Friday, May 17, 2024

விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் முதல் படத்தில் ஹீரோவாக கவின்

by Talks Tamil
0 comment 388 views

ஜேசன் சஞ்சயின் முதல் படத்தின் இசையமைப்பாளராகவும், முன்னணி நடிகராகவும் துருவ் விக்ரம் மற்றும் ஏஆர் அமீனுக்குப் பதிலாக அனிருத் ரவிச்சந்தர் மற்றும் கவின் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

தளபதி விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய்யின் முதல் படத்தில் கவின் நடிக்கலாம் என கூறப்படுகிறது.

ஜேசன் சஞ்சய் தனது முதல் திரைப்படத்திற்காக லைகா புரொடக்ஷன்ஸுடன் ஒப்பந்தம் செய்துள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் ஒரு பக்கம் இளம் இயக்குநர்களுக்கு வாய்ப்பு கொடுக்க, இவரது மகன் ஜேசன் சஞ்சய் மறுபக்கம் இளம் இயக்குநராக உருவாகி வருகிறார். இவர், லண்டனில் உள்ள டொராண்டோ திரைப்பட கல்லூரியில் படித்துள்ளார். இதன் மூலம் இவர் திரைக்கதை அமைப்பது மற்றும் பட இயக்கம் ஆகியவற்றை கற்றுக்கொண்டுள்ளார்.

இவர், தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாக உள்ளார். ஜேசனின் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. தந்தையை போல் நடிகராக களமிறங்காமல் இயக்குனராக அறிமுகமாகி இருக்கும் ஜேசன் சஞ்சய், தன் முதல் படத்திற்கான ஆரம்பக்கட்ட பணிகளை விறுவிறுப்பாக மேற்கொண்டு வருகிறார். விரைவில் அப்படத்தின் ஷூட்டிங் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

படம் குறித்து ஜேசன் கூறியது என்ன..? 
ஜேசன் சஞ்சய் தனது படம் குறித்த அறிவிப்பு வெளியானவுடன் ஒரு நேர்காணலில் கலந்து கொண்டார். அப்போது படம் குறித்து பேசிய அவர், கதைக்கு ஏற்ற நடிகர்களையும் டெக்னீஷியன் குழுவையும் தேடி வருவதாக தெரிவித்திருந்தார். முதல் படத்திலேயே லைகா நிறுவனத்துடன் கைக்கோர்த்திருப்பது பெருமையளிப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

படத்தின் ஹீரோ யார்?
ஜேசன் சஞ்சய் இயக்கும் முதல் படத்தில் முன்னதாக விஜய் சேதுபதி தான் ஹீரோவாக நடிக்க உள்ளார் என தகவல் பரவியது. பின்னர் நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நடிக்க உள்ளதாக கூறப்பட்ட நிலையில், தற்போது அவர்கள் இருவரும் இல்லை என்பதை உறுதி செய்யும் விதமாக மற்றுமொரு தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

கவின் தான் ஹீரோ:
இந்நிலையில் ஜேசன் சஞ்சய் இயக்கும் முதல் படத்தில் கவின் ஹீரோவாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதுமட்டுமின்றி இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கயுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஜேசனின் முதல் படத்திற்கான ப்ரீ புரொடக்‌ஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் இப்படத்தில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் படக்குழுவினர் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்றும் கூறப்படுகிறது.

இதற்கிடையில் தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் ஹீரோக்களுள் ஒருவர், கவின். சின்னத்திரையில் ஜொலித்து வந்த இவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சி பெரிய திரைக்கு எண்ட்ரி கொடுத்தது. இவர் ஹீரோவாக நடித்திருந்த லிஃப்ட், டாடா போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது. இவர்,‘ஸ்டார்’ என்ற படத்தில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Subscribe
Notify of
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x