Saturday, May 25, 2024

H1B விசா விண்ணப்பம் லேட்டஸ்ட் அறிவிப்பு! மகிழ்ச்சியில் இந்திய ஐடி துறையினர்

by Talks Tamil
0 comment 288 views

H1 B Visa Latest Updates: அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் அறிவிப்பை வெளியிட்டது அமெரிக்கா! மார்ச் 1 முதல் H1B விசா விண்ணப்பங்களை பெறத் தொடங்குவதாக அறிவிப்பு

நியூடெல்லி: அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் அறிவிப்பை வெளியிட்டது அமெரிக்கா! மார்ச் 1 முதல் H1B விசா விண்ணப்பங்களை பெறத் தொடங்குவதாக வெளியான தகவல்கள், நீண்ட நாட்களாக காத்திருக்கும் பலருக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. விசாவுக்கு விண்ணப்பித்தாலே, அது கிடைத்துவிடுமா என்று தெரியாது என்றாலும், விண்ணப்பிப்பதற்கான வாய்ப்பு தற்போது திறக்கப்படுகிறது என்ற அறிவிப்பே பலருக்கும் நிம்மதியைக் கொடுத்திருக்கிறது.

H1B விசா ஒதுக்கீடுகள் ஆண்டுக்கு 85,000 விசாக்கள் என்ற அளவில் வரையறுக்கப்பட்டுள்ளன, அவற்றில் 20,000 விசாக்கள், அமெரிக்க நிறுவனங்களில் உயர்கல்வி பயின்ற மாணவர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன.

2023-24 நிதியாண்டுக்கான H1B விசா தாக்கல் செய்யும் சீசன், அதிகாரப்பூர்வமாக மார்ச் 1 அன்று தொடங்கும், அப்போது அமெரிக்க குடியேற்ற அமைப்பானது, திறமையான வெளிநாட்டு தொழிலாளர் விசாக்களுக்கான விண்ணப்பங்களை பெறத் தொடங்கும், இந்த நாளுக்காக பல இந்திய ஐடி நிபுணர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

H1B விசா என்பது புலம்பெயர்ந்தோர் அல்லாத விசா ஆகும், இது அமெரிக்க நிறுவனங்களுக்கு கோட்பாட்டு அல்லது தொழில்நுட்ப நிபுணத்துவம் தேவைப்படும் சிறப்புத் தொழில்களில் வெளிநாட்டு ஊழியர்களைப் பணியமர்த்த அனுமதிக்கிறது.

இந்தியா மற்றும் சீனா போன்ற நாடுகளில் இருந்து ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான ஊழியர்களை வேலைக்கு அமர்த்துவதற்கு தொழில்நுட்ப நிறுவனங்கள் H1B விசாவையே நம்பியுள்ளன.

2023 அக்டோபர் முதல் தேதியில் இருந்து தொடங்கும் நிதியாண்டில், H-1B விசாக்களுக்கான விண்ணப்பங்களை மார்ச்  மாதத்தில் 17 நாட்கள் அதாவது மார்ச் 1 முதல் 17ம் தேதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என்று அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் (USCIS) தெரிவித்துள்ளது. தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் மருத்துவம் போன்ற சிறப்புத் துறைகளில் பணிபுரிபவர்கள், இந்த விசாவுக்கு விண்ணப்பிக்க தகுதி பெற்றவர்கள் ஆவார்கள்.

Subscribe
Notify of
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x