Wednesday, May 15, 2024

வசூல் ராஜாவான ஜெயிலர்.. ரூ.600 கோடியை தாண்டிய கலெக்ஷன்

by Ganesh Kumar
0 comment 285 views

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிதுள்ள படம், ஜெயிலர். சுமார் 16 நாட்களுக்கு முன்பு வெளியான இந்த படம், ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. தமிழகத்தில் மட்டுமன்றி உலகளவில் இந்த படத்திற்கு ரசிகர்கள் ஆதரவு கொடுத்துள்ளனர்.

ரஜினிகாந்த்தின் ஜெயிலர் திரைப்படம்:

கடந்த 5 ஆண்டுகளில் ரஜினிகாந்தின் படங்கள் படைக்காத சாதனையை ‘ஜெயிலர்’ திரைப்படம் படைத்து வருகிறது. ரஜினியின் கடைசி படமான ‘அண்ணாத்த’ குடும்ப ரசிகர்களுக்கு பிடித்ததே தவிர, விமர்சன ரீதியாக பயங்கர அடி வாங்கியது. 2.0, தர்பார் போன்ற படங்களுக்கும் இதே கதைதான். ‘பேட்ட’ படம் நல்ல விமர்சனங்களை பெற்றாலும் அதில் உண்மையான ரஜினியின் மாஸ் தனத்தை உணர முடியவில்லை என ரசிகர்கள் கருதினர். இந்த குறையை எல்லாம் நெல்சன் திலீப்குமார் ஜெயிலர் படத்தில் தீர்த்திருப்பதாக பலரும் விமர்சனம் கொடுத்துள்ளனர்.

தமிழகத்தில் ‘ஜெயிலர்’ படத்தின் முதல் நாள் வசூல் ரூ.25 கோடியை எட்டியது. கர்நாடகாவில் ரூ.11.85 கோடியும், கேரளாவில் ரூ.6 கோடியும், ஆந்திரா-தெலுங்கானாவில் ரூ.11.5 கோடியும், இதர பகுதிகளில் ரூ.3 கோடியும், வெளிநாடுகளில் ரூ.42 கோடியும் என உலகம் முழுவதும் ரூ.100 கோடி வசூலை எட்டி பாக்ஸ் ஆபிஸ் ஹிட் ஆனது.

அதேபோல் 2வது நாளில் 75 கோடியாக இருந்தது. படத்தின் வசூல், நாட்கள் ஆக ஆக ஏறிக்கொண்டே போனது. சமீபத்தில் ஜெயிலர் படம் 350 கோடியை தாண்டியுள்ளதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் ஒரு பதிவினை வெளியிட்டிருந்தது. அதில், படம் 375.40 கோடி ரூபாயை கடந்து வசூலில் சாதனை படைத்துள்ளதாக குறிப்பிட்டிருந்தது. இதுவரை தமிழ் சினிமாவில் வெளிவந்த படங்களிலேயே ஜெயிலர் படம்தான் ஒரே வாரத்தில் இத்தனை கோடி வசூலை குவித்துள்ளதாகவும் அந்த பதிவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

600 கோடி வசூல்:

இந்நிலையில் தற்போது வெளியான தகவலின் படி, ஜெயிலர் படம் 600 கோடியை தாண்டி பாக்ஸ் ஆபிஸில் அடித்து நொறுக்கியது. ஜெயிலர் படத்தில் பல திரையுலகை சேர்ந்த பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். இதில், ரஜினிகாந்த்தை தவிர அனைவருமே காமியோ கதாப்பாத்திரங்களாகத்தான் வந்து செல்கின்றனர். நடிகை தமன்னா, ஜெயிலர் படத்தில் முக்கிய கதாப்பாத்திரமாக வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் ஒரு பாடலிற்கு நடனமாடிவிட்டு சில காட்சிகளில் மட்டுமே தலைக்காட்டி சென்று விட்டார். இதனால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.

ரஜினியின் மாஸ் காட்சிகளுக்கு இணையாக கன்னட நடிகர் சிவராஜ் குமாரின் காட்சிகள் பேசப்பட்டுள்ளது. மோகன்லாலின் நடிப்பிற்கும் படத்தின் வில்லன் விநாயகத்தின் வில்லத்தனத்திற்கும் பாராட்டுகள் குவிந்து வருகிறது. ரஜினிகாந்த், நீண்ட நாட்களுக்கு பிறகு தனது முழு நடிப்பையும் ஜெயிலர் படத்தில் வெளிப்படுத்தியுள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

குறையை தீர்த்த ஜெயிலர் படம்:
இதனிடையே ரஜினியின் கடைசி படமான ‘அண்ணாத்த’ குடும்ப ரசிகர்களுக்கு பிடித்ததே தவிர, விமர்சன ரீதியாக பயங்கர அடி வாங்கியது. 2.0, தர்பார் போன்ற படங்களுக்கும் இதே கதைதான். ‘பேட்ட’ படம் நல்ல விமர்சனங்களை பெற்றாலும் அதில் உண்மையான ரஜினியின் மாஸ் தனத்தை உணர முடியவில்லை என ரசிகர்கள் கருதினர். இந்த குறையை எல்லாம் நெல்சன் திலீப்குமார் ஜெயிலர் படத்தில் தீர்த்திருப்பதாக பலரும் விமர்சனம் கொடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Subscribe
Notify of
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x