Sunday, April 28, 2024

Eye Health: கண் பார்வையை மேம்படுத்தும் சில எளிய பயிற்சிகள்..!

கண்பார்வை குறைபாடுகள் பிரச்சனைகள் என்பது முதியவர்களுக்கு இருக்கும் பிரச்சனையாக இருந்த காலம் போய் விட்டது. இன்றைய நவீன கால வாழ்க்கை முறை காரணமாக இப்போது இளைஞர்கள் மற்றும் குழந்தைகளிடையே காணப்படும் பொதுவான பிரச்சனையாகிவிட்டது.

by Talks Tamil
0 comment 15 views

மனிதர்களில் ஐம்புலன்களில் ஒன்று பார்வை. கண்பார்வை குறைபாடுகள் பிரச்சனைகள் என்பது முதியவர்களுக்கு இருக்கும் பிரச்சனையாக இருந்த காலம் போய் விட்டது. இன்றைய நவீன கால வாழ்க்கை முறை காரணமாக இப்போது இளைஞர்கள் மற்றும் குழந்தைகளிடையே காணப்படும் பொதுவான பிரச்சனையாகிவிட்டது.

பல காரணங்களால் கண்பார்வை குறைபாடு ஏற்படும். அதிக நேரம் கணிணி, மொபைல் அல்லது மின்னணு சாதனங்களில் நேரத்தை செலவிடுதல், ஊட்டத்சத்து குறைபாடு, நரம்பியல் பிரச்சனைகளும் ஆகியவை இதில் அடங்கும். தற்காலத்தில் பெரியவர்கள் மட்டுமின்றி குழந்தைகளும் மொபைல் போன்களை அதிகமாக பயன்படுத்துவதால் குழந்தைகளுக்கு கண் தொடர்பான பிரச்சனைகள் அதிகரித்து வருவதாக சுகாதார நிபுணர்களும் தெரிவித்துள்ளனர்.

கண்பார்வை பலவீனமாகாமல் தடுக்கவும், கண்பாரவையை கூர்மையாக்கவும், சில எளிய பயிற்சிகளை தினமும் செய்வது உதவும். கண்ணிற்கான இந்த பயிற்சிகள் பார்வையை (Eye Health) மேம்படுத்துவது மட்டுமின்றி கருவளையம் மற்றும் கண்களை சுற்றி ஏற்படும் சுருக்கங்களில் இருந்தும் நிவாரணம் அளிக்கும்.

கண்பார்வையை மேம்படுத்தும் பயிற்சிகள்

உடல்பயிற்சிகள் செய்வதன் மூலம் ஒரு நபர் ஆரோக்கியமாகவும் இருக்கலாம். பல கடுமையான நோய்களில் இருந்து நிவாரணம் பெறலாம். உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு பயிற்சிகள் உள்ளதை போலவே, கண்பார்வையை மேம்படுத்த சில பயிற்சிகள் உள்ளன. இவற்றை தினமும் செய்வதால், பார்வை மேம்படுத்தப்படுவதோடு மட்டுமல்லாமல், மூளையின் சில பகுதிகளுடன் இணைந்துள்ள கண் தசைகளை வலுப்படுத்தவும், தூண்டவும் உதவுகிறது.

கண்களுக்கான எளிதான பயிற்சிகள்

கண் சிமிட்டுதல்

கணிணியில் வேலை செய்யும் போது செய்யும் போது, பிற சமயங்களிலும், இடை இடையே சில நேரம் தொடர்ந்து கண் இமைகளை சிமிட்ட வேண்டும்.

கண்ணிற்கான 8 பயிற்சி

உங்களுக்கு முன்னால் 10 அடி தூரத்தில், தரையில் ஒரு புள்ளியைத் தேர்ந்தெடுத்து, படம் 8-ஐ கற்பனை செய்து அதன் மீது கவனம் செலுத்த வேண்டும். பின்னர் 30 வினாடிகள் கூர்ந்து கவனித்து, 8 எண் வடிவில் உங்கள் பார்வையை சுழற்ற வேண்டும்.

கண்களை உருட்டுதல்

கண்களை உருட்டுதல் என்பது கண் அழுத்தத்தை போக்க உதவும் சிறந்த பயிற்சியாகும். கண் அழுத்தத்திலிருந்து எளிதாக நிவாரணம் பெற, ஒருவர் உட்கார்ந்தவாறு , தலையை அசைக்காமல் கண்களை வலப்புறம், பின்னர் மேல் நோக்கியும் , பின்னர் இடது புறம் மற்றும் கீழே தரையில் பார்த்து என, இந்த பயிற்சியை செய்யலாம்.

20-20-20 என்னும் கண் தசைப்பயிற்சி

20-20-20 விதி என்பது ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கும் ஒரு இடைவெளி எடுத்து, உங்களிடமிருந்து இருபது அடி தூரத்தில் இருக்கும் ஒரு பொருளை தோராயமாக 20 வினாடிகளுக்குப் பார்க்கும் பயிற்சி. குறிப்பாக அதிக நேரம் கணினி, தொலைக்காட்சி, போன்றவற்றை பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு இந்த பயிற்சி மிகச் சிறந்தது என கண் நிபுணர்களால் பரிந்துரைக்கப்படுகிறது.

கண் சோர்வை போக்கும் பயிற்சி

உள்ளங்கையினால் கண்களை மூடிக் கோண்டு செய்யும் பயிற்சி கண் சோர்வைப் போக்க உதவும். முதலில், உங்கள் உள்ளங்கைகளை சேர்த்து தேய்த்து அவற்றை உங்கள் கண்களுக்கு மேல் வைத்துக் கொள்ள வேண்டும். இந்த பயிற்சியை ஒரு நாளைக்கு குறைந்தது ஐந்து நிமிடங்கள் செய்யலாம்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். Tamilan Talks இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)

Subscribe
Notify of
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x