Saturday, June 1, 2024

ரூ.500-க்குள் கிடைக்கும் ஜியோவின் சிறந்த ரீசார்ஜ் திட்டங்கள்!

by Talks Tamil
0 comment 295 views

Jio plans: தற்போது ஜியோ நிறுவனம் மலிவு விலையில் ஜியோ ப்ரீபெய்ட் திட்டத்தைத் தேடும் வாடிக்கையாளர்களுக்கென்றே ரூ.500 பட்ஜெட்டின் கீழ் திட்டங்களை வழங்குகிறது.

Jio plans: மலிவான விலையில் பல மேம்பட்ட வசதிகளை உள்ளடக்கிய ரீசார்ஜ் திட்டங்களை வழங்குவதில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் பிரபலமாகவுள்ளது.  ஜியோ அதன் வாடிக்கையாளர்களுக்கு வருடாந்திர திட்டங்கள் முதல் மாதாந்திர மற்றும் குறுகிய டேட்டா டாப்-அப்கள் வரை பலவைகையான திட்டங்களை வழங்கி வருகிறது.  தற்போது ஜியோ நிறுவனம் மலிவு விலையில் ஜியோ ப்ரீபெய்ட் திட்டத்தைத் தேடும் வாடிக்கையாளர்களுக்கென்றே ரூ.500 பட்ஜெட்டின் கீழ் திட்டங்களை வழங்குகிறது.  இந்த சலுகையின் கீழ், ஜியோ அதிவேக டேட்டா, அன்லிமிடெட் அழைப்பு போன்ற பல அம்சங்களை வழங்குகிறது.  இப்போது ரூ.500க்கு கீழ் உள்ள ஜியோ திட்டங்களைப் பற்றி பார்ப்போம்.

ஜியோ ரூ 119 திட்டம்: 14 நாட்கள் வேலிடிட்டியுடன் வரும் இந்த திட்டமானது 1.5 ஜிபி தினசரி டேட்டா, அன்லிமிடெட் அழைப்பு, 300 எஸ்எம்எஸ் மற்றும் ஜியோ டிவி, ஜியோ சினிமா, ஜியோ செக்யூரிட்டி மற்றும் ஜியோ க்ளவுட்  போன்ற ஜியோ பயன்பாடுகளுக்கான அணுகலை வழங்குகிறது.

ஜியோ ரூ 149 திட்டம்:  20 நாட்கள் வேலிடிட்டியுடன் வரும் இந்த திட்டமானது தினசரி 1 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் அழைப்பு, ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் ஜியோ பயன்பாடுகளுக்கான அணுகலை வழங்குகிறது.

ஜியோ ரூ 179 திட்டம்: 1 ஜிபி தினசரி டேட்டா, அன்லிமிடெட் அழைப்பு, ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் 24 நாட்களுக்கு ஜியோ பயன்பாடுகளுக்கான அணுகலை வழங்குகிறது.

ஜியோ ரூ 199 திட்டம்: 23 நாட்கள் வேலிடிட்டியுடன் வரும் இந்த திட்டமானது தினசரி 1.5 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் அழைப்பு, ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் ஜியோ பயன்பாடுகளுக்கான அணுகலை வழங்குகிறது.

Subscribe
Notify of
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x