Friday, May 17, 2024

Firefox பிரவுசர் யூஸ் பண்றவங்க எல்லாம் உஷாரு! அரசு கொடுத்திருக்கும் எச்சரிக்கை

Firefox Browser: பயர்பாக்ஸ் பிரவுசரில் பல குறைபாடுகள் கண்டறியப்பட்டுள்ளதால், ஹேக்கர்கள் உங்கள் கணினியில் ஊடுருவி உங்கள் தகவல்களைத் திருடலாம். இவற்றைத் தவிர்க்க என்ன செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம்.

by Talks Tamil
0 comment 13 views

ஃபயர்பாக்ஸ் பிரவுசர் பயனர்களுக்கு இந்திய கம்ப்யூட்டர் எமர்ஜென்சி ரெஸ்பான்ஸ் டீம் (சிஇஆர்டி-இன்) உட்சபட்ச எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த குழு பயர்பாக்ஸ் பிரவுசரில் பல குறைபாடுகளைக் கண்டறிந்துள்ளது. அதனால், ஹேக்கர்கள் உங்கள் கணினியைக் கட்டுப்படுத்த உட்சபட்ச வாய்ப்புகள் உள்ளன. ஒருவேளை ஹேக்கர்கள் கையில் உங்கள் கம்யூட்டர் சிக்கினால் அத்தனை தகவலையும் அவர்கள் திருடலாம். பயர்பாக்ஸில் இப்போது இருக்கும் இந்த குறைபாடுகள் 124ஐ விட பழைய வெர்சன் Firefox பிரவுசர்களையும், 115.9 ஐ விட பழைய வெர்சன் Mozilla Thunderbird வெர்சன்களையும் பாதிக்கிறது.

இந்த குறைபாடுகள் காரணமாக, ஹேக்கர்கள் ஒரு யூசரைபோலி இணையதளத்திற்கு அழைத்துச் செல்வதுடன், அவரது தகவல்களையும் பொறி வைத்து திருடுகின்றனர். இந்த சிக்கலில் நீங்கள் சிக்கிக் கொள்ளும்பட்சத்தில் மிகப்பெரிய பிரச்சனையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். தனிப்பட்ட தகவல்கள் அனைத்தும் ஹேக்கர்கள் வசம் சென்றுவிடும். ஹேக்கர்கள் நினைக்கும் நேரத்தில் எப்போது வேண்டுமானுலம் யூசர்களின் கணினி அல்லது லேப்டாப்களை கட்டுப்படுத்தலாம்.

இந்த ஆபத்துக்களை தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?

ஆன்லைன் அச்சுறுத்தல்களிலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ளக்கூடிய சில வழிமுறைகள் உள்ளன. இதன் மூலம் உங்களின் பிரவுசர் அனுபவத்தையும்

1. முதலில், உங்கள் பயர்பாக்ஸ் பிரவுசரை அப்டேட் செய்யவும். புதிய அப்டேட்கள் பெரும்பாலும் பாதுகாப்பு குறைபாடுகளை சரிசெய்வதற்கான இணைப்புகளைக் கொண்டிருக்கும். நீங்கள் அட்டோமேடிக் அப்டேட்டுகளை இயக்க வேண்டும், இதனால் லேட்டஸ்ட் பாதுகாப்பு லிங்குகள் உங்கள் பிரவுசரில் தொடர்ந்து வருகின்றன.

2. உங்கள் மொபைலில் ஒரு நல்ல வைரஸ் தடுப்பு மற்றும் மால்வேர் எதிர்ப்பு மென்பொருளை நிறுவி அவற்றை எப்போதும் புதுப்பித்துக்கொள்ளவும். இந்த திட்டங்கள் அச்சுறுத்தல்களைக் கண்டறிந்து தடுக்க உதவுகின்றன.

3. ஆன்லைனில் உலாவும்போது கவனமாக இருங்கள். எந்தவொரு இணைப்பைக் கிளிக் செய்வதற்கும், கோப்பைப் பதிவிறக்குவதற்கும் அல்லது எந்த வலைத்தளத்திலும் உங்கள் தகவலை உள்ளிடுவதற்கும் முன் சிந்தியுங்கள். தகவலை உள்ளிடுவதற்கு முன், இணையதளம் உண்மையானதா இல்லையா என்பதை உறுதிப்படுத்தவும்.

4. நம்பகமான ஆதாரங்களில் இருந்து இணைய பாதுகாப்பு பற்றிய தகவல்களைப் பெறுங்கள். பிரவுசர் நிறுவனங்கள், அரசாங்க இணையப் பாதுகாப்பு முகமைகள் மற்றும் செய்தி நிறுவனங்களின் இணையதளங்களிலிருந்து இந்தத் தகவலைப் பெறலாம்.

5. ஏதேனும் சந்தேகத்திற்கிடமான செயலை நீங்கள் கண்டால் அல்லது உங்கள் கணினியில் குறைபாடு இருப்பதாக நீங்கள் நம்பினால், உடனடியாக சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் அல்லது Cyber security response குழுவிற்கு தெரிவி

(இந்த கட்டுரை இணையத்தில் பெறப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. Tamilan Talks இந்த தகவல்களை தனிப்பட்ட முறையில் உறுதிப்படுத்தவில்லை.)

Subscribe
Notify of
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x