Saturday, April 13, 2024

அரசின் அதிரடி அறிவிப்பு! இந்த வகை வாகனங்களின் உரிமம் ஏப்ரல் 1 முதல் ரத்து!

by Talks Tamil
0 comment 274 views

பழைய வாகனங்களிலிருந்து வெளிவரும் புகையின் காரணமாக சுற்றுசூழல் மாசடைந்து விடுகிறது, இந்த மாசுபாட்டை குறைக்கும் நோக்கில் போக்குவரத்து அமைச்சகம் புதிய முடிவை எடுத்துள்ளது.

மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் ஆனது மத்திய மோட்டார் வாகன சட்டம் சம்மந்தப்பட்ட முக்கியமான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.  அந்த அறிவிப்பின்படி, 15 ஆண்டுகளுக்கு மேல் பழமையான அனைத்து அரசு வாகனங்களுக்கும் ஸ்கிராப்பைஜ் கொள்கையை அமல்படுத்த மத்திய அரசு முடிவெடுத்து இருப்பது தெரிய வந்துள்ளது.  பழைய வாகனங்களிலிருந்து வெளிவரும் புகையின் காரணமாக சுற்றுசூழல் மாசடைந்து விடுகிறது, இந்த மாசுபாட்டை குறைக்கும் நோக்கில் தான் போக்குவரத்து அமைச்சகம் இந்த முடிவை எடுத்துள்ளது.  அரசின் இந்த முடிவால், 15 ஆண்டுகளுக்கு மேல் பழமையான அனைத்து அரசு வாகனங்களின் பதிவும் ரத்து செய்யப்படுகிறது.

veh

மத்திய அரசின் இந்த புதிய உத்தரவு இந்த ஆண்டின் ஏப்ரல் மாதம் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. மையம், மாநிலம், யூனியன் பிரதேசம், முனிசிபல் கார்ப்பரேஷன், மாநில போக்குவரத்து மற்றும் அரசு தன்னாட்சி நிறுவனங்களிலும் உள்ள 15 ஆண்டுகள் பழமையான அனைத்து வாகனங்களும் ரத்து செய்யப்பட உள்ளது.  ஆனால் இந்த பட்டியலில் 15 ஆண்டுகள் பழமையான ராணுவ வாகனங்கள் மட்டும் சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

vh

இதில் ரிஜிஸ்டர் பதிவு புதுப்பிக்கப்பட்ட வாகனங்களும் ரத்து செய்யப்பட்டதாகக் கருதப்படும், இதுபோன்ற பழைய வாகனங்கள் அனைத்தும் பதிவு செய்யப்பட்ட ஸ்கிராப் மையத்தில் அப்புறப்படுத்தப்பட வேண்டும். கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் மத்திய, மாநில அரசுகளின் 15 ஆண்டுகள் பழமையான அனைத்து வாகனங்களையும் ரத்து செய்ய வேண்டும் என மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் வரைவு ஒன்றை வெளியிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

 

Subscribe
Notify of
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x