Sunday, May 19, 2024

தோனியின் 200ஆவது போட்டி… சேப்பாக்கத்தில் ரசிகர்களுடன் சத்குரு!

by Talks Tamil
0 comment 275 views

IPL 2023 CSK vs RR: சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற சென்னை – ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டியை, சத்குரு அவர்கள், பல்லாயிரக்கணக்கான ரசிகர்களுடன் கண்டுகளித்தார். 

IPL 2023 CSK vs RR: சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நேற்று (ஏப். 13) நடைபெற்ற ஐபிஎல் லீக் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் சென்னை பந்துவீசியது.

அதன்படி, முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 176 ரன்களை சென்னை அணிக்கு இலக்காக நிர்ணயித்தது. கடைசி பந்து வரை பரபரப்பாக சென்ற போட்டியில், ராஜஸ்தான் அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தோனி, ஜடேஜா ஜோடி கடைசி வரை போராடியும், அந்த அணியால் வெற்றி பெற முடியவில்லை. தோனி 32 ரன்களுடனும், ஜடேஜா 31 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். சந்தீப் சர்மா கடைசி ஓவரில் துல்லியமாக யார்க்கர் பந்துகளை வீசி ராஜஸ்தான் அணியின் வெற்றியை உறுதிசெய்தார்.

ராஜஸ்தான் வீரரும், தமிழ்நாட்டைச் சேர்ந்தவருமான அஸ்வின் ஆட்டநாயகனாக தேர்வானார். 2008ஆம் ஆண்டிற்கு பின், ராஜஸ்தான் அணி சென்னை சேப்பாக்கத்தில் வெற்றி பெற்றுள்ளது. மேலும், ராஜஸ்தான் வீரர் பட்லர் ஐபிஎல் தொடரில் 3000 ரன்களை கடந்தார். குறிப்பாக, அதிவேகமாக 3000 ரன்களை குவித்த மூன்றாவது வீரர் என்ற பெருமையையும் பட்லர் பெற்றார்.

Sadhguru

குறிப்பாக, நேற்றைய போட்டியானது, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக தோனியின் 200ஆவது போட்டியாகும். எனவே, தோனியின் ஆட்டத்தை காண சுமார் 30 ஆயிரத்திற்கும் அதிகமான பார்வையாளர்கள்  சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு வந்திருந்தனர். சென்னை அணி தோல்வியடைந்தாலும், தோனியின் ஆக்ரோஷ ஆட்டத்தை பார்த்த மகிழ்ச்சியில் பார்வையாளர்கள் திளைத்திருந்தனர்.

மேலும், தோனியின் 200ஆவது போட்டியில் பார்வையாளராக சத்குரு அவர்களும் கலந்துகொண்டார். ஆயிரக்கணக்கான ரசிகர்களுடன் சத்குருவும் சென்னை – ராஜஸ்தான் போட்டியை கண்டுக்களித்தனர்.

Sadhguru

Subscribe
Notify of
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x