Friday, May 17, 2024

Multibagger stock: ரூ.1500 டூ 2.5 லட்சம்.. இன்று பணத்தை அள்ளிக் கொடுத்த பங்கு இதுதான்!!

by Talks Tamil
0 comment 199 views

Multibagger stock: ரூ.1500 டூ 2.5 லட்சம்.. இன்று பணத்தை அள்ளிக் கொடுத்த பங்கு இதுதான்!!

ஃபீம் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் வாகன விளக்குகள் மற்றும் சிக்னலிங் கருவிகள் மற்றும் பின்புறக் காட்சி கண்ணாடிகள் ஆகியவற்றைத் தயாரிக்கும் முன்னணி உற்பத்தியாளர்களில் ஒன்றாகும்.

இந்நிறுவனத்தின் தயாரிப்பு போர்ட்ஃபோலியோ இரு சக்கர வாகனத்தில் லைட்டிங் மற்றும் சிக்னலிங் உபகரணங்கள் மற்றும் பின்புறக் காட்சி கண்ணாடிகள் ஆகியவற்றை கொண்டுள்ளது.

மேலும் நான்கு சக்கர வாகனப் பிரிவில், இது லைட்டிங் மற்றும் சிக்னலிங் கருவிகள் மற்றும் பின்புறக் காட்சி கண்ணாடிகளை உற்பத்தி செய்கிறது. இது தவிர, நிறுவனம் துணை விளக்குகள், எச்சரிக்கை முக்கோணங்கள், ரிஃப்ளெக்ஸ் பிரதிபலிப்பான்கள், எல்இடி விளக்குகள் போன்றவற்றையும் தயாரிக்கிறது.

இந்நிறுவனம் கடந்த இரண்டு ஆண்டுகளில் அதன் முதலீட்டாளர்களுக்கு பலமடங்கு வருமானத்தை வழங்கியுள்ளது. இந்நிறுவனத்தின் பங்கின் விலை சென்ற வருடம் 01 செப்டம்பர் 2020 அன்று ரூ 573.95லிருந்து 26 ஆகஸ்ட் 2022 அன்று ரூ 1498.85 ஆக உயர்ந்துள்ளது.

இது இரண்டு ஆண்டுகளில் 161% உயர்வாகும். நீங்கள் 2020 இல் அதாவது இரண்டு வருடங்களுக்கு முன் இந்நிறுவனத்தின் பங்குகளில் ரூ.1 லட்சம் முதலீடு செய்திருந்தால் இன்று ரூ.2.61 லட்சமாக மாறியிருக்கும்.

அதுமட்டுமின்றி இந்நிறுவனத்தின் நடப்பு நிதியாண்டின் முடிவடைந்த முதல் காலாண்டில் அதன் நிகர லாபமானது ரூ.441.98 கோடியாக (62%) உயர்ந்துள்ளது. மேலும் தரவுகளின்படி நிறுவனத்தின் பங்குகள் அடுத்து வரும் நாட்களில் ரூ.77 முதல் ரூ.84 வரை செல்லும் எனக் கூறிப்படுகிறது.

தற்சமயம் இந்நிறுவனத்தின் தற்போதைய பங்கின் விலை ரூ. 1516.75 ஆக உள்ளது. இனி வரும் காலங்களில் இந்நிறுவனத்தின் பங்கின் விலை ரூ.1700 வரை உயரக் கூடும் என்பதால் விலை குறைந்துள்ள இந்த மல்டிபேக்கர் பங்கை வாங்கி வருங்காலத்தில் அதிக லாபத்தைக் காணலாம்.

Subscribe
Notify of
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x