Tuesday, February 6, 2024

தொப்பையை குறைக்க: இரவு தூங்கும் முன் இதை செய்தால் போதும்..!

Weight Loss Tips: தொப்பை கொழுப்பு குறைந்து உடல் எடை குறைய தூங்கும் முன் செய்ய வேண்டிய சில முக்கிய விஷயங்களைப் பற்றி இங்கே காணலாம்.

by Talks Tamil
0 comment 96 views

உணவை மிகவும் தாமதமாக உண்ணாதீர்கள்.

சிறிய அளவில் சாப்பிடுங்கள்.

கிரீன் டீ அல்லது புதினா டீ குடிக்கவும்.

Weight Loss Tips: இன்றைய காலகட்டத்தில் அனைவரும் தங்கள் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள விரும்புகிறார்கள். மக்கள் தங்கள் உடல் எடையை பராமரிக்க பல வழிகளை பின்பற்றுகிறார்கள். உடல் எடையைக் குறைக்க, ஜிம்மில் மணிக்கணக்கில் செலவிடுகிறார்கள், டயட்டில் இருக்கிறார்கள். இருப்பினும், பல சமயங்களில், இவற்றாலும் எந்த நல்ல பலனையும் பெறுவதில்லை. எனினும் சில வாழ்க்கை முறைகளை மாற்றுவதன் மீலமும் சில ஆரோக்கியமான பழக்கங்களை ஏற்படுத்திக்கொள்வதன் மூலமும் வீட்டு வைத்தியங்கள் மூலமும் நாம் நம் உடல் எடையை குறைக்கலாம்.

தொப்பை கொழுப்பு இந்நாட்களில் பலரை பாடாய் படுத்துகிறது. தற்போது மக்கள் தொப்பையை குறைக்க மிகவும் கடினமாக உழைக்கிறார்கள். சிலர் ஜிம்மிற்குச் சென்று பல மணி நேரம் உடற்பயிற்சி செய்கிறார்கள். சிலரோ கடுமையான உணவு கட்டுப்பாடுகளை மேற்கொள்கிறார்கள். ஆனால் இவற்றாலும் பலருக்கு வேண்டிய முடிவுகள் கிடைப்பதில்லை. தொப்பையில் தொங்கும் கொழுப்பு, உடல் பருமன் மற்றும் அதிக எடை ஆகியவற்றால் மக்கள் சிரமப்படுகின்றனர். தொப்பையை குறைக்க என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற நிலைக்கு சிலர் சென்றுவிட்டனர். ஆனால், சில முயற்சிகளால் உடல் ஆரோக்கியத்திற்கு கேடு ஏற்படலாம்.

பல இயற்கையான எளிய வழிகளிலும் உடல் எடையையும் (Weight Loss) தொப்பை கொழுப்பையும் குறைக்கலாம் என்பதை மக்கள் நினைவில் கொள்ள வேண்டும். நமது சில பழகவழகங்களை மாற்றிக்கொண்டாலே உடல் உப்பசத்தை குறைக்கலாம். நமது தினசரி வழக்கங்களும் உடல் பருமனும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை. நாம் பின்பற்றும் வழக்கமான முறையும் நமது எடையை பாதிக்கிறது. தொப்பையை குறைக்க, நமது வாழ்க்கை முறையில் சில முக்கியமான மாற்றங்களைச் செய்வது அவசியம். தூங்குவதற்கு முன் நீங்கள் செய்யும் செயல்கள் எடை இழப்பையும் பாதிக்கும் என நிபுணர்கள் கூறுகிறார்கள். தொப்பை கொழுப்பு குறைந்து உடல் எடை குறைய தூங்கும் முன் (Night Routine) செய்ய வேண்டிய சில முக்கிய விஷயங்களைப் பற்றி இங்கே காணலாம்.

எடை இழப்புக்கான சிறந்த இரவு நடைமுறைகள்

1. உணவை மிகவும் தாமதமாக உண்ணாதீர்கள்

இரவு உணவை சரியான நேரத்தில் சாப்பிடுவது மிகவும் முக்கியம். இரவில் தாமதமாக உணவு சாப்பிடுவது வளர்சிதை மாற்றத்தை மெதுவாக்கும். இது உங்கள் செரிமான அமைப்பையும் பாதிக்கிறது. நீங்கள் உங்கள் தொப்பையை (Belly Fat) குறைக்க விரும்பினால், இரவில் சீக்கிரம் சாப்பிட முயற்சி செய்யுங்கள்.

2. சிறிய அளவில் சாப்பிடுங்கள்

இரவு உணவு எப்போதும் இலகுவாக இருக்க வேண்டும். இரவு உணவில் சத்தான விஷயங்களைச் சேர்ப்பது முக்கியம் என்றாலும், உடல் எடையைக் குறைக்க, எளிதில் ஜீரணிக்கக் கூடியவற்றை எப்போதும் உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.

3. கிரீன் டீ அல்லது புதினா டீ குடிக்கவும்

கிரீன் டீ அல்லது புதினா டீயை இரவில் தூங்குவதற்கு முன் குடிப்பது நல்லது. ஏனெனில் இது நமது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும். இந்த ஆரோக்கியமான பானம் நமது செரிமான அமைப்புக்கு பயனுள்ளதாக கருதப்படுகிறது.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். Tamilan Talks இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)

Subscribe
Notify of
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x