Saturday, April 13, 2024

லியோ படத்திற்கு ஆடியோ லான்ச் இல்லை! திமுக அரசு தான் காரணமா?

Leo Audio Launch: மிகவும் எதிர்பார்க்கப்பட்ட லியோ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சில தவிர்க்க முடியாத காரணங்களால் நடைபெறாது என படக்குழு அறிவித்துள்ளது.

by Talks Tamil
0 comment 299 views

கடைசி நேரத்தில் வந்த முக்கிய அறிவிப்பு.

லியோ ஆடியோ லான்ச் நடைபெறாது என்று அறிவிப்பு.

ரசிகர்கள் மிகுந்த வருத்தத்திற்கு உள்ளாகி உள்ளனர்.

இந்த ஆண்டு மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் லியோ படமும் ஒன்று. மாஸ்டர் படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கிறார் என்ற தகவல் வெளியானதிலிருந்து ரசிகர்கள் மிகவும் ஆர்வமுடன் இருந்தனர், மேலும் விக்ரம் படத்தின் பிரம்மாண்ட வெற்றி இந்த எதிர்பார்ப்பை இன்னும் அதிகரிக்க செய்தது. லியோ படத்தின் அறிவிப்பு தொடங்கி தற்போது வரை வெளியாகியுள்ள போஸ்டர்கள் வரை ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.  படத்தின் முதல் சிங்கிளான நா ரெடி என்ற பாடல் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.  மேலும் அர்ஜுன் பிறந்தநாள் அன்று படத்திலிருந்து வெளியான கிலிம்ஸ் வீடியோவும் நல்ல வரவேற்பை பெற்றது. இதனால் லியோ படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே சென்றது. இது தவிர லோகேஷ் சினிமாடிக் யுனிவர்ஸ் அல்லது எல்.சி.யு-வில் இந்த படம் இருக்குமா என்பதை அறிய ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

பான் இந்தியா படமாக வெளியாக உள்ள லியோ படத்தின் ஹிந்தி, கன்னடா, தெலுங்கு போஸ்டர்கள் சமீபத்தில் வெளியானது. இந்நிலையில் விஜய் ரசிகர்கள் லியோ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவிற்காக நீண்ட நாட்களாக காத்துக் கொண்டிருந்தனர்.  லியோ படம் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் செப்டம்பர் 30ஆம் தேதி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் லியோ ஆடியோ லான்ச் நடைபெற உள்ளதாக கடந்த சில நாட்களாக தகவல்கள் வெளியானது, இதனால் ரசிகர்கள் ஆர்வமுடன் இருந்தனர்.  எப்படியாவது பாஸ் வாங்கி ஆடியோ லான்ச் சென்றுவிட வேண்டும் என்று இருந்தனர்.

இந்த நிலையில், ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சியான செய்தியை அறிவித்துள்ளது படக்குழு. அதிகப்படியான டிக்கெட் பிரஷர் காரணமாக லியோ ஆடியோ லான்ச் நடைபெறாது என்று அறிவித்துள்ளது, இது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் எந்த ஒரு அரசியல் காரணங்களுக்காகவும் ஆடியோ லான்ச் நடைபெறாமல் இல்லை என்றும் தெளிவுபடுத்தி உள்ளது.  ஏனெனில் விஜய் அரசியலுக்கு வர இருக்கிறார், இதனால் லியோ படத்திற்கு தமிழக அரசு முட்டுக்கட்டையாக இருக்கிறது என்று செய்திகள் வெளியாகி கொண்டே இருந்தது.  விஜய்யின் பேச்சைக் கேட்க காத்திருந்த ரசிகர்கள் ஏமாற்றத்தை சந்தித்தனர். மேலும் லியோ படத்தின் ஆடியோ லான்ச் நடக்காததற்கு திமுக அரசு தான் காரணம் என்றும் விஜய்யின் வளர்ச்சி பிடிக்காமல் தான் இப்படி எதிர்க்கிறார்கள் என்றும் விஜய் ரசிகர்கள் எக்ஸ் தளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

லியோவின் திரைக்கதையை ரத்ன குமார் மற்றும் தீரஜ் வைத்தி ஆகியோருடன் லோகேஷ் எழுதியுள்ளார், மேலும் படத்திற்கு செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ மற்றும் தி ரூட் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது.   இப்படத்தில் சஞ்சய் தத் முக்கிய கதாபாத்திரத்திலும், த்ரிஷா விஜய்க்கு ஜோடியாகவும் நடித்துள்ளனர். பத்தாண்டுகளுக்குப் பிறகு விஜய் மற்றும் த்ரிஷா இணைந்து லியோ படத்தில் நடித்துள்ளனர். இவர்களை தவிர, பிரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர், மிஷ்கின், மன்சூர் அலிகான், மேத்யூ தாமஸ், கௌதம் மேனன் மற்றும் ஆக்சன் கிங் அர்ஜுன் ஆகியோர் உள்பட பலர் நடித்துள்ளனர். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்ய, அன்பரிவ் சண்டைக்காட்சிகளை மேற்கொண்டுள்ளனர். லியோ படம் தமிழ்நாட்டில் மட்டும் 1100 திரையரங்குகளில் ரிலீசாக திட்டமிடப்பட்டுள்ளது.  இதன்மூலம் லியோ படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

Subscribe
Notify of
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x