Thursday, May 30, 2024

மே 20ம் தேதி பதவியேற்கிறார் முதலமைச்சர் சித்தராமையா! துணை முதல்வர் டிகே சிவக்குமார்

by Talks Tamil
0 comment 281 views

Official Announcement By KC Vengopal For Karnataka CM: கர்நாடகாவின் அடுத்த முதல்வர் சித்தராமையா என்று காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர் கேசி வேணுகோபால் அதிகாரபூர்வமாக அறிவித்தார்

புதுடெல்லி: கர்நாடகாவின் அடுத்த முதல்வர் சித்தராமையா என்று காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர் கேசி வேணுகோபால் அதிகாரபூர்வமாக அறிவித்தார். தலைநகர் டெல்லியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், கட்சியின் சார்பில் துணை முதலமைச்சராக சிவக்குமார் தெரிவு செய்யப்பட்டிருப்பதாகவும் அதிகாரபூர்வமாக அறிவித்தார்.

நீண்ட நாட்களாக நீடித்து வந்த சஸ்பென்ஸை முடிவுக்கு கொண்டு வந்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, தென் மாநிலத்தை வழிநடத்த சித்தராமையாவை தேர்வு செய்ததாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவக்குமார் துணை முதல்வராக இருப்பார்.

கர்நாடக முதல்வராக சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவகுமார்; மே 20ஆம் தேதி பதவியேற்கின்றனர். பதவியேற்பு விழா பெங்களூரில் மே 20-ம் தேதி நடைபெறும் என்றும் கூறப்படுகிறது. வியாழன் அன்று பெங்களூருவில் காங்கிரஸ் சட்டமன்றக் கட்சி (சிஎல்பி) கூட்டத்துக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

 

Subscribe
Notify of
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x