட விழாவில் 57 நாடுகளைச் சேர்ந்த 126 படங்கள் திரையிட பட உள்ளன. மேலும், இந்த ஆண்டு கேன்ஸ் விருது பெற்ற ‘அனாடமி ஆஃப் எ ஃபால்’ படமும், 8 ஈரானிய படங்களும், 5 கொரிய படங்களும் திரையிடப்பட உள்ளன. அக்டோபர் 16, 2022 முதல் அக்டோபர் 15, 2023 வரை தணிக்கை செய்யப்பட்ட தமிழ் திரைப்படங்கள் இந்தப் திரைப்பட விழாவில் பங்கேற்க தகுதியுடையவை.

வசந்தபாலன் இயக்கத்தில் உருவான அநீதி, மந்திர மூர்த்தி இயக்கிய அயோத்தி, தங்கர் பச்சனின் கருமேகங்கள் கலைகின்றன, மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான மாமன்னன், விக்னேஷ் ராஜா இயக்கிய போர் தோழில், விக்ரம் சுகுமாரனின் ராவண கோட்டம், அணில் இயக்கிய சாயவனம், பிரபு சாலமன் இயக்கிய செம்பி, சந்தோஷ் நம்பிராஜன் இயக்கிய ஸ்டார்ட் கேமரா ஆக்‌ஷன்கார்த்திக் சீனிவாசன் இயக்கிய உடன்பால், வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை பார்ட் 1 மற்றும் அமுதவானன் இயக்கி உள்ள விந்தியா விக்டிம் வெர்டிக்ட் வி3 ஆகிய 12 படங்கள் சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்வு செய்யப்பட்ட படங்கள் ஆகும்.  இந்த படங்களில் பல முக்கிய நட்சத்திரங்களும் நடித்துள்ளனர்.  இன்னும் வெளிவராத சில படங்களும் சிறப்புத் திரையிடலுக்கு தயாராகி வருகின்றன.  கடந்த ஆண்டு கார்கி, மாமனிதன், இரவின் நிழல், கசட தாபரா, கிடா, ஆரம்பம், நட்சத்திரம் நகர்கிறது, ஆதார் ஆகிய படங்கள் 20வது சென்னை சர்வதேசப் போட்டியில் அந்தந்தப் பிரிவுகளின் கீழ் பரிசு பெற்ற தமிழ்த் திரைப்படங்கள் ஆகும்.

இந்த சென்னை திரைப்பட விழாவில் பல்வேறு நாடுகளில் இருந்து ஆஸ்கார் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட படங்கள் மற்றும் கேன்ஸ், பெர்லின் போன்ற சர்வதேச திரைப்பட விழாக்களில் வெற்றி பெற்ற திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன. பல கலாச்சார அமைப்புகள் மற்றும் தூதரகங்கள் வழங்கிய ஜெர்மன், பிரெஞ்சு மற்றும் கொரியன் போன்ற பல்வேறு மொழிகளில் திரைப்படங்களும் விழாவில் திரையிடப்படும்.  டிசம்பர் 14 அன்று மாலை 6 மணிக்கு PVR ஐனாக்ஸில் இந்த சர்வதேச திரைப்பட விழா தொடங்கப்படும்.  சினிமா ஆர்வலர்கள் அண்ணாசாலையில் உள்ள அண்ணா திரையரங்கில்  டிசம்பர் 1 காலை 10.30 மணி முதல் மாலை 6 மணி வரை நேரடியாக பதிவு செய்யலாம். ஆன்லைன் மூலம்  https://chennaifilmfest.com என்ற இணைய தளம் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.

Subscribe
Notify of
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x