Friday, May 17, 2024

பிரபல திரைப்பட பைனான்சியர், தயாரிப்பாளர்கள் அலுவலகங்களில் ஐ.டி ரெய்டு..!

by Talks Tamil
0 comment 223 views

திரைப்படங்களுக்கு பைனான்ஸ் செய்வதோடு கோபுரம் பிலிம்ஸ் என்ற திரைப்படத் தயாரிப்பு நிறுவனம் நடத்தி வரும் அன்புச் செழியனின் வீடு, சென்னை தியாகராய நகரில் உள்ள அலுவலகம், மதுரையில் உள்ள பூர்வீக வீடு, அவரது சகோதரரான பைனான்சியர் அழகர்சாமியின் வீடு உள்ளிட்ட இடங்களில் சோதனை நடைபெறுகிறது.

இதே போல சினிமா தயாரிப்பாளரான கலைப்புலி எஸ்.தாணுவின் தியாகராய நகர் அலுவலகத்தில் 10க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

அதே போல, ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் நிறுவனத்தை நடத்தி வரும் தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு, ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தை நடத்தி வரும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, சத்யஜோதி பிலிம்ஸ் தியாகராஜன், ப்ரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனத்தை நடத்தி வரும் தயாரிப்பாளர் லட்சுமணகுமார் தொடர்புடைய இடங்களிலும் சோதனை நடைபெறுகிறது.

Subscribe
Notify of
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x