Friday, May 17, 2024

தமிழ் நடிகர்களின் முதல் 100 கோடி வசூல் திரைப்படம்.. இதோ முழு லிஸ்ட்

by Talks Tamil
0 comment 340 views

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களின் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் 100 கோடியை தாண்டி வசூல் செய்துள்ளது. ஆனால் அதில் இவர்களின் முதல் 100 கோடி வசூல் செய்த படம் எது என்பதை பார்ப்போம்.

முதல் 100 கோடி வசூல் படங்களின் பட்டியல்.

முன்னணி நட்சத்திரங்களின் முதல் ரூ. 100 கோடி வசூல் செய்த படம்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக ரஜினிகாந்த், விஜய், அஜித் குமார், கமல் ஹாசன் போன்ற பல முக்கிய நட்சத்திரங்கள் உள்ளனர். இவர்களின் முதல் 100 கோடி வசூல் செய்துள்ள படங்கள் பற்றிய தகவல்கள் இங்கே தெரிந்துக்கொள்வோம்.

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் – சிவாஜி (2007):
தமிழ் சினிமாவில் இன்று வரை பல கோடி ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்படும் நடிகர்களில் ஒருவர் தான் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். அதன்படி கடந்த 2007 ஆம் ஆண்டு நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான சிவாஜி திரைப்படம் 100 கோடிகள் வசூல் கடந்து தமிழ் சினிமாவில் பிரமாண்ட வெற்றி பெற்றுள்ளது. சிவாஜி திரைப்படமே ரஜினியின் முதல் 100 கோடி வசூல் அள்ளிய திரைப்படமாகும்.

உலக நாயகம் கமல்ஹாசன் – தசாவதாரம் (2008):
பல நடிகர்களுக்கு நடிப்பின் முன்னோடியாக வாழ்ந்து வருபவர் நடிகர் கமல்ஹாசன். இவருக்கு தமிழ் சினிமாவில் உலகநாயகன் என்னும் புனைபெயர் உண்டு. பல வெற்றி திரைப்படங்களில் நடித்துள்ள இவர் 2008 ஆம் ஆண்டு தசாவதாரம் திரைப்படத்தின் மூலம் 100 கோடிகள் வசூல் கடந்து புகழ்பெற்றுள்ளார். மேலும் இதுவே இவரின் முதல் 100 கோடி வசூல் திரைப்படமாகும்.

தளபதி விஜய் – துப்பாக்கி (2012):
தளபதி விஜய் என்று அழைக்கப்படும் நடிகர் விஜய் பல ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வருகிறார். இவர் தமிழ் சினிமாவின் புகழ் பெற்ற இயக்குனர் எஸ் வி சந்திரசேகரின் மகன் ஆவார். 2012 ஆம் ஆண்டு வெளியான துப்பாக்கி திரைப்படத்தின் மூலம் இவர் 100 கோடிகள் வசூல் கடந்தார். மேலும் இதுவே இவரின் முதல் 100 கோடி வசூல் தெறிக்கவிட்ட சூப்பர்ஹிட் திரைப்படமாகும்.

அஜித் குமார் – ஆரம்பம் (2013):
தமிழ் திரையுலகில் பல கோடி ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்படும் நடிகர் தான் அஜித்குமார். பல திரைப்படங்களுக்கு பின் தமிழ் சினிமாவில் இவர் நடித்த ‘ஆரம்பம்’ திரைப்படம் தான் மூலம் 100 கோடிகள் வசூல் பெற்ற படமாகும்.

சூர்யா –  ஏழாம் அறிவு (2011):
சூர்யாவுக்கு தமிழ் திரையுலகில் நடிப்பின் நாயகன் என்னும் புனைப்பெயர் உண்டு. இவரது நடிப்பில் 2011ஆம் ஆண்டு வெளியான ஏழாம் அறிவு திரைப்படம் தமிழ் சினிமாவில் 100 கோடிகள் வசூலை கடந்து பிரமாண்ட வெற்றி பெற்றுள்ளது. இதுவே சூர்யாவின் முதல் 100 கோடி வசூல் செய்த படமாகும்.

சியான் விக்ரம் – ஐ (2015):
சீயான் விக்ரம் என தமிழ் திரைத்துறையில் அறியப்படும் நடிகர் விக்ரம் 1990 காலகட்டங்களில் இருந்து தமிழ் சினிமாவில் நடித்து வருகிறார். இவர் 2015 ஆம் ஆண்டு இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ஐ திரைப்படத்தில் நடித்தார். இப்படம் 100 கோடிகள் வசூல் கடந்து வெற்றி பெற்றது.

தனுஷ் – அம்பிகாபதி என்கிற ராஞ்சனா (2013):
அம்பிகாபதி என்கிற ராஞ்சனா 2013 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தை ஆனந்த் ராய் இயக்கினார். இதில் தனுஷ் கதையின் நாயகனாக நடிதிருந்தார். இந்த திரைப்படம் வெளியாகி 100 கோடி வசூல் கடந்து வெற்றிபெற்றது. மேலும் இதுவே 100 கோடி வசூல் கடந்த இவரது முதல் திரைப்படமாகும்.

சிலம்பரசன் – மாநாடு (2021):
மாநாடு அண்மையில் வெளியான சிலம்பரசன் நடித்த இந்திய அரசியல் அதிரடி பரபரப்பூட்டும் தமிழ் திரைப்படம் ஆகும். மாநாடு திரைப்படம் 100 கோடிகள் வசூல் கடந்து இமாலய வெற்றி கண்டது. சிலம்பரசனின் முன்னணி நடிப்பில் வெளியாகி 100 கோடி வசூல் அள்ளிய திரைப்படம், மாநாடு.

சிவகார்த்திகேயன் – டாக்டர் (2021):
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் அறிமுகமாகி தற்போது ஒரு முன்னணி நடிகராக வளம் வருபவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் 2021 ஆம் ஆண்டு வெளியான டாக்டர் திரைப்படம் 100 கோடிகள் வசூல் அள்ளி இமாலய வெற்றி கண்டது. இப்படத்திற்கு பின் இவர் நடித்த டான் திரைப்படமும் 100 கோடிகள் வசூல் அள்ளியது என்பது குறிப்பிடத்தக்கது.

கார்த்தி – கைதி (2019):
தமிழ் சினிமாவில் முக்கிய நடிகர் ஆவார் கார்த்தி. இவர் நடித்த பொன்னியின் செல்வன் திரைப்படம் 100 கோடிகள் வசூல் கடந்து பிரமாண்ட வெற்றி பெற்றது. ஆனால் நாயகனாக இவர் நடித்த கைதி திரைப்படம் 100 கோடி வசூல் கடந்து பலர் மத்தியில் கொண்டாடப்பட்டது. தற்போது இந்த இரண்டாம் பாகம் கூடிய விரைவில் தொடங்கப்படும் என்று கூறப்படுகிறது.

விஷால் – மார்க் ஆண்டனி (2023):
நடிகர்கள் விஷால், எஸ்.ஜே. சூர்யா ஆகியோரது நடிப்பில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி ரிலீஸான திரைப்படம் மார்க் ஆண்டனி. படம் வெளியாகி ஐந்து நாட்களில் ரூ.62.11 கோடி வசூலை எட்டியுள்ளது. மேலும் பிளாக் பஸ்டர் வெற்றியைப் பெற்றுள்ளதால் இன்னும் ஓரிரு நாட்களில் இந்த படம் 100 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்துவிடும் என்று கூறப்படுகிறது. அப்படியானால் இதுவே விஷாலின் 100 கோடி வசூல் செய்த முதல் திரைப்படமாகும்.

Subscribe
Notify of
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x